Saturday, 15 July 2023

(BIS) பயிற்சி பட்டறை

*இந்திய தர நிர்ணய அமைவளத்தின் (BIS) பயிற்சி பட்டறை CCIயின் (தேசிய அமைப்பு) மாவட்ட தலைவர்களடங்கிய நுகர்வோர் பிரதிநிதிகளுக்கு சென்னை BIS- நிறுவனவளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.*





தமிழ்நாடு, பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களுக்கு பயிற்சியாக, இந்தியா தர நிர்ணய அமைவனத்தின் திரு USP யாதவ் அறிவியலாளர் மற்றும் பொது துணை இயக்குனர், தென்னிந்திய மண்டலம் அவர்களும், திருமதி G. பவானி அறிவிலாளர் மற்றும் தலைமை இயக்குனர் சென்னை அவர்களும், திரு BJ.கௌதம் அருவியலாளர் இணை இயக்குனர் சென்னை, திரு L தினேஷ் ராஜகோபாலன் அறிவியலாளர் துணை இயக்குனர் சென்னை எனஅடங்கிய தலைமையில், பயிற்சியானது CCI-யின் (தேசிய அமைப்பு) மாவட்ட தலைவர்களுக்கு பயிற்சியில் , BIS முத்திரை சட்டம் -1952,BIS சட்டம் 1986, BIS சட்டம் 2016 ஐஎஸ்ஐ முத்திரையில் 7 இலக்க எண்கள் 10 இலக்க எண்கள் பதிந்து அவை உரிமத்துடன் காணப்படுவதும் அதேபோல் CRS என்றகட்டாய பதிவு திட்டம் சில நுகர்வோர் பொருட்களும் குறித்து விளக்கம் அளித்தனர். பி ஐ எஸ் முத்திரையை பயன்படுத்துவதில் குறிப்பாக, தங்க ஆபரணங்களை % முத்திரையிடக்கூடிய மையங்கள் 160 இருப்பதும், அதில் கடந்த 16 ஜூன் 2021ல் இந்திய அளவில் 256 மாவட்டங்களிலும் , தற்போது அந்த எண்ணிக்கை உயர்த்தி 1- ஜூன் 2022ல் அந்த முத்திரை மையங்கள் 288 ஆகவும், குறிப்பாக, ஹால்மார்க் 26 மாவட்டங்களில் உள்ளதையும், நுகர்வோர்கள் அணுகக்கூடிய ஆயிரக்கணக்கான பொருட்களில் ISI, BIS போன்ற பல முத்திரைகள் அதன் உரிமம், போலி, புகார், கண்காணிப்பு, விழிப்புணர்வு போன்ற பலவித தகவல்களில், BIS நிறுவனம் பயிற்சி அளித்து பல்வேறு விவரக் குறிப்புகளும், குறிப்பாக BIS CONSUMER APP, BIS QUALITY CONNECT app , போன்ற தகவல்களை எப்படி பதிவு அணுகுவது ஒரு பொருளின் உண்மை தன்மையை அலசி பார்ப்பது மேலும், பொது மக்களில் இது போன்ற விழிப்புணர்வுகளை, வீடு வீடாக அறிமுகப்படுத்தி , களப்பணி புரிவது. மேலும் போலிகளிலிருந்தும், நேர்மையற்ற வணிகத்திலிருந்தும், பொது மக்களையும் நம்மையும் எப்படி காப்பது அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பயிற்சிகளை காணொளியாகவும், காண்பித்து பயிற்சி அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் கீழாக பேரணி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரிகளில் பயன்பாட்டின் நிவாரண பலன் போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்துதல், அதற்கு நிறுவனம் சார்ந்து ஒத்துழைப்பும், வழிகாட்டுதலும் தொடர்ச்சியாக இருக்குமென நிகழ்ச்சியின் பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வருகின்ற நாட்களில் மேலும் ஏறக்குறைய ஆயிரம் நுகர்வோர் பொருட்கள் பி ஐ எஸ் நிறுவனத்தின் நேரடி கண்காணிப்பிலும், நடவடிக்கையிலும் இணைக்கப்படும் எனவும் பயிற்சி தலைமை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...