பேடிஎம் நிறுவனம், பாக்கெட் சவுண்ட்பாக்ஸ் (Paytm Pocket Soundbox) மற்றும் மியூசிக் சவுண்ட்பாக்ஸ் (Paytm Music Soundbox) என இரண்டு புதிய டிவைஸ்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை வசதி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான டிஜிட்டல் பேமென்ட் தளமான பேடிஎம், க்யூஆர் கோட் ஸ்கேனரை (Paytm QR Code Scanner) பயன்படுத்தி வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்கள், வாடிக்கையாளர்களிடம் எளிதாக பணம் பெற்று வருகின்றனர்.
அதன்படி வாடிக்கையாளர்களிடமிருந்து சரியாக பணம் பெறப்பட்டதா என உறுதி செய்ய சவுண்ட் பாக்ஸ் எனும் டிவைஸும் வழங்கப்படுகிறது.
இதன்மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி விட்டார்கள் என்கிற கட்டண அறிவிப்புகளை ஆடியோவாக பெறமுடியும்.
| கூகுள் பே-யில் பணம் அனுப்ப புதிய வசதி! WATCH: https://youtu.be/sdkca6RLY-4 |
*• THE SEITHIKATHIR • TELEGRAM*
*• JOIN US:* https://t.me/Seithikathir
இந்தநிலையில், பேடிஎம் நிறுவனம் வணிகர்களுக்கு இரண்டு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, ஏடிஎம் கார்டு அளவில் புதிய பேடிஎம் பாக்கெட் சவுண்ட்பாக்ஸ் (Paytm Pocket Soundbox) மற்றும் பேடிஎம் மியூசிக் சவுண்ட்பாக்ஸ் (Paytm Music Soundbox) எனும் டிவைஸ்களையே அறிமுகம் செய்துள்ளது.
இந்த பாக்கெட் சவுண்ட்பாக்ஸை பொறுத்தவரை, உங்கள் பாக்கெட்டில் அடங்கும்படியான அளவில் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பயணத்தில் இருக்கும் வணிகர்களுக்கு உடனடி ஆடியோ பேமென்ட் அறிவுறுத்தல்களை வழங்கும் எனக்கூறப்படுகிறது.
குறிப்பாக கால்டாக்சி மற்றும் ஆட்டோ டிரைவர்கள், டெலிவரி ஏஜென்ட்கள், பார்க்கிங் போன்றவர்களுக்கு மிகவும் பயணுள்ளதாக அமையும். இது முழு சார்ஜில், 5 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும். 4ஜி கனெக்டிவிட்டியுடன் வருகிறது.
அதேபோல், பேடிஎம் மியூசிக் சவுண்ட்பாக்ஸ் பற்றி பார்க்கும்பொழுது இது கட்டண அறிவிப்புகளை கொடுப்பதற்கு மட்டுமல்லாமல், ப்ளூடூத் மூலமாக உங்கள் மொபைல் போனுடன் இணைத்து, உங்களுக்கு பிடித்த பாடல்கள் அல்லது இசையை கேட்க முடியும். சொல்லப்போனால், இது ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கர் போல செயல்படும் எனக் கூறப்படுகிறது.
முழு சார்ஜில் 10 நாட்கள் வரை பேக்கப் வழங்கும்.
இது, 4ஜி கனெக்டிவிட்டி மற்றும் 4W ஸ்பீக்கருடன் வருகிறது.
No comments:
Post a Comment