Thursday, 22 December 2022

December 22_டிசம்பர் 22 : இந்திய ஒன்றிய அரசு எந்திரத்தின் கருப்பு தினம்!

டிசம்பர் 22 : இந்திய ஒன்றிய அரசு எந்திரத்தின் கருப்பு தினம்!

22.12.2003-ல் வாஜ்பாய் தலைமையிலான BJP அரசு அரசு ஊழியர்களின் ஓய்வூதிய உரிமைகளை 100% பறித்த NPS-ற்கான ஓய்வூதிய அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்த கொடுந்துயர நாள் இன்று.

இச்சட்டத்திற்கு திமுக, விசிக, காங். உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

CPM, CPI, திரினாமுல் காங். உள்ளிட்டவை வலிமையாக எதிர்த்தன.

கட்சி நிலைப்பாட்டிற்காக நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்த அஇஅதிமுக NPS-ஐப் பிரதியெடுத்து CPS என்ற பெயரில் முன்தேதியிட்டு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியது.

CPM இச்சட்டத்தை 100% எதிர்த்ததோடே தான் ஆட்சியிலிருந்த கேரளா, திரிபுரா & மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இறுதிவரை NPS-ஐ நடைமுறைப்படுத்தவே இல்லை.

கேரளாவில் காங். ஆட்சிப் பொறுப்பேற்றவுடனும், திரிபுராவில் BJP ஆட்சியைக் கைப்பற்றியவுடனும் NPS நடைமுறைக்கு வந்தது.

மேற்கு வங்கத்தில் ஆட்சிப்பொறுப்பேற்ற திரினாமுல் காங்கிரசும் CPM வழியில் இன்றுவரை NPS-ஐ நடைமுறைப்படுத்தவே இல்லை.

இச்சட்டத்தின் தீமையை உணர்ந்துள்ள காங்கிரஸ் தற்போது தான் ஆட்சிப் பொறுப்பேற்ற மாநிலங்களில் NPS-ஐ துணிவோடே இரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துவிட்டது.

கேரளாவில் CPM தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்றும் இன்று வரை முன்பு காங். செய்த தவறைத் திருத்தி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாது காலம் தாழ்த்தி வருகிறது.

ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி, YSR காங்., உள்ளிட்ட கட்சிகள் மாநில ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் NPS-ஐ இரத்து செய்யும் நோக்கில் குழு அமைத்துள்ளன / அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

2016-ல் TNGEA & TNPTF நடத்திய காலவரையற்ற வேலைநிறுத்தத்தின் பலனாக, அஇஅதிமுக CPS-ல் இறந்த / ஓய்வுற்ற ஊழியர்களுக்கான தொகை ஒப்பளிப்பு அரசாணை வெளியிட்டதோடே, CPS-ஐ நீக்க வல்லுநர்குழு அமைத்தது. ஆண்டுக்கணக்கில் உறக்கத்திலிருந்த குழு ஒருவழியாக அறிக்கையைச் சமர்ப்பித்து மூன்றாண்டுகளுக்கும் மேலாகிறது.

ஆட்சிப் பொறுப்பேற்றால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவேன் என்று கூறிய திமுக ஆட்சிக் கட்டிலேறி இரண்டாண்டுகள் கடந்த பின்னும் அதுகுறித்த எவ்வித நேரடி உறுதியளிப்பும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்றுவரை வெளியிடப்படவில்லை. சொல்லப்போனால், TNGEA, JACTTO-GEO என இரு மாநாட்டு மேடைகளில் உரையாற்றிய போதும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற சொல்லைக்கூட உச்சரிக்கவில்லை. மாறாக அவரது ஆட்சியின் நிதியமைச்சர் அவரது முன்னிலையிலேயே சட்டமன்றத்தில் NPS இரத்திற்கு எதிரான கருத்தைப் பதிவு செய்தார்.

திரு.ஸ்டாலினிற்குப் பிறகு கொரோனா பெருந்தொற்றின் பொருளாதார நெருக்கடியோடே முதல்வரான பல மாநில முதல்வர்கள் NPS-ஐ இரத்து செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அங்கெல்லாம் அம்மாநில அளவிலான NPS-ற்கு எதிரான தனித்த தொடர் போராட்டங்கள் உரிமையை மீட்டெடுத்துக் கொடுத்துள்ளன.

தற்போது கர்நாடகத்தில் பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையோடே காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டிலும், CPS ஒழிப்பு என்ற ஒற்றைக் கோரிக்கையோடே பெரும்பான்மை அரசு ஊழியர் & ஆசிரியர்களின் இயக்கங்கள் உறுதியான போராட்டத்தை முன்னெடுத்தால் மட்டுமே அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு விடியல் பிறக்கும்.

அதுவரையில் இறக்க உள்ள ஒவ்வொரு ஊழியரின் / ஆசிரியரின் குடும்பமும் இதுவரையில் இறந்த & ஓய்வுற்ற ஊழியரின் / ஆசிரியரின் குடும்பங்கள் போல இருளில் மூழ்கிக் கொண்டேதான் இருக்கும்.

இருளை எரித்து
விடியலைப் பிறப்பிக்கும்
தீக்குச்சி என்பது,
ஒன்றிணைந்து உயர்த்தும்
நமது கரங்களே!

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...