Friday, 4 June 2021

*ஜூன் -3_உலக மிதிவண்டி தினம்*

*உலக மிதிவண்டி தினம்*

உலக மிதிவண்டி நாள் ஆண்டுதோறும் ஜூன் 3 நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

 2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது. 

உலக மிதிவண்டி நாளுக்கான ஐக்கிய நாடுகளின் தீர்மானம் "இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகளின் தனிச்சிறப்பு, நீண்டகாலப் பயன்பாடு, பல்திறன், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையான, மலிவான, நம்பகமான, சுத்தமான போக்குவரத்துக் கருவி" என்பதை அங்கீகரித்தது. 

அமெரிக்காவைச் சேர்ந்த லெசுச்செக் சிபிலிசுக்கி என்ற பேராசிரியர் தனது சமூகவியல் மாணவர்களுடன் இணைந்து உலக மிதிவண்டி நாளை ஐக்கிய நாடுகள் மூலம் பிரகடனப்படுத்த பரப்புரை செய்தார். 

இம்முயற்சிக்கு துருக்மெனிஸ்தான் உட்பட 56 நாடுகள் ஆதரவளிக்க முன்வந்தன. 

மிதிவண்டி மனித இனத்திற்குச் சொந்தமானதென்றும் சமூகத்திற்கு சேவையாற்றும் ஒரு சாதனம் என்பதே இப்பரப்புரையின் முக்கிய செய்தியாகும். 


உலக மிதிவண்டி நாள் தற்போது வகை நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதில் ஈடுபட்டு வருகிறது

No comments:

Post a Comment

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு / Vellore - Pallikonda Uthira Ranganathar Temple History

🙏 வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் அமைந்துள்ள இக்கோவில் உத்திர ரங்கநாதர் கோவில் ...