இரப்பரை பார்த்து பென்சில் சொல்கிறது....
ஒவ்வொரு முறையும் நான் செய்யும் தவறுக்கும் என்னை சுத்தப்படுத்தி தூய்மையாக்கி விடுகிறாய்,
ஆனால் என்னை சுத்தம் செய்யும்போது நீ கரைந்து கொண்டே போகிறாயே.... அது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று பென்சில் சொன்னதைக் கேட்ட இரப்பர் அதற்கு அது என் கடமை. நான் படைக்கப்பட்டதே அதற்குத்தான்.. என்னை கண்டு நீ வருந்த வேண்டாம். இதில் எனக்கு முழு மகிழ்ச்சி. என்னால் உன் தவறுகள் அளிக்கப்பட்டு நீ திருத்தங்களுடன் முன்னேறிச் சென்றால் அதுவே என் வெற்றி. நான் கரைவதை பற்றி எனக்கு கவலை இல்லை என்றது....
அந்த ரப்பர் வேறு யாருமில்லை....
நம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் தான்.,...
அவர்கள் மட்டும்தான் ஆயுள் முடியும் வரை நாம் எப்படிப்பட்ட தவறுகளை செய்தாலும் நம்மை விட்டு ஒதுங்கிப் போகாமல் நாம் செய்யும் தவறுகளை திருத்திக் கொண்டே இருப்பார்கள்.... அவர்களின் திருத்தங்களால் நாம் அடையும் வளர்ச்சியை கண்டு பொறாமை படாத இரு தெய்வங்கள் உலகத்தில் உண்டென்றால் அது நம் பெற்றோர்களும் ஆசிரியர்களுமே....
அப்படிப்பட்ட பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் ஆயுள் உள்ளவரை போற்றுவோம்....💐💐🙏🙏💐💐
No comments:
Post a Comment