Thursday, 25 January 2024

B.Ed. Vs D.T.Ed Judgement

B.Ed., தகுதி பெற்ற ஆசிரியர்கள் 1 முதல் 8 வரை கற்பிக்க நியமனம் செய்ய தகுதியற்றவர்கள் - உச்ச நீதிமன்ற தீர்ப்பு.

B.Ed., தகுதி பெற்ற ஆசிரியர்கள் 1 முதல் 8 வரை கற்பிக்க நியமனம் செய்ய தகுதியற்றவர்கள். அவர்களை உயர்நிலை (Secondary) மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே நியமனம் செய்ய தகுதியானவர்கள்! உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!

Supreme court judgement - Download here..
👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿

Tuesday, 23 January 2024

எங்கள் ஊர் வேலூர்/ Vellore

💖 எங்கள் ஊர் வேலூர் 💖

*வெயிலுக்கும் ஜெயிலுக்கும்  மட்டும்  தானா பெயர்பெற்றது வேலூர்?*

*பழைய வேலூர்(ஒருங்கிணைந்த) மாவட்டத்தைப்  பற்றிய சுவாரசியமான பல விஷயங்கள்* 

*இந்திய ராணுவத்திற்கு தமிழ் நாட்டில் இருந்து அதிக இராணுவ வீரர்கள் தருகின்ற எங்கள் வேலூரின் வீரம் மிக்க இராணுவப்பேட்டை என்கின்ற கமாவான்பேட்டை*

*அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து "சிப்பாய் புரட்சி "செய்த ஊர், இந்தியாவின் முதல் சுதிந்திர போர்*

*அறுபத்து நான்காவது நாயன்மார் என அழைக்கப்பட்ட "திருமுருக கிருபானந்த வாரியார் "பிறந்த ஊர் வேலூர் காங்கேயநல்லூர்.*

*தந்தை பெரியாரின் துணைவியார் மணியம்மையாரின் சொந்த ஊர்*

*தெற்காசியாவிலேயே பெரிய மருத்துவமனையான சிஎம்சி உள்ளதே பெருமை*

*சுதந்திர இந்தியாவின் டெல்லி செங்கோட்டையில் ஏற்றிய முதல் தேசியக்கொடியை தயாரித்து தந்த ஊர் குடியாத்தம்.*

*கர்மவீரர் காமராஜரை சொந்த மண் விருதுநகர் தோற்கடித்தாலும், அவரை முதன்முதலில் வெற்றி பெற வைத்து முதல் அமைச்சராக அழகு பார்த்த குடியாத்தம்*

*விக்டோரியா மகாராணிக்கு பிரசவம் பார்த்த  ஆற்காடு லட்சுமணசாமி முதலியார்.*

*தமிழ்நாட்டின் முதல் நகராட்சியாக அறிவிக்கப்பட்ட வாலாஜாப்பேட்டை.*

*இந்தியாவின் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் படித்த வேலூர் ஊரிசு கல்லூரி.*

*புகழ்பெற்ற ராஜாளி கப்பல்படை விமானதளம் உள்ள அரக்கோணம்.*

*ஆசியாவின் மிகப்பெரிய வான் தொலைநோக்கி உள்ள ஆலங்காயம் அடுத்த காவலுர்.*

*திருக்குறள் தெளிவுரை தந்த டாக்டர்.மு.வரதராசனாரை தந்த வாலாஜாப்பேட்டை அடுத்த வேலம்*

*நடிகர்திலகம் சிவாஜிகணேசனை தான் தயாரித்த "பராசக்தி "படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய வேலூர் நேஷனல் திரைஅரங்கத்தின் பெருமாள் முதலியார் பிறந்த பூட்டுதாக்கு.*

*தென் இந்தியாவின் முதல் திரை படத்தை தயாரித்து இயக்கிய வேலூர் நடராஜ், தமிழ் திரைப்படத்தின் தந்தை*

*சிந்தனை செல்வர் சி.பி.சிற்றரசுவை தந்த வேலூர்.*

*"பாட்டுப்பாடவா பார்த்து பேசவா "புகழ் ஏ.எம்.ராஜா பிறந்த கிளித்தான் பட்டறை.*

*பாடகி வாணி ஜெயராம் சொந்த ஊர் வேலூர்.*

*டால்மியாபுரத்தை கல்லக்குடியாக்கும் போராட்டத்தில் கலைஞர்.மு.கருணாநிதியோடு ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த ஆலாங்காயம் அடுத்த முல்லை சத்தியின் ஊர்*.

*மனுநீதி நாள் திட்டத்தை அறிமுகப்படுத்திய பத்மநாபன். IAS பிறந்த ராணிப்பேட்டை அடுத்த பிஞ்சி.*

*சென்னை வானொலியில் "இன்று ஒரு தகவல் "நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திய வானொலி நிலைய இயக்குநர் கோபால் பிறந்த ஆற்காடு.*

*தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் நடிகை "குமாரி சச்சு "வை தந்த ஆற்காடு அடுத்த புதுப்பாடி.*

*தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயலாளர் "தேனிசை தென்றல் "தேவாவின் சொந்த ஊர் ஆற்காடு அடுத்த மாங்காடு.*

*இரண்டு "ஆஸ்கார் அவார்டு "களை அள்ளி மூன்றாவாது ஆஸ்கார் அவார்டுக்கு "பீலே "படத்தின் மூலம் அஸ்திவாரம் போட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை  சேகரை தந்த குடியாத்தம்.*

*முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் அவர்கள் பிறந்த வாலாஜா செங்காடு.*

*சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத்துக்கும் மாமியார் ஊர்*

*சென்னையின் புகழ்பெற்ற மகளிர் கல்லுரி எத்திராஜ் கல்லுரின் நிறுவனர் வேலூர் எத்திராஜ்*

*இந்தியா அளவில் அதிக ரயில்கள் நிற்கும் ரயில் நிலையம் வேலூர் மாநகரின் காட்பாடி ரயில் நிலையம், நாள் தோறும் 300 ரயில்கள் நிற்கின்றது*

*300 ரயில்கள் நிற்பதற்கு காரணம், வேலூருக்கு நாள் தோறும் 18,000 முதல் 20,000 மக்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தில் இருந்து வருகின்றனர்*

*வட தமிழ் நாட்டில் சென்னைக்கு அடுத்து இரண்டாவது மிக பெரிய நகரம் வேலூர்*

*சென்னைக்கு நிகரான மருத்துவ சுற்றுலா நகரம் வேலூர்*

*முன்னாள் தமிழக முதல்வர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா பெரும்பாலான ஆடைகள் தந்து அழகு பார்த்த எம்.ஜி.நாயுடு பிறந்த ஆம்பூர் (Naidu Hall founder)*

*தேமுதிக  தலைவரான விஜயகாந்த் மனைவி பிறந்த குடியாத்தம் அடுத்த செம்பேடு*

*சந்தனம் விளையும் ஜவ்வாது மலை*

*சாப்பிட்டு ருசிக்க ஆற்காடு மற்றும் ஆம்பூர் பிரியாணி.*

*இந்தியாவின் இரண்டாவது மிக பழமையான அரபிக் கல்லுரி உள்ள ஊர் வேலூர்*

*தென் இந்தியாவின் மதர் மதராசா உள்ள ஊர் வேலூர்*

*தென் இந்தியாவின் முதல் தங்க கோயில் உள்ள ஊர் வேலூர்*

*இந்தியா மற்றும் உலகளவில்  பெரு மாநகராங்களுக்கு நிகராக சிறந்த மருத்துவமனை, மருத்துவ கல்லுரி மற்றும் பொறியாளர் பல்கலைக்கழகம் பெற்ற ஒரே சிறிய மாநகரம் வேலூர்*

*இந்தியாவின் டாப் 10 மருத்துவ நகரங்களில் ஒன்று வேலூர்*

*வேலூரின் வீரம் மற்றும் வரலாற்றை பாராட்டி இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஸ்கோட்லண்ட் நாட்டில் வேலூரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது, இந்த அங்கீகாரம் இந்தியாவில் வேறு எந்த நகரத்துக்கும் இல்லை*

*தமிழ் நாட்டின் டாப் 6 GDPயில் வேலூர் மாவட்டம்மும் ஒன்று*

Tuesday, 7 November 2023

NEW PAN CARD APPLY / பான் கார்ட் தொலைந்துவிட்டதா? - 50 ரூபாயில் ஒரிஜினலே வாங்க முடியும்.

பான் கார்ட் தொலைந்துவிட்டதா? - 50 ரூபாயில் ஒரிஜினலே வாங்க முடியும்.

உங்கள் பான் கார்டு சேதமானால் அல்லது தொலைந்துவிட்டால் சில எளிய நடைமுறைகளைப் பின்பற்றி பான் கார்டை வீட்டிலேயே டெலிவரி பெற்று கொள்ளலாம்.

இதற்கு ஐம்பது ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கான அப்பிளிக்கேஷன் ப்ராசஸும் எளிமையானது தான்.

இப்படி தொலையும் போது புதிய பான் கார்டு அச்சிட பல நேரங்களில் நாம் உள்ளூர் கடைக்கு செல்லும்போது, அதற்கு ரூ.100 முதல் ரூ.200 வரை வசூலிக்கிறார்கள்.

ஆனால் ஆன்லைனில் மத்திய அரசின் இணையதளத்தில் விண்ணப்பித்தால் குறைந்த செலவில் வீட்டில் இருந்தபடியே புதிய ஒரிஜினல் பான் கார்டைப் பெறலாம்.

பான் கார்டை மீண்டும் அச்சிடுவதற்கான எளிதான செயல்முறை:

முதலில் நீங்கள் NSDL (நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்)
https://nsdl.co.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்

அதில் இப்போது Reprint Pan Card என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். உள்ளே நீங்கள் உங்கள் பான் கார்டு எண், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா குறியீடு போன்ற தகவல்களை உள்ளிட வேண்டும்.

அதன் பின்னர் நீங்கள் விதிமுறை மற்றும் நிபந்தனைகளைக் காண்பீர்கள். 

அவற்றை ஏற்றுக்கொண்டால், நீங்கள் சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது உங்கள் முன் ஒரு புதிய பக்கம் திறக்கும். 

இதில் பான் கார்டு தொடர்பான அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட வேண்டும். அதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் செய்துகொள்ளலாம்.

அதன் பின்னர் உங்கள் அப்ளிகேஷனை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கும்போது உங்களுக்கு OTP கோரிக்கை வரும். அதை கிளிக் செய்யவும்.

நீங்கள் கிளிக் செய்தவுடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். 
OTP ஐ உள்ளிட்டு Validate என்பதைக் கிளிக் செய்யவும்.

அதன் பின்னர் கட்டணத்திற்கான பக்கம் திறக்கும். 

அதில் உங்கள் விருப்பமான கட்டண வழிமுறையைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் ஐம்பது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

கார்ட், UPI அல்லது நெட் பேங்கிங் மூலம் கட்டணம் செலுத்தலாம்.

 பணம் செலுத்திய பின்னரே விண்ணப்பம் வெற்றிபெற்றதாக செய்தி மற்றும் மெயில் வரும். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு 10 முதல் 15 நாட்களுக்குள் ஒரிஜினல் பான் கார்ட் உங்கள் வீடுவந்து சேரும்.

Sunday, 17 September 2023

*INDIAN ECONOMY VERY IMPORTANT ONE LINER NOTES*PART-1 / இந்தியப் பொருளாதாரம்

*விநாயகர் சதுர்த்தி சிறப்பு சலுகை!!*

 *100% வெற்றி நிச்சயம்*

*தொடர்புக்கு*
*ஜெய்  ஐஏஎஸ் அகாடமி, ஆவடி* 





*INDIAN ECONOMY VERY IMPORTANT ONE LINER NOTES*
PART-1 

இந்தியப் பொருளாதாரம் 

1.     கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி _______.
கோலார்

2.     ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவிடப்படுவதைக் குறிப்பிடுவது ________.
GDP

3.     கீழ்க்கண்டவற்றுள் எது முன்னேற்றம் அடைந்த நாடு?
பிரான்ஸ்

4.     வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியாவின் இடம் ________.
ஏழு

5.     கலப்புப்பொருளாதாரம் என்பது _________.
பொது மற்றும் தனியார் துறைகள் சேர்ந்து செயல்படுவது

6.     இந்தியப் பொருளாதாரம் __________ காரணமாக வலிமையின்மையாக இருக்கிறது
பொருளாதாரச் சமநிலையின்மை

7.     மக்கள் தொகையின் இயல்புகளைப் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வு _______
மக்கள் தொகையியல்

8.     மக்கள் தொகையில் 1961ஆம் வருடம் ________ எனப்படுகிறது.
மக்கள் தொகை வெடிப்பு வருடம்

9.     எந்த ஆண்டில் இந்திய மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது?
2001

10.  ஆயிரம் மக்களுக்கு பிறப்பவர் எண்ணிக்கை என்பது
கச்சா பிறப்பு வீதம்

11.  மக்கள் தொகை அடர்த்திப்பது
மக்கள் தொகை குறிப்பிட்ட நில எலவு

12.  தேசியவனர்ச்சிக் கழகத்தை அறிமுகப்படுத்தியவர் பார்?
ஜவஹர்லால் நேரு

13.  காந்தியப் பொருளாதாரச் சிந்தனைகளை தொடர்ந்து வலியுறுத்தியவர் யார்?
J.C. குமரப்பா

14.  ஜனநாயக சமதர்மத்தைக் கொண்டுவந்தவர்
ஜவஹர்லால் நேரு

15.  E.R அம்பேத்கர் இந்தியப் பொருளாதாரப் பிரச்சனைகளை இதன் அடிப்படையில் ஆராய்கிறார்.
ஆ) இந்திய ரூபாயின் சிக்கல்கள்

16.  இந்த கொள்கையின் அடிப்படையில் காந்தியப் பொருளாதாரம் இயங்குகிறது.
ஒழுக்க நெறி அடிப்படை

17.  V.K.R.V இரால் இவரின் மாயவராக இருந்தார்
J.M.மீன்ஸ்

18.  பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமர்த்தியா சென் பெற்ற ஆண்டு
1995

19.  திருவள்ளுவரின் பொருளாதாரக் கருத்துகள் குறிப்பாகக் கூறுவது.
செல்வம், வறுமை சமுதாயத்தின் சாயம்,வேளாண்மை

20.  இந்தியாவின் கள்ளிக்கோட்டைக்கு (CALICUT) வாஸ்கோடாகாமா வருகை புரிந்த வருடம்
1498

21.  1614 இல் தாமஸ் ரோ யாரிடம் அனுமதி பெறுவதில் வெற்றி பெற்றார்?
ஜஹாங்கீர்

22.  இரயத்வாரிமுதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது?
தமிழ்நாடு

23.  முதலாம் உலகப்போர் தொடங்கப்பட்ட ஆண்டு _________.
1914

24.  இந்திய அரசாங்கம் தனது முதல் தொழிற்கொள்கையை வெளியிட்ட ஆண்டு ________.
1948

25.  1955ன் தொழிற்கொன்யைான் நோக்கம் ________.
பெரிய நிறுவனங்களை முன்னேற்றுவது

26.  1993ல் முன் பதிவு நீக்கப்பட்ட தொழில்துறை
செம்பு மற்றும் சிங்க் கரங்கத் தொழில்

27.  இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தை என்றழைக்கப்படுபவர்
M.S.சுவாமிநாதன்

28.  1969-தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை
14

29.  வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் ______.
 சமூக நலம்

30.  திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ___________.
1950

31.  முதலாம் ஐந்தாண்டுத்திட்டத்தின் முதன்மையான நோக்கம் _________.
வேளாண்மை

32.  பத்தாம் சந்தாண்டுத் திட்ட காலம்
2002-2007

33.  2016ஆம் ஆண்டுக்கான மனித வளர்ச்சி அறிக்கையின் படி 188 நாடுகளில் இந்தியாவின் தரம் ______.
131

34.  வருடாந்திரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு __________.
1990- 1992

35.  இந்தியாவின் மிகப்பழமையான பெரிய அளவிலான தொழில் ___________.
பருத்தி

36.  மனித மேம்பாட்டுக் குறியீட்டெண்னை உருவாக்கியவர் __________.
அமர்த்தியா குமார் சென்

37.  பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் __________.
விரைவான உள்ளடக்கிய மற்றும் நிலையான வனரிச்சி

38.  வாழ்க்காதரக் குறியீட்டெண்மைகா உருவாக்கியவர் __________.
D.மோரிஸ்

39.  கீழ்க்கண்டவற்றுள் எது தனியார் மயமாதலைக் குறிக்கும்.
முதலீட்டை திரும்பப் பெறுதல்
தேசியமயம் நீக்கல்
தொடர் நிறுவனமாக்கல்

40.  இன்றைய நாட்களில் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாடும்________ இருக்க வேண்டும்.
ஒன்றையொன்று சார்ந்து

41.  LPG க்கு எதிரான வாதம்.
மக்கள் மற்றும் மண்டலங்களிடையே ஏற்றத்தாழ்வு

42.  FDI என்பதன் விரிவாக்கம்
வெளிநாட்டு நேரடி முதலீடு

43.  உலக அளவில் இந்தியா உற்பத்தியில் மிகப் பெரிய உற்பத்தியாளராக விளங்குகின்றது.
பழங்கள்

44.  வெளிநாட்டு முதலீடு உள்ளடக்கியது.
FDI மற்றும் FPI

45.  சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கை __________வெளியிடப்பட்டது.
ஏப்ரல் 2000ல்

46.  விவசாய உற்பத்தி அங்காடிக் குழு _________ ஆகும்.
சட்டபூர்வமான குழு

47.  பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது ________.
பல முனை வரி மற்றும் அடுக்கு விளைவுகளற்றது.

48.  புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை ________ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
2015

49.  பாண்டங்கள் மற்றும் பணிகள் வரி சட்டம் _________ அமல்படுத்தப்பட்டது.
2017 ஜுலை 1ந்தேதி

50.  புதிய பொருளாதாரக்கொள்கைகீழ்கண்டவற்றுன் எதனை உள்ளடக்கியது?
வெளிநாட்டு முதலீடு,வெளிநாட்டு தொழில்நுட்பம்,வெளிநாட்டு வர்த்தகம்

51.  ______ம் ஆண்டு மிதிதொடர்பான நரசிம்மம் குழுவின் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
1991

52.  உழவர் கடன் அட்டையைப் பயன்படுத்தி விவசாயிகள் எந்த வங்கியில் கட பொ முடியும்?
கூட்டறவு வங்கிகளில்,பிராந்திய கிராமப்புற வங்கிகளில்,பொதுத்துறை வங்கிகளில்

53.  வர்த்தக கொள்கை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ராஜா செல்லையா குழுவின் பரிந்துரைப்படி அதிகபட்ச இறக்குமதி சுங்கத் தீர்வை ________ ஆகும்.
10%

54.  இந்தியாவில் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் __________ ஏற்படுத்தப்பட்டது.
காண்ட்லா

55.  ராஜ் கிருஷ்ணாவால் வார்க்கப்பட்ட ‘இந்து வளர்ச்சி வீதம்’ என்பது ________ குறிக்கும்.
குறைவான பொருளாதார வளர்ச்சியை

56.  GSTயில் அதிகபட்ச வரிவிதிப்பு ____ஆகும். (ஜீலை 1, 2017 நாளின்படி)
28%

57.  தொழில் உடைமையை பொதுத்துறையிலிருந்து தனியார் துறைக்கு மாற்றுவது_______எனப்படும்.
தனியார் மயமாக்கல்

58.  எது ஊரக பகுதியின் அடிப்படை அலகாகக் கருதப்படுவது _________.
பஞ்சாயத்து

59.  எது ஊரக பகுதியை கண்டறியும் பண்பு __________?
குறைந்த மக்கள் தொகை அடர்த்தி

60.  ஊரக பொருளாதாரத்தின் முக்கிய இயல்பு ___________?
வேளாண்மையைச் சார்ந்திருத்தல்

61.  2011 கணக்கெடுப்பின் மொத்த மக்கள் தொகையில் ஊரகத்தில் வாழும் மக்கள் தொகை சதவீதம் என்ன ?
60

62.  தேவைக்கு அதிகமாக வேலையில் ஈடுபடும் மக்களின் நிலைமை ________.
மறைமுக வேலையின்மை

63.  இரண்டு முற்றிலும் வேறுபட்ட தன்மைகளை தொடர்பு படுத்தி குறிப்பது ____________.
இரட்டை தன்மை

64.  மரகப்பகுதி, மார்க மக்கள் மற்றும் ஊரக வாழ்க்கையை மேம்படுத்துதல் என்பது _________.
மாரக மேம்பாடு

65.  ஊரகப் பொருளாதாரத்தில் வேளாண்மை பிரச்சனைக்குத் தொடர்புடையதாக கருதப்படுவது
சிறிய அளவு நில உடைமை

66.  ஊரக பகுதியில் ஒரு மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரி அளவு __________.
2400

67.  மறைத்திருக்கும் வேலையின்மைக்கு மற்றொரு பெயர் என்ன?
மறைமுக

68.  குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலைவாய்ப்புப் பெறுவதை எப்படிக் கருதுவது?
பருவகால வேலைவாய்ப்பு

69.  மாரக தொழிற்சாலைக்கான உதாரணம் தருக
பாய் தயாரிக்கும் தொழில்

70.  இந்தியாவில் உள்ள ஊரக குடும்பங்களில் கடனானிகளின் பங்கு எவ்வளவு?
நாக்கில் மூன்று பங்கு

71.  இந்தியாவில் ஊரக கடலுக்கு காரணமாக கருதப்படுவது
ஏழ்மை

72.  எந்த வருடம் வட்டார ஊரக வங்கி பயன்பாட்டிற்கு வங்கர்
1975

73.  MUDRA வங்கி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக
2015

74.  தேசிய ரக சுகாதாரப்பணி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக.
2005

75.  மரகச் சாலையின் பயன்பாடாக கருதப்படுவது.
ஊரக அங்காடி வசதி,வேலைவாய்ப்பு,,ஊரக வளர்ச்சி

76.  இந்திய விவசாயி கடனாளியாக பிறந்து, கடனாளியாக வாழ்ந்து, கடவாரியாக இருந்து, கடனையே சந்ததிக்கு விட்டுச் செல்கிறான்’ இச்சொற்றொடரைக் கூறியவர் யார்?
சர் மால்கம் டார்லிங்

77.  சுகாதாரக் குறியீட்டில் தமிழ்நாடு எந்த மாநிலத்திற்கு மேலாக உள்ளது?
குஜராத்

78.  பாலின விகிதத்தில் தமிழ்நாட்டின் தரம்
மூன்றாவது

79.  தமிழ்நாடு எதில் வளமானது?
மனித வளம்

80.  நீர்பாசனத்தின் முக்கிய ஆதாரம்
கிணறுகள்

81.  பின்னலாடை உற்பத்தி அதிகம் உள்ள இடம்
திருப்பூர்

82.  தமிழ்நாட்டின் நுழைவாயில் –தூத்துக்குடி

83.  எஃகு நகரம் – சேலம்

84.  பம்ப் நகரம் – கோயம்புத்தூர்

85.  கீழுள்ள நகரங்களில் எதில் சர்வதேச விமான நிலையம் இல்லை ?
தூத்துக்குடி

86.  பயிர் உற்பத்தியில் எந்தப் பயிரைத் தவிர தமிழ்நாடு முன்னணியில் உள்ளது?
ஏலக்காய்

87.  எந்த பயிர் உற்பத்திக்காக அதிகப் பரப்பு நிலம் பயன்படுத்தப்படுகிறது?
நெல்

88.  எழுத்தறிவு வீதத்தில் தமிழ்நாட்டின் தரம்
எட்டு

89.  குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டில் தமிழ்நாட்டின் தரம்
 1

90.  தமிழ்நாட்டின் எம்மாவட்டத்தில் பாலின விகிதம் அதிகமாக உள்ளது?
நீலகிரி

91.  எம்மாவட்டத்தில் குழந்தைப் பாலின விகிதம் குறைவாகவுள்ளது?
அரியலூர்

92.  எந்த யூனியன் பிரதேசத்தில் பாலின விகிதம் அதிகமாகவுள்ளது?
பாண்டிச்சேரி

93.  தமிழ்நாட்டு உள் நாட்டு உற்பத்தியில் அதிக பங்கு வகிப்பது?
பணிகள்

94.  மனித வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாட்டின் தரம்
 7

95.  SPIC அமைந்துள்ள இடம்
தூத்துக்குடி

96.  TICEடன் பகுதி
உயிரி பூங்கா 

97.  சிமெண்ட உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் எந்த நிலையில் உள்ளது?
மூன்றாம்

98.  தென்னக இரயில்வேயின் தலைமையிடம்
சென்னை

99.  மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்.
ஆல்பிரட்மார்ஷல்

Thursday, 7 September 2023

CBSE After 9th or 10th to Higher Secondary

*CBSE ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு..*





*உங்க ஸ்கூல்ல LOC பதிவு பண்ண ஆரம்பிச்ச கூப்பிடுவாங்க.*

*அப்போ MATHS  பாடத்தில்  STANDARD MATHEMATICS  [OR] BASIC MATHEMATICS  என்று இரண்டு  OPTION  தந்து ரிஜிஸ்டர் பண்ணிக்க சொல்லுவாங்க.*

*BASIC MATHS  எடுத்தா +1ல கணக்கு , அறிவியல் பாடப்பிரிவை*
 *[MATHS, PHYSICS, CHEMISTRY GROUP] எடுக்க முடியாது.*





*இதுவும் ஒரு வகையிலான FILTRATION  தான்.*

*நல்லா யோசிச்சு பசங்க கிட்ட பேசி முடிவு பண்ணுங்க..*

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

Thursday, 31 August 2023

ABC JUICE / ABC ஜூஸ் தெரியுமா? என்ன பயன்?

ABC ஜூஸ் தெரியுமா? என்ன பயன்? 





ஆப்பிள் 1 
சிறிய பீட்ரூட் 1 
கேரட் 2

ஆகியவற்றை சின்ன துண்டுகளாக நறுக்கி அரைத்து ஜூஸ் ஆக்கிக்கொள்ளவும். வடிகட்டத் தேவையில்லை, வேண்டுமானால் எலுமிச்சைச்சாறு, புதினா சேர்த்துக்கலாம். 

ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின்கள்
A, B1, B2, B3, B4, B5, B6, B9, C, E, K, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் என ஏகப்பட்ட சத்துகள் இருக்கின்றன. 

மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் இந்த ஏபிசி ஜூஸ் பெரிதும் உதவுகிறது.

Wednesday, 23 August 2023

*தமிழ்நாடு காவல்துறை பற்றி தெரிந்ததும்....தெரியாததும்…..*

*தமிழ்நாடு காவல்துறை பற்றி தெரிந்ததும்....தெரியாததும்…..*

*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல்
நிலையங்கள் – 1452.

*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த மகளிர்
காவல் நிலையங்கள் – 198.

*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த காவல்
பரப்பளவு – 130058 ச.கி.மீ.

*] மொத்த காவல் பணியாளர்கள் –
113602..

*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல்
மண்டலங்கள் – 4.

தமிழ்நாடு காவல்துறை வடக்கு,
மைய, மேற்கு மற்றும் தெற்கு என
நான்கு காவல் மண்டலங்களாகப்
பிரிக்கப்பட்டுள்ளது.

இவை ஒவ்வொன்றும் ஒரு காவல்
பொது ஆய்வாளர் (Inspector General of
Police) தலைமையில் இயங்குகின்றன.

*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த
ஆணையரகம் – 6.

தமிழகத்தில் உள்ள 6 பெரிய
நகரங்களான சென்னை, மதுரை,
கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி,
சேலம் மற்றும்
திருநெல்வேலி ஆகிய நகரங்கள்
காவல்துறை காவல் ஆணையாளர்
(Commissioner of Police) தலைமையில்
இயங்குகின்றது.

*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல்
மாவட்டங்கள் – 33 (2 ரயில்வே உட்பட).

தமிழகம் 33 காவல் மாவட்டங்களாகப்
பிரிக்கப்பட்டுள்ளது. இந்த
மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர்
(Superintendent of Police) தலைமையில்
இயங்குகின்றன.

இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு
ஒரு துணை காவல்
பொது ஆய்வாளர் (Deputy Inspector
General of Police)
மேற்பார்வை செய்கிறார்.

*] போலீஸ் துணை பிரிவுகள் – 247.

*] போக்குவரத்துக் காவல்
நிலையங்கள் – 218.

*] திருச்சி ரேஞ்ச் ரயில்வே போலீஸ்
நிலையங்கள் – 20.

*] சென்னை ரேஞ்ச் ரயில்வே போலீஸ்
நிலையங்கள் – 21.

*] தமிழ்நாட்டில் 632 மக்களுக்கு 1
காவலர் என்ற அடிப்படையில்
காவலர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில்
சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும்,
குற்றங்களைத் தடுக்கவும்,
தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின்
கீழ், ஒரு தலைவரைக் (DGP)
கொண்டு இயங்கும் அரசு சார்ந்த
அமைப்பாகும்.

 இது இந்தியாவில்
ஐந்தாவது பெரிய
காவல்துறை ஆகும்.

முதன் முதலில் இது மதராசு நகரக்
காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City
Police Act 1888) இற்கு ஏற்பத்
துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு
ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12
இலும், Governor-General -ன் ஒப்புதல் 1888,
சூன் 26 இலும் வழங்கப்பட்டது.

தொடக்கத்தில் ஒரு ஆணையாளரைக்
கொண்டு உருவாக்கப்பட்ட
இது சென்னை மாநகர
எல்லை முழுமைக்குமாகத்தான் தன்
செயல் எல்லையைக்
கொண்டிருந்தது.

*] காவல் துறையின்
பல்வேறு பிரிவுகள்....

1] சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law
and Order).

2] ஆயுதம்
அல்லது தமிழ்நாடு சிறப்புப்
படை (Armed Police or Tamil Nadu Special
Police).

3] பொதுமக்கள் பாதுகாப்பு (Civil
Defence and Home Guards).

4] பொதுமக்கள் வழங்கல் மற்றும்
உளவுத்துறை (Civil Supplies, CID).

5] கடலோர காவல் துறை (Coastal
Security Group).

6] குற்றப் புலனாய்வு மற்றும்
உளவுத்துறை (Crime Branch, CID).

7] பொருளாதார சிறப்புப்
பிரிவு (Economic Offences Wing).

8] செயல்பாடு – தமிழக
ஆயுதப்படை மற்றும்
ஆயுதப்படை பள்ளி (Operations – T.N.
Commando Force & Commando School).

9] இரயில்வே காவல்துறை (Railways)

10] சிறப்புப் பிரிவு – உளவு மற்றும்
பாதுகாப்பு (Special Branch , CID including
Security).

11] குற்றப் பிரிவு (நுண்ணறிவு)
(Co-Intelligence)

12] மதுவிலக்கு அமல்
பிரிவு (Prohibition Enforcement Wing).

13] குடிமையியல் பாதுகாப்புப்
பிரிவு (Protection and Civil Rights).

14] பயிற்சிப் பிரிவு (Training).

15] சமூக நீதி மற்றும் மனித
உரிமைகள் (Social Justice and Human
Rights).

16] போக்குவரத்துக் காவல்
பிரிவு (Traffic).

பயிற்சி நிறுவனங்கள்:

அ) போலீஸ் அகாடமி – 1.

ஆ) Regl. போலீஸ் கம்ப்யூட்டர்
பயிற்சி மையம். – 1.

இ) போலீஸ் பயிற்சி பள்ளி (நிரந்தரம்)
– 8 (தூத்துக்குடி / திருச்சி /
வேலூர் / கோயம்புத்தூர் / ஆவடி /
விழுப்புரம் / சேலம் / மதுரை).

ஈ) போலீஸ் பயிற்சி கல்லூரி –
அசோக் நகர்.

தமிழ்நாடு காவல் துறையில்
பணி புரிபவர்களின் ஊதிய விவரம்:

1] காவல்துறைத்
தலைமை இயக்குனர் (DGP) – 80,000.

2] காவல்துறைத்
துணை தலைமை இயக்குனர் (ADGP) –
67000 – 79000.

3] காவல்துறை பொது ஆய்வாளர்
( Inspector General of Police ) – 37400- 67000 +
10000.

4]காவல்துறை துணை பொது ஆய்வாளர்
( Deputy Inspector General of Police ) – 37400 –
67000 + 8900.

5] காவல்துறை ஆணையர்
( Commissioners of Police ) – 37400 – 67000 +
12000.

6] காவல்துறைக் கண்காணிப்பாளர்,
ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட ( SPs, IPS
including Asst. Inspector, Jt. SP, Addl. SP ) –
15600 – 39100 + 6600.

7] காவல்துறை உதவிக்
கண்காணிப்பாளர் (ASP),
காவல்துறை துணைக்
கண்காணிப்பாளர் (DSP) – 15600 – 39100 +
5400.

8] காவல்துறைக் கண்காணிப்பாளர்
(SP) – 15600 – 39100 + 7600.

9] ஆய்வாளர் (Inspector) – 9300 – 34800 +
4900.

10] உதவி ஆய்வாளர் (சப் – இன்ஸ்பெக்டர்
– பெண் அதிகாரிகள் உட்பட ) – 9300 –
34800 + 4800.

11] தலைமைக் காவலர் (Head Constable
including Women HC ) 5200 – 20200 + 2800.

12] முதல்நிலைக் காவலர் (PC-I) ( Police
Constable Gr-I incl. Women PC ) – 5200 – 20200
+ 2400.

13] இரண்டாம்நிலைக் காவலர் (PC-II)
( Police Constable Gr-II including women ) – 5200
– 20200 + 1900.

தமிழ்நாடு காவல்
துறை பதவி மற்றும் குறியீடுகள் :
dress

உலகின் 10 மிகப்பெரிய போலீஸ்
படைகள்:
1. சீனா – 1,600,000 போலீஸ்
அதிகாரிகள்.

2. இந்தியா – 1.585.353 போலீஸ்
அதிகாரிகள்.

3. அமெரிக்கா: 794.300 போலீஸ்
அதிகாரிகள்.

4. ரஷ்யா – 782001 போலீஸ்
அதிகாரிகள்.

5. இந்தோனேஷியா: 579.000 போலீஸ் அதிகாரிகள்.

6. மெக்ஸிக்கோ: 544.000 போலீஸ்
அதிகாரிகள்

7. பிரேசில்: 478.001 போலீஸ்
அதிகாரிகள்

8. துருக்கி: 412.624 போலீஸ்
அதிகாரிகள்

9. நைஜீரியா: 371.800 போலீஸ்
அதிகாரிகள்

10. பாக்கிஸ்தான்: 354.221 போலீஸ்
அதிகாரிகள்.

கடலோர பாதுகாப்பு காவல்
துறையினர்....

] [13591 மீன் பிடிக்கும் கிராமங்கள்
அடங்கிய கடலோர மாவட்டங்கள் ].

*] 6 மண்டல அலுவலகங்கள்....
 (சென்னை /
நாகை / வேதாரண்யம் /
புதுக்கோட்டை / ராமநாதபுரம் /
தூத்துக்குடி).

கடலோர பாதுகாப்பு காவல்
குழு உபயோகிக்கும் வாகனங்கள்..

- 12 படகுகள் (12 டன்) – 12 படகுகள் (5 டன்).

– 8 திடமான ஊதப்பட்ட படகுகள் – 6 ஜெமினி படகுகள்.

 12 அனைத்து நிலப்பரப்பு ஜீப்புகள்,

12 அனைத்து நிலப்பரப்பு இருசக்கர வாகனங்கள்.

– 20 படகுகள், 30 நான்கு சக்கர
வாகனங்கள், 60 இரு சக்கர வாகனங்கள்.

தமிழ்நாடு காவல் துறையில்
மோப்ப நாய்கள்...

*] குற்றம் கண்டு பிடிப்பதில் – 80
மோப்ப நாய்கள்.

*] வெடித்துச் சிதறும் கண்டறிதலில்
– 107 மோப்ப நாய்கள்.

*] போதைப் பொருள் பற்றி கண்டறிய
– 4 மோப்ப நாய்கள் உள்ளன.

*] மலைக்குன்றுகள் உள்ள இடத்தில்
பணி புரிய 4 (சென்னை / மதுரை /
கோயம்புத்தூர் / திருச்சி) 38
குதிரைகள் பயன்படுத்தப்படுகி
ன்றன.

*] மாநில போக்குவரத்துகளை
திட்டமிட்டு சரிசெய்ய – 122
நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்
( ஜிபிஎஸ் மூலம் ) உள்ளன.

தமிழ்நாடு பற்றிய விவரங்கள்:
வருவாய் நிர்வாகம் (2010-11):
1. வருவாய் மாவட்டங்கள் – 32.
2. வருவாய் கோட்டங்கள் – 76.
3. தாலுகா – 220.
4. உள்வட்டங்கள் – 1,127.
5. வருவாய் கிராமங்கள் – 16564.
6. கடலோர மாவட்டங்கள் – (2007-08) – 13.

உள்ளாட்சி அமைப்புகள் (2010-11):
1. மாநகராட்சிகள் – 12.
2. நகராட்சிகள் – 150.
3. ஊராட்சி ஒன்றியங்கள் – 385.
4. டவுன் பஞ்சாயத்துகள் – 559.
5. மாவட்டம் – 32.

6. கிராம ஊராட்சிகள் (RD ஊராட்சிகள்
கொள்கை விளக்கக்
குறிப்பு படி 2011-12) – 12524.

7. குக்கிராமங்கள் – 48452
(தமிழ்நாடு மின்சார வாரியம்
அறிக்கை படி).

சட்டமன்றம் :
*] சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர் – 234 + 1 (நியமனம் -
ஆங்கிலோ – இந்திய உறுப்பினர் ).

பாராளுமன்ற (மக்களவை உறுப்பினர்
– 39 ).

(மாநிலங்களவை உறுப்பினர் – 18)
.
சாலைகள் நீளம் :
*] தேசிய நெடுஞ்சாலைகள் – 4861.000
கி.மீ தொலைவு.

*] மாநில நெடுஞ்சாலைகள் –
56814.200 கி.மீ தொலைவு.

*] கார்ப்பரேஷன் மற்றும்
நகராட்சி சாலைகள் – 18704.471 கி.மீ தொலைவு.

*] பஞ்சாயத்து யூனியன் மற்றும்
கிராம ஊராட்சி சாலைகள்- 173153.436 கி.மீ தொலைவு.

*] டவுன் பஞ்சாயத்து சாலைகள் –
19151.753 கி.மீ தொலைவு.

*] மற்றவை (Forest Road) – 3342.423 கி.மீ தொலைவு.

*] கடலோர வரி – 1,076 கிலோ நீளம்.

*] ரயில்வேஸ்: பாதை நீளம் – 3880,90 கி.மீ தொலைவு.....

தமிழ்நாடு காவல் துறைக்கு நன்றி.

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...