TNPSC Group Examinations: 2023 ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு கால திட்ட அட்டவணை (TNPSC Annual Planner) தேர்வர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
தேர்வு அட்டவணையில் குரூப் 1, குரூப் 2/2ஏ தேர்வு பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவுமில்லை. மேலும், குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும், 2024ல் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு திட்டம், தமிழகத்தில் உள்ள குறிப்பாக நடுத்தர மற்றும் கிராமப்புற இளைஞர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை உருவாக்கக் கூடியாதாக உள்ளது. குறிப்பாக, குரூப் 1 தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு இருப்பதால், தற்போது 38 வயதில் இருக்கும் பலர் மீண்டும் ஒருமுறை தேர்வெழுதும் வாய்ப்பை இழக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகால தேர்வு அட்டவணை:
2020, 2021 ஆண்டுகள் தவிர்த்து, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் சிக்கலான சூழ்நிலையை டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள்தற்போது எதிர்கொள்ள உள்ளனர்.
2012
குரூப் 1 (2011-2013) தேர்வு - 25 பணியிடங்கள்
கிராம நிர்வாக அலுவலர் தேர்வு - 1870,
குரூப் 4 தேர்வு - 10718 பணியிடங்கள்
2013
குரூப் 1 தேர்வு - 79 காலியிடங்கள் ,
குரூப் 2 தேர்வு - 1064 காலியிடங்கள் ,
குரூப் 4 தேர்வு - 5566 காலியிடங்கள்
2014
குரூப் 4 தேர்வுகள் - 4963 காலியிடங்கள் ,
குரூப் 2ஏ தேர்வுகள் - 2,846 காலியிடங்கள்
2015
குரூப் 2 (2014-2015 மற்றும் 2015-16) தேர்வுகள் - 1863 பணியிடங்கள்
கிராம நிர்வாக அலுவலர் (2014 -15) தேர்வுகள் - 813 பணியிடங்கள்
குரூப் 1 தேர்வுகள் - 74 பணியிடங்கள்
குரூப் 2 ( 2014-15, 2015-16) தேர்வுகள் -1241 (நேர்காணல் பணியிடங்கள் )
2016
குரூப் 1 தேர்வு - 85 பணியிடங்கள் ,
குரூப் 4 (2015- 16) தேர்வு -5451 பணியிடங்கள்
2017
குரூப் 2ஏ நேர்காணல் இல்லாத தேர்வு (2017 -18) - 1,953 பணியிடங்கள் ,
குரூப் 4 ( 2015-2016, 2016-2017 and 2017-2018 ) தேர்வு - 9351 பணியிடங்கள்,
2018 குரூப் 2 நேர்காணல் தேர்வு - 1199
2019
குரூப் 4 (2018-2019, 2019-2020) தேர்வு - 6491 பணியிடங்கள் ,
குரூப் 1 தேர்வு (2016 - 2019) - 139 பணியிடங்கள்
2020 குரூப் 1 தேர்வு - 79 (கொரோனா தொற்று பொது முடக்க நிலை)
2021 கொரோனா தொற்று பொது முடக்க நிலை
2022
குரூப் II-IIஏ தேர்வு - 5413 பணியிடங்கள்,
குரூப் 4 தேர்வு -7301 பணியிடங்கள் ,
குரூப் 1 தேர்வு - 92 பணியிடங்கள்
குறிப்பு : மேற்படி அட்டவணையின் படி , தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முந்தைய ஆண்டு அதிகப்படியான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2001 முதல் 2006 ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பொருளாதார நிதிநெருக்கடி காரணமாக, குரூப் 1, 2,4 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருந்தது. 2006ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகே, ஆட்சேர்ப்பு நடைமுறை இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியது.
டிஎன்பிஎஸ்சி ஆட்சேர்ப்பு அறிவிப்பு
கடந்த 10 ஆண்டுகளில், கொரோனா காலக்கட்டங்களிலும் கூட, ஆட்சேர்ப்பு அறிவிக்கை தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மிகவும் இறுக்கமான போக்கை தமிழ்நாடு அரசு கடைபிடிப்பதாக டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, பொருளாதார நிச்சயமற்றத் தன்மை காரணமாக தனியார் துறையில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், மாநில அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் மேற்கொள்ள வேண்டுமே தவிர இறுக்கமான போக்கு தேவையில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
💡 *WIN_100%*
No comments:
Post a Comment