Monday, 26 December 2016



இந்தியா

1.நிதி ஆயோக் எனப்படும் மத்திய கொள்கைக் குழு வெளியிட்ட ரொக்க பணப் பரிவர்த்தனைக்கு மாற்றாக மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட பரிசுத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
2.நாட்டிலேயே முதல் முறையாக கிழக்கு மண்டல கடலோர காவல் படையில் கடல்சார் பகுதிகளை ரோந்து சுற்றி வந்து கண்காணிக்க,கடலோர பகுதிகளில் குறிப்பாக சர்வதேச எல்லைப்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக கடலோர காவல் படைக்கு சொந்தமான ‘டோர்னியர்’ ரக குட்டி விமானத்தில் துணை கமாண்டன்டுகள் அக்ஷி, சுனிதா (பைலட்டுகள்) மற்றும் பிரியங்கா தியாகி (பார்வையாளர்) என முழுவதும் பெண் அதிகரிகளையே நியமித்துள்ளனர்.
3.ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் HIVயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆரம்ப கல்வி மற்றும் உயர்கல்விக்கு நிதியுதவி வழங்க ( Rs. 40,000 per year ) Biju Sishu Surakshya Yojana எனும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
4.மத்திய நீர்வள துறை அமைச்சகம் கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியத்தை மறுசீரமைத்துள்ளது.புதிய தலைவராக, முன்னாள் மத்திய நீர்வள ஆணைய தலைவர் A.K. பஜாஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.உறுப்பினர்களாக கோபால கிருஷ்ணன , R.P. பாண்டே , N.N.ராய் , பிரதீப் குமார் சுக்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
5.மத்திய புவிஅறிவியல் துறையின் சார்பில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வட இந்தியாவில் குளிர் காலங்களில் வானில் ஏற்படும் பனிமூட்டம் பற்றி ஆராய WIFEX சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுகள் வான்வெளி போக்குவரத்தை இடையூறு இல்லாமல் மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும்.
6.இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் மத்திய அரசு இலவச ‘வை-பை’ சேவையை வழங்கி வருகிறது.இந்த திடத்தின் கீழ் ஊட்டி ரயில் நிலையத்தில் அதிவேக ‘வை-பை’ சேவை தொடங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்தியாவில் இந்த சேவையை பெரும் 100வது ரயில் நிலையம் என்ற பெருமையை ஊட்டி ரயில் நிலையம் பெற்றுள்ளது.
7.ஆந்திரா மாநில அரசு, டாடா டிரஸ்ட் இணைந்து Swastha Kutambham என்ற திட்டத்தின் அடிப்படையில் விஜயவாடா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் / நகரங்களில் வாழும் மக்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை வழங்கியுள்ளது.இதனால் இந்தியாவிலேயே அனைவருக்கும் மருத்துவ காப்பீடு பெற்றுள்ள முதல் நாடாளுமன்ற தொகுதி என்ற சிறப்பை விஜயவாடா பெற்றுள்ளது.
8.ராஷ்டிரபதி பவனில் டிசம்பர் 10 & 11ல் குழந்தைகளுக்கான Laureates and Leaders மாநாடு  நடைபெற்றது.இந்த மாநாட்டை நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்தி ஏற்பாடு செய்தார்.

வர்த்தகம்

1.டாடா மோட்டார்ஸ் நிர்வாகக் குழுவின் இயக்குநர் பதவியிலிருந்து நுஸ்லி வாடியா நீக்கப்பட்டுள்ளார்.

உலகம்

1.இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.அவர் பிறந்த பெத்லகேம் நகரில் கிறிஸ்துமஸ் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.தற்போது பெத்லகேம் நகரம் இஸ்ரேல் நாட்டு எல்லைக்குள் அமைந்துள்ளது.மேலும் தென்னகம்.காம் செய்தி குழுவின் சரப்பாக அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
2.உலகின் மிகவும் பெரிய பாலைவனத்தில் 3வது பெரிய பாலைவனமான ஆப்ரிக்காவின் சகாரா பாலைவனத்தை சேர்ந்த அல்ஜீரியா, அன்செப்ரா ஆகிய பகுதிகளில்  37 வருடங்களுக்குப் ( 1979) பின் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

விளையாட்டு

1.ஜப்பானில் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற ஆசிய லூக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சிவ கேசவன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.ஜப்பானின் டனாகா ஷோஹெய் 2-ஆவதாக வந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.சீன தைபே வீரர் லியென் டே என் 3-ஆவதாக வந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.சிவ கேசவன் கடந்த 2011, 2012-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார்.
2.இலங்கையில் நடைபெற்ற U – 19 இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக (2012, 2014, 2016) ஆசிய கோப்பை கைப்பற்றியுள்ளது.கடந்த 2012ல் பாகிஸ்தானுடன் கோப்பையை இந்திய அணி பகிர்ந்து கொண்டது.இந்தியாவில் U – 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் பயிற்சியாளராக உள்ளார்.

இன்றைய தினம்

1.ஆண்டர்ஸ் செல்சியஸ் தனது செல்சியஸ் வெப்பமானியைக் கண்டுபிடித்த நாள் 25 டிசம்பர் 1741.
2.சீனக் குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் 25 டிசம்பர் 1947.
3.உலகளாவிய வலைத் திட்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 1990.
4.மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருந்து டிசம்பர் 19 இல் ஏவப்பட்ட பீகில் 2 விண்கலம் தரையில் இறங்வதற்கு சற்று முன்னர் காணாமல் போன நாள் 25 டிசம்பர் 2003.
5.இன்று 10வது இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 25 டிசம்பர் 1924.
6.இன்று ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி  வேலு நாச்சியார் நினைவு தினம்.இவர் இறந்த தேதி  25 டிசம்பர் 1796.



– gd ngt

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...