Sunday, 9 August 2020

*Tnpsc group 1 / 2 Prelims தேர்வுக்கு எப்படி தயாராவது*



*ஒரு நண்பரின் பதிவு*

Prelims தேர்வுக்கு எப்படி தயாராவது ? 
எதை படிப்பது, எதில் படிப்பது, பயிற்சி மையம் செல்லலாமா ?
இப்போது தான் தொடங்கி உள்ளேன், என்னால் முடியுமா ? 
சில வருடங்களாக படித்து கொண்டிருக்கிறேன் என்னால் இன்னும் முடியவில்லை , முடியுமா முயற்சித்தால்...? 

நேற்றைய பொழுதில் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள் ... முடிந்த வரை விளக்கமாக பதில் அளிக்க முயல்கிறேன் ( சொல்ல போகிறவை என் பார்வை மட்டுமே  , அவை மாறுபடலாம் நபருக்கு நபர் ) 

தொடர்ந்து  படித்தால் தேர்வை எளிதில் clear பண்ணலாம்..   

1. முதலில் எதை படிப்பது: 

6 முதல் 12 வரை உள்ள தமிழ்நாடு பள்ளி புத்தகம் மட்டுமே போதுமானது... ( polity / Tamilnadu development administration / current affairs . கொஞ்சம் வெளியே இருந்தும் படிக்கணும்) #preliminay_ #TNPSC exam க்கு பள்ளி புத்தகம் போதும்..

#syllabusல் உள்ள topic மட்டும் திரும்ப திரும்ப revise பண்ணி பாருங்க ( முழுசா படிக்கணுமா அப்படி doubt வரவங்க, old previous year question பார்த்தா எதை படிக்கணும், எதை விடணும் சொல்லி தெளிவு கிடைத்து விடும் )

முக்கிய குறிப்பு : MARKET Materials  வாங்கி  பணத்தை வீணடிக்காதீர்கள்... நேரத்தையும் வீணடிக்காதீர்..

2. பயிற்சி மையமா or  வீட்டிலிருந்தா ? 

என்னை பொருத்த வரை நிறைய பயற்சி மையம் உங்களை ஏமாற்றியே சம்பாதிக்க பார்ப்பார்கள்.. 
அவர்களுக்கு ஒரு #batch
நமக்கு #life..

(School books + Syllabus + old question paper + proper revision + discussion with friends + model test ) இதுவே நான் முழுக்க முழுக்க செய்தது...

நான் TNPSC plan இல்லாம தான் படிக்க வந்தேன், ஒரு 3 மாதம் பயிற்சி மையம் சொன்னதை நம்பி ஏன் படிக்கிறேன் , என்ன படிக்கிறேன் தெரியாமலே நேரம் வீணடித்தேன்.. ஆனால் பயிற்சி மையத்தில் கிடைத்த contact( உடன் படிக்கும் மாணவர்கள்) easyah தேர்வை அணுக உதவியது 

பின் 3 நண்பர்கள் ஒன்று சேர்ந்தோம், அவர்களுடன் சேர்ந்த பிறகு நிறைய idea கிடைத்து, 
தினமும் ஒன்றாக படிப்போம், மாறி மாறி கேள்வி கேட்டு கொள்வோம்...

படிக்கிறது எவ்ளோ முக்கியமோ அதே அளவு , அதை revise பண்றது ரொம்ப ரொம்ப முக்கியம்.. திரும்ப திரும்ப படித்து, நண்பர்களுடன் மாறி மாறி கேள்வி கேட்டு கொள்வோம், மாதிரி தேர்வு பல எழுதி பார்ப்போம்..
இது மட்டும் தான் வெற்றிக்கு இட்டு சென்றது..
நான் ஒன்றும் பெரிய புத்திசாலி இல்லை,, ஆனால் திரும்ப திரும்ப புத்தகத்தை படித்தது என்னை வேலை வாய்ப்பை நோக்கி இட்டு சென்றது..

3. என்னால் தேர்வில் வெற்றி பெற முடியுமா ? 

தேர்வை பொறுத்த வரை யார் தொடர்ந்து படித்து, சரியாக revise செய்து, மாறி மாறி நண்பர்களுடன் discuss பண்ணியோ, மாதிரி தேர்வை எழுதியோ பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்..
விதைத்தால் மட்டுமே செடி வளரும், ஆனால் அதை நல்ல நிலத்தில் விதைத்து உரமிட்டு பார்த்து கொள்ளுங்கள்

எல்லாரும் கண்டிப்பாக படித்தால் வெற்றி பெற முடியும்.. வாழ்த்துக்கள்...

(School books + Syllabus + old question paper + proper revision + discussion with friends + model test ) 

இதுவே நான் முழுக்க முழுக்க செய்தது...  படிக்கும் விதம் நபருக்கு நபர் வேறுபடும்.. உங்களுக்கு ஏற்ற விதத்தில் படியுங்கள்..
தேவையான தகவல் அனைத்தும் online சென்று தேடுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்..
அடி மெல்ல எடுத்து வைத்து செல்ல செல்ல செல்ல தான் தூரம் குறையும்... 
#வாழ்த்துக்கள் வருங்கால அதிகாரிகளுக்கு..

#அன்புடன் சுழியன் ( தரவரிசை : 19 மதிப்பெண் : 276 )

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...