Sunday, 14 October 2018

*முதல் I.C.S. பெண்மணி….*

சி .பி .முத்தம்மா ….”
இந்தியாவின் முதல் பெண் I.C.S அதிகாரி முத்தம்மா நடத்திய நீதிப் போராட்டம்!

இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி என்று தெரியும். இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு என்று அழைக்கப்படும் ஐசிஎஸ் தேர்வில் முதன்முதலாக வெற்றிபெற்ற பெண் யார் தெரியுமா? அவர்தான் சி.பி. முத்தம்மா.

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தின் விராஜ்பேட் நகரில் 1924-ல் பிறந்தவர் முத்தம்மா. தனது 9-வது வயதில், தனது தந்தையைப் பறிகொடுத்தார். எனினும், வைராக்கியம் கொண்ட அவரது தாய், தனது நான்கு குழந்தைகளையும் நன்கு படிக்க வைத்தார். மடிகேரி புனித ஜோசப் பெண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த முத்தம்மா, சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். மூன்று தங்கப் பதக்கங்களுடன் படிப்பை முடித்த அவர், சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தார்.

இந்தியாவின் முதல் பெண் வெளியுறவு அதிகாரிதான் சி.பி. முத்தம்மா. 1924-ம் ஆண்டு, கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர் சென்னையில் மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். ஆண்கள் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுவந்த இந்தியக் குடிமையுரிமைத் தேர்வில் தேர்ச்சியடைந்த முதல் பெண் இவரே.

1949-ல் ஐசிஎஸ் தேர்வில் வென்ற பின்னர், வெளியுறவுத் துறையில் சேர்ந்தார். ஆண் அதிகாரிகளின் ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராகப் போராடினார். சவால்களை வெல்வதைப் பழக்கமாகக்கொண்டிருந்த முத்தம்மா,

இந்தியா சுதந்திரம் பெற்றும் கல்வி எல்லோருக்குமானதாக உடனடியாக மாறிவிடவில்லை. அதேபோல அனைத்துப் பதவிகளிலும் பெண்கள் இடம்பெறவுமில்லை. ஒவ்வோர் அடியையும் நிதானமாக அதேசமயம் அழுத்தமாகவும் பதிவு செய்துவருகின்றனர் பெண்கள். அப்படி முதன்முறையாகப் பெண் ஒருவர் புதிய துறைக்குப் பதவிக்கு வந்தபின் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்வது ஒருபுறம் என்றால் சி.பி. முத்தம்மாவுக்குப் பணி விதிகளும் மறுபுறம் தடையாக இருந்தது.

இந்தியாவின் முதல் பெண் வெளியுறவு அதிகாரிதான் சி.பி. முத்தம்மா.

வெளியுறவு அதிகாரி பதவியில் அப்போதிருந்த பணி விதிகளின் படி, அந்தப் பதவில் ஒரு பெண் இருந்தால் அவரின் திருமணத்துக்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும். மேலும், திருமண வாழ்க்கை அந்தப் பதவிக்குத் தடையாக இருக்கும் என அரசு கருதினால், அந்தப் பெண் அதிகாரி ராஜினாமா செய்துவிட வேண்டும். அது மட்டுமல்லாமல், திருமணமான பெண் இந்தப் பதவி அளிக்க உரிமை கோர முடியாது என்றும் அந்தச் சட்டத்தில் இருந்தது.

இந்த விதிமுறைகளை அறிந்து சி.பி. முத்தம்மா அதிர்ச்சியடைந்தார். ஒரு வேலைச் சரியாகச் செய்யத் திறமையைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, ஆண், பெண் பாகுபாடு கூடாது எனக் கருதினார். அதனால் அந்த விதிகளுக்கு எதிராக  வழக்குத் தொடுத்தார். இந்த விதிகள் பெண்கள் உரிமைக்கு எதிராக இருப்பதோடு சமத்துவத்துக்கும் எதிராகவும் இருப்பதாகக் குறிப்பிட்டதோடு, இந்தக் காரணங்கள் பதவி உயர்வுக்கு இடையூறாகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். அப்போது இந்த வழக்குப் பரபரப்பாகப் பேசப்பட்டது.

பெண்களுக்கு எதிராக இருந்த அரசு விதிகளை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினார். அந்த வழக்கை விசாரித்த வி.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. இந்தியப் பெண்கள் வரலாற்றில் மிக முக்கியமான தீர்ப்பு

இந்தியாவில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் சாதி, மத, இன, பால் உள்ளிட்டவற்றால் பாகுபாடு பேணக்கூடாது என்று சொல்கிறது. வெளியுறவுப் பணி விதிகள் இதற்கு எதிராக இருக்கிறது என்பதை எடுத்துரைக்கிறார். அதனால், வெளியுறவுத் துறை அந்த விதிகளை நீக்குவதாகப் பிரமாணப் பத்திரம் வழங்கியது.

வெளியுறவுத் துறையின் இந்த முடிவால் முத்தம்மாவுக்குப் பதவி உயர்வு கிடைக்கிறது.  நெதர்லாந்து நாட்டுக்கு இந்திய தூதராகவும் நியமிக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத் தூதர் எனும் பெருமையைச் சூடிக்கொள்கிறார். அதன்பின், முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் அரசுப் பணிகளில் திறம்படப் பணியாற்றினார். பெண்களுக்காக முத்தம்மா மேற்கொண்ட நீதிப் போராட்டம் வரலாற்றில் பொன்னொழுத்தால் பொறிக்கப்பட வேண்டியது.

தன் இறுதிக் காலம் வரை சமூக அக்கறையுடன் வாழ்ந்தார். 2009-ம் ஆண்டு அக்டோபர் 14 -ம் நாள் பெங்களூரில் இந்த மண்ணை விட்டுப் பிரிந்தார். சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு ரோல் மாடலாக விளங்குகிறது முத்தம்மாவின் வாழ்க்கை!

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...