Wednesday, 2 June 2021

*தெலுங்கானா மாநில உதய தினம்*

இன்று ஜூன் 2 நாட்டின் 29வது மாநிலமாக தெலுங்கானா மாநில உதய தினம். 


2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஆந்திரப் பிரதேச மாநில மறுசீரமைப்பு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது அதே ஆண்டு மார்ச் 01ஆம் நாள் குடியரசுத்தலைவர் கையொப்பத்துடன் அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்படி ஆந்திர மாநிலம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா எனும் இரு மாநிலங்களாக உதயமானது. இம்மாநிலத்தின் தலைநகராக ஹைதராபாத் உள்ளது. இம்மாநிலம் பரப்பளவில் 11வது  மாநிலமாகவும் மக்கள்தொகையில் 12 வது மாநிலமாக உள்ளது. மாநிலம் உதயமான திலிருந்து தற்போது வரை திரு. சந்திரசேகரராவ் அவர்கள் மாநில முதல்வராக உள்ளார் மாநில ஆளுநராக திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் செயலாற்றுகிறார்.இவர் இம் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் ஆவார்.
தற்போது கணக்கெடுப்பின் அடிப்படையில் 28 மாநிலங்கள்.

No comments:

Post a Comment

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு / Vellore - Pallikonda Uthira Ranganathar Temple History

🙏 வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் அமைந்துள்ள இக்கோவில் உத்திர ரங்கநாதர் கோவில் ...