Friday, 4 August 2023

*ஆக.5 முதல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய டிஜிலாக்கர் கட்டாயம்!*

*ஆக.5 முதல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய டிஜிலாக்கர் கட்டாயம்!*




இந்தியாவில் ஆகஸ்ட் 5 முதல் பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு டிஜிலாக்கர் (DigiLocker) என்னும் ஆப் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கு பல்வேறு நடைமுறைகள் மற்றும் விதிகள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது ஆவணங்கள் சரிபார்ப்பு தான்.

 ஏனென்றால் நீங்கள் பாஸ்போர்ட் பெறுவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் ஆவணங்களில் ஏதாவது ஒரு இடத்தில் சிறிய பிழை இருந்தாலும் நாம் அதற்காக நாள்கணக்காக அலைய வேண்டியிருக்கும்.

 அவ்வாறு அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும்பட்சத்திலேயே உங்களுக்கு பாஸ்போர்ட் சரியான நேரத்தில் கிடைக்கும்.

இந்த நடைமுறையை டிஜிட்டல் முறையில் எளிதாக்க மத்திய அரசு பல்வெறு கட்டுபாடுகளையும், புதிய விதிகளையும் அவ்வபோது அமல்படுத்தி வருகிறது.

அதே நேரத்தில் போலியான ஆவணங்கள் முலம் பாஸ்போர்ட் அப்ளை செய்யும் சம்பவங்களும் நடந்து வருவதால் அதனை தடுக்கும்விதமாகவும், பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்ப்பு முறையை எளிமைப்படுத்துவதற்காகவும் இந்தியாவில் ஆகஸ்ட் 5 முதல் புதிய விதி கொண்டு வரப்படுகிறது. அதன்படி, பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு டிஜிலாக்கர் (DigiLocker) என்னும் ஆப் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...