✍ #UPDATE
நாளை முதல் ஏப்ரல் 28வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன்
காலை 9 மணி முதல் 12.30 மணி வரை டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் நடைபெறும்.
குரூப் 4 தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும் – பாலச்சந்திரன்.
7,352 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும்.
ஜூலையில் நடைபெறும் தேர்வுக்கான முடிவுகளை அக்டோபர் மாதம் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டம்.
தமிழ் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 40%(60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே, அந்த தாள் திருத்தப்படும். மொத்தமாக 90 மதிப்பெண்கள் பெற்றால்தான் அந்த தேர்வர் தரவரிசைக்கு தகுதி பெறுவார்.
TNPSC குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு...
1. அனைவரும் வெள்ளை பேக்ரவுண்ட் போட்டோவாக மாற்றம் செய்து கொண்டுவரவும். அதில் விணணப்பதாரரின் பெயர் மற்றும் புகைப்படம் எடுத்த நாளையும் பதிவிடவும்.
2. ஆதார் கார்டில் போன் நம்பர் இணைக்கவும்.
3.ஆதார் எண்ணை TNPSC வெப்சைட்டில் இதுவரை இணைக்கவில்லை எனில் இணைத்தால் மட்டுமே விணணப்பிக்க முடியும்.
4. தமிழ் வழி சான்றிதழ் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயின்ற அனைத்து பள்ளிகளிலும் தவறாமல் வாங்கிவரவும்.
5.இதைப்போல், தற்போது சாதி மாற்றம் செய்துள்ள பிரிவினர் தனது தற்போதைய சாதி சான்றிதழின்படி வாங்கி வரவும்.
6. ஏற்கனவே TNPSC தேர்வு எழுதியவர்கள் தற்போது One Time Id தெரியாதவர்கள் முன்னதாகவே வந்து கண்டுபிடித்துக் கொள்ளவும். புதிதாக பதிவு செய்து கொள்ளலாம் என்று எண்ணிவிடாதீர்கள். அது முடியாத செயல்.
7. OneTime ID யில் தேவைப்படின் தற்போதைய போன் எண்ணை மாற்றி பதியலாம்.
No comments:
Post a Comment