Saturday, 24 December 2022

Dec_24/24-12-2022_*தேசிய நுகர்வோர் தினம்

_*"தேசிய நுகர்வோர் தினம்" நமக்கான அடிப்படை உரிமைகள்.... மறுக்கப்பட்டால் என்ன செய்யலாம்....?*_

*_24-12-2022_*
தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு இன்றைய பதிவில் நுகர்வோர் உரிமைகள் பற்றி சில தகவல்களை பார்க்கலாம்.






 *நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்* 

1986 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. 

இதன் காரணமாகத்தான் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 24 அன்று நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

இத்தினத்தின் முக்கிய நோக்கம் நுகர்வோருக்கு அவர்களின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.

 *நுகர்வோருக்கான உரிமைகள்* 

• தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்யும்  உரிமை .

• ஆபத்து நிறைந்த பொருட்களில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமை.

• பொருட்களின் தரத்தையும் செயல்பாடு பற்றியும் தெரிந்து கொள்வதற்கான உரிமை.

• நுகர்வோர் தங்களின் நலன் தொடர்பாக முடிவு எடுக்கும் போது கேட்கப்படும் உரிமை.

• நுகர்வோர் தங்களுக்கான உரிமைகள் மீறப்படும் சமயத்தில் அதற்கு தீர்வு பெறும் உரிமை.

• நுகர்வோர் கல்வியை கற்றுக் கொள்வதற்கான உரிமை.

 *நுகர்வோர் குறைதீர் ஆணையம்* 

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்த பிறகு தேசிய மாநில மற்றும் மாவட்ட அளவிலான நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிறுவப்பட்டது. 

இந்த ஆணையத்தில் இதுவரை 54,85,267 புகார்கள் இந்தியா முழுவதிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இங்கு பதிவு செய்யப்பட்ட புகார்களில் 90 சதவீதம் புகார்களுக்கு தீர்வுகளும் காணப்பட்டுள்ளது.

 *எப்போது புகார் அளிக்கலாம்?* 

• குறிப்பிடப்பட்ட எடையை விட குறைவான அளவு விற்பனை செய்தல்

• கலப்படம் நிறைந்த பொருள் விற்பனை செய்யப்படுதல்

• தேவையற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க செய்தல்

• குழந்தைகளை இலக்காக வைத்து தவறாக வழி நடத்தும் விளம்பரங்கள் செய்தல்

• பொருட்கள் காலவதியான பிறகும் விற்பனை செய்தல்

 *புகார் அளிக்கும் முறை* 

நுகர்வோர் தாங்கள் வாங்கி பயன்படுத்தும் பொருட்களில் தரம் மற்றும் சேவை குறைபாடு இருப்பதை உணர்ந்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி புகார் அளிக்க முடியும்.

புகார் அளிக்கும்போது மனுவில் புகார்தாரரின் பெயர், முகவரி, எதிர் மனுதாரரின் பெயர், அவரது முகவரி, தாங்கள் வாங்கிய பொருள் அல்லது சேவை, புகாருக்கான காரணம், பொருள் வாங்கிய ரசீது, நுகர்வோருக்கு ஏற்பட்ட இழப்பீட்டின் விவரம் போன்றவற்றை தெளிவாக குறிப்பிட்டு இருக்க  வேண்டும்.

 *புகார் கட்டண விபரம்* 

புகார் செய்யவும் வழக்கு தொடரவும் தகுதி இல்லாத காரணங்களை கொண்டு நுகர்வோர் குறைதீர் மன்றத்தை சிலர் அணுகியதாலும் இந்த சட்டத்தை வைத்து எதிர்மனுதாரரை மிரட்டியதாலும் இதனால் எதிர் தரப்பினருக்கு தேவையற்ற கால விரயம் மற்றும் செலவு ஏற்பட்டதாலும் 2006 ஆம் ஆண்டு முதல் புகார் அளிக்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த புகாருக்கான கட்டணம் நுகர்வோர் வாங்கிய பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. அவை,

• 1 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை 200 ரூபாய்

• 5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை 400 ரூபாய்

• 10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை 500 ரூபாய்

 *நுகர்வோர் நீதிமன்றம்* 

ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் அமைய பெற்றுள்ளன .அதேபோன்று சென்னை மயிலாப்பூரில் மாநில நுகர்வோர் நீதிமன்றம் அமைந்துள்ளது. 

மாவட்ட குறைத்தீர் மன்றத்தில் தங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் நுகர்வோர் மாநில நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.

அங்கும் நுகர்வோருக்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தையோ அல்லது உச்சநீதிமன்றத்தையோ நுகர்வோர்கள் அணுகி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணத்தை பெற முடியும்.

 *மேலும் சில தகவல்கள்* 

• இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தினாலும் ஜம்மு காஷ்மீரில் இச்சட்டத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

• நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பொதுத்துறை, தனியார் துறை, கூட்டுறவுத்துறை போன்றவைகளுக்கும் பொருந்தும்.

• ஒரு பொருளை வாங்கிய நுகர்வோர் அதனை லாபம ஈட்டும் நோக்கத்தில் விற்பனை செய்தால் அவர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.

• ஒருவருக்கு இலவசமாக பொருட்கள் கொடுக்கப்பட்டு அதில் குறைபாடுகள் இருந்தால் அப்போதும் இந்த சட்டம் பொருந்தாது.

TNPSC_TAMIL_FULL_PART_A_&_B

🔜TNPSC_TAMIL_FULL_PART_A_&_B🔚:





பகுதி_அ_இலக்கணம்_முழுவதும்.pdf - Google Drive


👇👇👇





பகுதி_ஆ_இலக்கியம்_முழுவதும்.pdf - Google Drive

👇👇👇



Thursday, 22 December 2022

IIT Kharagpur has created National Digital Library for students for all subjects.

IIT Kharagpur has created National Digital Library for students for all subjects.  Below is the link :

          ndl.iitkgp.ac.in.

It contains 4 crore 6O lakh books.  Please share this information as much as possible for students to know & avail of this priceless facility for academic knowledge.

தமிழ்

தமிழ் அமுதம் 💖😊

நவதானியங்கள் ஒன்பது என நிர்மானித்த தமிழன் திசைகளை எட்டாகப் பிரித்தான்....



*2022*





கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
வட கிழக்கு
வட மேற்கு
தென் கிழக்கு
தென் மேற்கு

திசையை எட்டாகப் பிரித்த தமிழன் 
இசையை ஏழாகக் கொடுத்தான்... 

ச ரி க ம ப த நி

இசையை ஏழாக கொடுத்த தமிழன் 
சுவையை ஆறாக பிரித்தான்... 

இனிப்பு
கசப்பு
கார்ப்பு
புளிப்பு 
உவர்ப்பு
துவர்ப்பு

சுவையை ஆறாக பிரித்த தமிழன் 
நிலத்தை ஐந்தாக பிரித்தான்... 

குறிஞ்சி (மலைப்பகுதி) 
முல்லை ( வனப்பகுதி) 
நெய்தல் ( கடல் பகுதி) 
மருதம் ( நீர் மற்றும் நிலம்) 
பாலை ( வறண்ட பகுதி) 

நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன்
காற்றை நான்காக பிரித்தான்... 

தென்றல்
வாடை 
கோடை 
கொண்டல்

கிழக்கிலிருந்து வீசும் காற்று
கொண்டல் 

தெற்கிலிருந்து வீசும் காற்று
தென்றல்

மேற்கிலிருந்து வீசும் காற்று
கோடை 

வடக்கிலிருந்து வீசும் காற்று
வாடை

காற்றை நான்காக பிரித்த தமிழன்
மொழியை மூன்றாக பிரித்தான்... 

இயல் ( இயற் தமிழ் ) 
இசை ( இசைத்தமிழ்) 
நாடகம் ( நாடகத்தமிழ்) 

இம்மூன்றும் தமிழுக்கு இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்து கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது... 

இம்மூன்று மொழிகளுக்கும் தமிழர்கள் கொடுத்த முக்கியத்துவத்தையும் முத்தமிழ் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது... 

மொழியை மூன்றாக பிரித்த தமிழன்
வாழ்க்கையை இரண்டாக வகுத்தான்... 

அகம் 
புறம் 

கணவன் மனைவி வாழும் வாழ்க்கை
அக வாழ்க்கை... 

வெளியில் இருக்கும் வியாபாரம் மற்றும் சுய ஒழுக்கம் எல்லாம் 
புற வாழ்க்கை... 

வாழ்க்கையை இரண்டாக வகுத்த தமிழன்... 
ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான்... 

ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான் 
அதை... 
உயிரினும் மேலாக வைத்தான்... 

இதைத்தான் அய்யன் வள்ளுவர் இரண்டு அடியில் அழகாகச் சொன்னார்... 

"ஒழுக்கம் விழுப்பந் தரலான் 
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்"

பார்த்தேன், ...படித்தேன், .... மகிழ்ந்தேன் பகிர்ந்தேன் நட்புறவுகளே....

December 22_டிசம்பர் 22 : இந்திய ஒன்றிய அரசு எந்திரத்தின் கருப்பு தினம்!

டிசம்பர் 22 : இந்திய ஒன்றிய அரசு எந்திரத்தின் கருப்பு தினம்!

22.12.2003-ல் வாஜ்பாய் தலைமையிலான BJP அரசு அரசு ஊழியர்களின் ஓய்வூதிய உரிமைகளை 100% பறித்த NPS-ற்கான ஓய்வூதிய அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்த கொடுந்துயர நாள் இன்று.

இச்சட்டத்திற்கு திமுக, விசிக, காங். உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

CPM, CPI, திரினாமுல் காங். உள்ளிட்டவை வலிமையாக எதிர்த்தன.

கட்சி நிலைப்பாட்டிற்காக நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்த அஇஅதிமுக NPS-ஐப் பிரதியெடுத்து CPS என்ற பெயரில் முன்தேதியிட்டு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியது.

CPM இச்சட்டத்தை 100% எதிர்த்ததோடே தான் ஆட்சியிலிருந்த கேரளா, திரிபுரா & மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இறுதிவரை NPS-ஐ நடைமுறைப்படுத்தவே இல்லை.

கேரளாவில் காங். ஆட்சிப் பொறுப்பேற்றவுடனும், திரிபுராவில் BJP ஆட்சியைக் கைப்பற்றியவுடனும் NPS நடைமுறைக்கு வந்தது.

மேற்கு வங்கத்தில் ஆட்சிப்பொறுப்பேற்ற திரினாமுல் காங்கிரசும் CPM வழியில் இன்றுவரை NPS-ஐ நடைமுறைப்படுத்தவே இல்லை.

இச்சட்டத்தின் தீமையை உணர்ந்துள்ள காங்கிரஸ் தற்போது தான் ஆட்சிப் பொறுப்பேற்ற மாநிலங்களில் NPS-ஐ துணிவோடே இரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துவிட்டது.

கேரளாவில் CPM தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்றும் இன்று வரை முன்பு காங். செய்த தவறைத் திருத்தி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாது காலம் தாழ்த்தி வருகிறது.

ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி, YSR காங்., உள்ளிட்ட கட்சிகள் மாநில ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் NPS-ஐ இரத்து செய்யும் நோக்கில் குழு அமைத்துள்ளன / அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

2016-ல் TNGEA & TNPTF நடத்திய காலவரையற்ற வேலைநிறுத்தத்தின் பலனாக, அஇஅதிமுக CPS-ல் இறந்த / ஓய்வுற்ற ஊழியர்களுக்கான தொகை ஒப்பளிப்பு அரசாணை வெளியிட்டதோடே, CPS-ஐ நீக்க வல்லுநர்குழு அமைத்தது. ஆண்டுக்கணக்கில் உறக்கத்திலிருந்த குழு ஒருவழியாக அறிக்கையைச் சமர்ப்பித்து மூன்றாண்டுகளுக்கும் மேலாகிறது.

ஆட்சிப் பொறுப்பேற்றால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவேன் என்று கூறிய திமுக ஆட்சிக் கட்டிலேறி இரண்டாண்டுகள் கடந்த பின்னும் அதுகுறித்த எவ்வித நேரடி உறுதியளிப்பும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்றுவரை வெளியிடப்படவில்லை. சொல்லப்போனால், TNGEA, JACTTO-GEO என இரு மாநாட்டு மேடைகளில் உரையாற்றிய போதும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற சொல்லைக்கூட உச்சரிக்கவில்லை. மாறாக அவரது ஆட்சியின் நிதியமைச்சர் அவரது முன்னிலையிலேயே சட்டமன்றத்தில் NPS இரத்திற்கு எதிரான கருத்தைப் பதிவு செய்தார்.

திரு.ஸ்டாலினிற்குப் பிறகு கொரோனா பெருந்தொற்றின் பொருளாதார நெருக்கடியோடே முதல்வரான பல மாநில முதல்வர்கள் NPS-ஐ இரத்து செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அங்கெல்லாம் அம்மாநில அளவிலான NPS-ற்கு எதிரான தனித்த தொடர் போராட்டங்கள் உரிமையை மீட்டெடுத்துக் கொடுத்துள்ளன.

தற்போது கர்நாடகத்தில் பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையோடே காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டிலும், CPS ஒழிப்பு என்ற ஒற்றைக் கோரிக்கையோடே பெரும்பான்மை அரசு ஊழியர் & ஆசிரியர்களின் இயக்கங்கள் உறுதியான போராட்டத்தை முன்னெடுத்தால் மட்டுமே அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு விடியல் பிறக்கும்.

அதுவரையில் இறக்க உள்ள ஒவ்வொரு ஊழியரின் / ஆசிரியரின் குடும்பமும் இதுவரையில் இறந்த & ஓய்வுற்ற ஊழியரின் / ஆசிரியரின் குடும்பங்கள் போல இருளில் மூழ்கிக் கொண்டேதான் இருக்கும்.

இருளை எரித்து
விடியலைப் பிறப்பிக்கும்
தீக்குச்சி என்பது,
ஒன்றிணைந்து உயர்த்தும்
நமது கரங்களே!

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

*மாணவ மாணவியர்களின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மரணமடைந்த பட்சத்தில் _ மாணவ , மாணவிகளுக்கு ரூபாய். 75,000/-*

குரூப்பில் உள்ளவர்கள் கவனிக்கவும்" மாணவ மாணவியர்களின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மரணமடைந்த பட்சத்தில் இருக்கும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ , மாணவிகளுக்கு ரூபாய். 75,000 கல்வி மற்றும் பராமரிப்பு செலவுக்காக வங்கியில் நிரந்தர இருப்பாக நமது தமிழ் நாடு அரசு வழங்க உள்ளது. 




ஆகையால் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் இல்லாத பட்சத்தில் இருக்கும் மாணவ கண்மணிகள் அவரவர் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சான்றிதழ் பெற்றுக்கொண்டு அவர்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அல்லது கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த திட்டத்திற்க்கான அரசாணையை பதிவிறக்கம் செய்ய லிங்க்:https://drive.google.com/file/d/1Zm25QJSkG8vF90D0J_eEbW3AhCJBkvOB/view?usp=drivesdk

 *தெரிந்தவர்களுக்கு உதவியாக இருப்பின்* மகிழ்ச்சியே..

இப்படிக்கு. 

"தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம்

Sunday, 18 December 2022

TNPSC Group Examinations: 2023

TNPSC Group Examinations: 2023 ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு கால திட்ட அட்டவணை (TNPSC Annual Planner) தேர்வர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.




தேர்வு அட்டவணையில் குரூப் 1, குரூப் 2/2ஏ தேர்வு பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவுமில்லை. மேலும், குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும், 2024ல் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த தேர்வு திட்டம், தமிழகத்தில் உள்ள குறிப்பாக நடுத்தர மற்றும் கிராமப்புற இளைஞர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை உருவாக்கக் கூடியாதாக உள்ளது. குறிப்பாக, குரூப் 1 தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு இருப்பதால், தற்போது 38 வயதில் இருக்கும் பலர் மீண்டும் ஒருமுறை தேர்வெழுதும் வாய்ப்பை இழக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.




கடந்த 10 ஆண்டுகால தேர்வு அட்டவணை:

2020, 2021 ஆண்டுகள் தவிர்த்து, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் சிக்கலான சூழ்நிலையை டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள்தற்போது எதிர்கொள்ள உள்ளனர்.

2012

குரூப் 1 (2011-2013) தேர்வு - 25 பணியிடங்கள்

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு - 1870,

குரூப் 4 தேர்வு - 10718 பணியிடங்கள்
2013

குரூப் 1 தேர்வு - 79 காலியிடங்கள் ,

குரூப் 2 தேர்வு - 1064 காலியிடங்கள் ,

குரூப் 4 தேர்வு - 5566 காலியிடங்கள்

2014

குரூப் 4 தேர்வுகள் - 4963 காலியிடங்கள் ,

குரூப் 2ஏ தேர்வுகள் - 2,846 காலியிடங்கள்

2015

குரூப் 2 (2014-2015 மற்றும் 2015-16) தேர்வுகள் - 1863 பணியிடங்கள்

கிராம நிர்வாக அலுவலர் (2014 -15) தேர்வுகள் - 813 பணியிடங்கள்

குரூப் 1 தேர்வுகள் - 74 பணியிடங்கள்

குரூப் 2 ( 2014-15, 2015-16) தேர்வுகள் -1241 (நேர்காணல் பணியிடங்கள் )

2016

குரூப் 1 தேர்வு - 85 பணியிடங்கள் ,

குரூப் 4 (2015- 16) தேர்வு -5451 பணியிடங்கள்


2017

குரூப் 2ஏ நேர்காணல் இல்லாத தேர்வு (2017 -18) - 1,953 பணியிடங்கள் ,

குரூப் 4 ( 2015-2016, 2016-2017 and 2017-2018 ) தேர்வு - 9351 பணியிடங்கள்,

2018 குரூப் 2 நேர்காணல் தேர்வு - 1199

2019

குரூப் 4 (2018-2019, 2019-2020) தேர்வு - 6491 பணியிடங்கள் ,

குரூப் 1 தேர்வு (2016 - 2019) - 139 பணியிடங்கள்

2020 குரூப் 1 தேர்வு - 79 (கொரோனா தொற்று பொது முடக்க நிலை)

2021 கொரோனா தொற்று பொது முடக்க நிலை

2022

குரூப் II-IIஏ தேர்வு - 5413 பணியிடங்கள்,

குரூப் 4 தேர்வு -7301 பணியிடங்கள் ,

குரூப் 1 தேர்வு - 92 பணியிடங்கள்

குறிப்பு : மேற்படி அட்டவணையின் படி , தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முந்தைய ஆண்டு அதிகப்படியான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2001 முதல் 2006 ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பொருளாதார நிதிநெருக்கடி காரணமாக, குரூப் 1, 2,4 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருந்தது. 2006ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகே, ஆட்சேர்ப்பு நடைமுறை இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியது.


டிஎன்பிஎஸ்சி ஆட்சேர்ப்பு அறிவிப்பு

கடந்த 10 ஆண்டுகளில், கொரோனா காலக்கட்டங்களிலும் கூட, ஆட்சேர்ப்பு அறிவிக்கை தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மிகவும் இறுக்கமான போக்கை தமிழ்நாடு அரசு கடைபிடிப்பதாக டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, பொருளாதார நிச்சயமற்றத் தன்மை காரணமாக தனியார் துறையில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், மாநில அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் மேற்கொள்ள வேண்டுமே தவிர இறுக்கமான போக்கு தேவையில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

💡 *WIN_100%*

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...