இனிய காலை வணக்கம் எஸ் மகாலட்சுமியின் பொது அறிவு வினா விடை
பேரண்டம் தொடர்பான வினா விடைகள்
13. பல கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுதியே ............... ஆகும். - அண்டம்
14. பல கோடிக்கணக்கான அண்டங்களைக் கொண்ட தொகுதியே ................ ஆகும். - பேரண்டம்
15. இரவுவானில் ஒளிப்புள்ளிகள் போலப் புலப்படும் விண்மீன்கள் எல்லாம் தொலைவில் உள்ள ................... ஆகும். - சூரியன்கள்
16. சூரியன் உட்பட, கண்களுக்குப் புலப்படும் விண்மீன்கள் எல்லாம் எவற்றைச் சார்ந்தவை. - பால்வெளி அண்டம் (milkyway Galaxy)
17. பால்வெளி அண்டத்தை நமது முன்னோர்கள் எவ்வாறு அழைத்தனர்? - ஆகாய கங்கை
18. செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியு ன் ஆகிய கோள்கள் சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் ..................... நிலவுகிறது. - கடுங்குளிர்
19. வால்நட்சத்திரத்தின் வால் எப்போதும் சூரியனுக்கு ................... திசையில் அமையும். - எதிர்த்
20. வால்நட்சத்திரங்கள் விட்டுச் சென்ற துகள்கள் பூமியின் வளிமண்டலத்தின்மீது உராய்வதால் ஏற்படும் நிகழ்வு ................. ஆகும். - எரிநட்சத்திரம்
21. பூமியில் உள்ளதுபோல ..................., ....................., ..................... சந்திரனில் உள்ளன. - மலைகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள் எனப் பல நிலத்தோற்றங்கள்
22. சந்திரன் பூமியை................. தொலைவில் சுற்றி வருகிறது. - சராசரியாக 3,84,401 கி.மீ
23. வியாழன் கோளுக்கு எத்தனை துணைக்கோள்கள் உள்ளன. - 63
24. 60 துணைக்கோள்களைக் கொண்ட கோள் எது? - சனி
25. ................. கோள்கள் தற்சுழற்சியில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகின்றன. - வெள்ளி மற்றும் யுரேனஸ்
26. செவ்வாய் கோள் சூரியனை சுற்றிவர ஆகும் காலம் .............. - 687 நாட்கள்
27. எல்லாக் கோள்களும் ................... பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன. - நீள்வட்டப்
No comments:
Post a Comment