*இனி ஆதார் எண்ணை காட்டி பணம் செலுத்தலாம்" - கிரெடிட், டெபிட் கார்டுகள் தேவையில்லை.*
💳 கிரெடிட், டெபிட் கார்டுகள், இ-வாலட்கள் இல்லாமல் கடைகளில் வாங்கிய பொருட்கள், சேவைகளுக்கு பணம் செலுத்தும் வகையில், ஆதார் எண் அடிப்படையிலான ஆப்ஸை(செயலி) மத்தியஅரசு இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்கிறது.
💳 இந்த ஆதார் பேமென்ட் ஆப்ஸ் மூலம் நேரடியாக வங்கிக்கணக்கில் இருந்து கடைக்காரருக்கு பணம் செலுத்த முடியும்.
💳 தனியார் நிறுவனங்களாக மாஸ்டர் கார்டு, விசா, பே-டிஎம் உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்படும் சேவைக் கட்டணங்களை தவிர்க்கவே மத்திய அரசு இந்தஆப்ஸை அறிமுகம் செய்கிறது.
💳 டிஜிட்டல் பரிமாற்றம்
பிரதமர் நரேந்திரமோடி, கடந்த மாதம் ₹500, ₹1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார்.
💳 அதன்பின், மக்களிடையே டிஜிட்டல் பேமென்ட், பரிமாற்றத்தை ஊக்குவிக்க மக்களுக்கு மத்தியஅரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.
💳 ஆதார் ஆப்ஸ்
இதில் டிஜிட்டல் பரிமாற்றத்தின் போது, தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் கமிஷனை தவிர்க்க ஆதார் எண் அடிப்படையிலான செயலியை உருவாக்க மத்தியஅரசு முடிவு செய்தது.
💳 இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக ஆதார் பேமென்ட் ஆப்ஸ் இன்னும் சில தினங்களில் மக்களுக்கு அறிமுகமாகிறது.
💳 இந்த ஆதார் ஆப்ஸை ஐ.டி.எப்.சி. வங்கி, ஆதார் எண் வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. நிறுவனம், தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. செல்போன் தேவையில்லை.
💎 இது குறித்து இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.) தலைமை நிர்வாக அதிகாரி அஜெய் பூஷன் பாண்டே கூறுகையில், " மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ள ஆதார் பேமெண்ட் ஆப்ஸ் மூலம், வாடிக்கையாளர்கள் செல்போன் இல்லாமல் கடைக்காரருக்கு பணம் செலுத்தலாம். 40 கோடி மக்கள் ஆதார் எண்ணை, வங்கிக்கணக்குடன் இணைத்துள்ளனர்.
💳 2017 மார்ச் மாதத்துக்குள் அனைத்து மக்களின் ஆதார் எண்ணும் வங்கிக்கணக்குடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இணைக்கப்பட்டால் பணம் செலுத்துவது எளிதாகும்'' எனத் தெரிவித்தார்.
📱இரு அம்சங்கள்:
💎 ஆதார் பேமெண்ட் ஆப்ஸில் இரு முக்கிய அம்சங்கள் உள்ளன.
🔶 முதலாவதாக நுகர்வோர்களுக்கான ஆதார் பேமெண்ட் ஆப்ஸ்.
🔷 இரண்டாவது, வர்த்தகர்கள், வியாபாரிகள் பயன்படுத்தும் ஆப்ஸ்.
🔶 நுகர்வோர்களுக்கான ஆப்ஸ் என்பது இ-வாலட் போன்றது.
🔷 2-வதாக வர்த்தகர்களுக்கான ஆப்ஸ்.
💳 இந்த ஆப்ஸை இயக்க வர்த்தகர் ஒருவருக்கு ஸ்மார்ட்போன், கைரேகை பதிவு செய்யும் எந்திரம் அவசியமாகும்.
💳 இந்த எந்திரம் மூலமே விரல்ரேகை செய்து பணப்பரிமாற்றத்தை செய்ய முடியும்.
💳 இந்த எந்திரத்தை வர்த்தகர்கள் ரூ.2 ஆயிரம் செலுத்தி பெற்று கொள்ளலாம்.
📱 இந்த செயலியையும் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
💎 எப்படி ஆப்ஸ் செயல்படுகிறது...
💳 வர்த்தகர்களுக்கான ஆதார் பேமெண்ட் ஆப்ஸ் செயல்பட இரு பொருட்கள் அவசியம்.
🔷 ஒன்று, ஸ்மார்ட்போன்,
🔶 2-வது ரேகை பதிவு செய்யும்மெஷின்.
💳 ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்கள், தங்கள் ஆதார் எண்ணையும், கணக்கு வைத்து இருக்கும் வங்கியின் பெயரை பதிவு செய்ய வேண்டும்.
💳 அதன்பின் அந்த எந்திரத்தின் மூலம் வாடிக்கையாளர் தனது விரல் ரேகையை வைத்தவுடன் அனைத்து விவரங்களும் வரும். அதை ஓ.கே. செய்தால், பணம் பரிமாற்றத்துக்கான பாஸ்வேர்டு வரும்.
💳 அதை அந்த எந்திரத்தில் பதிவு செய்தால் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் இருந்து வர்த்தகரின் வங்கிக்கணக்குக்கு பணப் பரிமாற்றம் ஆகும்.

No comments:
Post a Comment