Wednesday, 30 June 2021

*TNPSC Group Exams*

*TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா? குரூப் 7, 8 பற்றி தெரியுமா?*


*TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதன் முழுவிவரங்கள் பின்வருமாறு?*
How Many Groups in TNPSC?

 *குரூப் – 1, குரூப் – 2, குரூப் – 3, குரூப் – 4, குரூப் – 5, குரூப் – 6, குரூப் – 7, குரூப் – 8* 

*குரூப் – 1 சேவைகள்* (Group-I) 
1)துணை கலெக்டர் 
(Deputy Collector) 
2)துணை போலீஸ் சூப்பிரண்டு (வகை – I) (Deputy Superintendent of Police) 
3)மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை 
(District Registrar, Registration Department) 
ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) /4)கலெக்டருக்கு தனிப்பட்ட உதவியாளர் (மேம்பாடு) (Assistant Director of RD Dept (Panchayat) /Personal Assistant (Development) to Collector) 
5)மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer) 
6)தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் பிரதேச அலுவலர் 
(Div. Officer in Fire and Rescue Services) 
7)உதவி ஆணையர் (சி.டி.) (Asst Commissioner) 
8)கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (Deputy Registrar of Co-operative Societies)

*குரூப் – 1A சேவைகள்* (Group-I A) 
1)உதவி காடுகளின் பாதுகாவலர் (Assistant Conservator of Forests)

*குரூப் – 1B சேவைகள்*
 (Group-I B) 
1)உதவி ஆணையர் H.R & C.E (Assistant Commissioner, H.R. & C.E)

*குரூப் – 1C சேவைகள்* (Group-I C)
1)மாவட்ட கல்வி அலுவலர் DEO 
(District Educational Officer)
2)ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு -2 
-----------------------------
*குரூப் – 2 சேவைகள்* (நேர்முகத்தேர்வு பதவிகள்)
(Group-II) 
1)துணை வணிக வரி அதிகாரி 
2)நகராட்சி ஆணையர், தரம் -2 
3)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக இல்லாதவர்) 
4)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக திறமையானவர்) 
5)துணை பதிவாளர், 
தரம் -2 
6)தொழிலாளர் உதவி ஆய்வாளர் 
7)உதவி பிரிவு அதிகாரி (சட்டம் மற்றும் நிதி தவிர துறை) 
8)உதவி பிரிவு அதிகாரி (சட்டத்துறை) 
9)உதவி பிரிவு அதிகாரி (நிதித்துறை) 
10)தமிழ்நாடு பொது சேவையில் உதவி பிரிவு அதிகாரி ஆணைக்குழு 
உதவி பிரிவு அதிகாரி-கம்-புரோகிராமர் 
11)உதவி பிரிவு அதிகாரி, தமிழ்நாடு சட்டமன்றம் செயலக சேவை 
12)நன்னடத்தை அலுவலர், சமூக பாதுகாப்பு 
நன்னடத்தை அலுவலர், 13)சிறைத் துறை 
தொழில்துறை கூட்டுறவு அதிகாரி, கைத்தொழில் ஆணையர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் 
14)பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்பு 
15)சர்வே இயக்குநர் மற்றும் தீர்வுகளுக்கான Reg.Co-op Society இல் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் 
16)வரவேற்பாளர், தமிழகம் விருந்தினர் மாளிகை, 17)உதகமண்டலம் தொழில்துறை கூட்டுறவு தொழில்துறை மேற்பார்வையாளர் 18)கமிஷனர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் துறை 
19)திட்ட உதவியாளர் ஆதி-திராவிதர் மற்றும் ....
 பழங்குடியினர் நலத்துறை 
தணிக்கை பிரிவில் உள்ள தணிக்கை ஆய்வாளர் 
இந்து மத மற்றும் அறக்கட்டளை நிர்வாகத் துறை 
உள்ளூர் நிதி தணிக்கைத் துறையின் உதவி ஆய்வாளர் மற்றும் உள் தணிக்கைத் துறை
மேற்பார்வையாளர் / மூத்த எழுத்தர் / தலைமை கணக்காளர் / ஜூனியர்தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்தல் கண்காணிப்பாளர் துணை சேவை 
உதவி ஜெயிலர், சிறைத்துறை 
வருவாய் துறையில் உதவியாளர் டவுன் பஞ்சாயத்துத் துறையில் 
நிர்வாக அதிகாரி, 
தரம் -2 டி.வி.ஐ.சியில் 
சிறப்பு உதவியாளர் 
கைத்தறி ஆய்வாளர் பொலிஸ் திணைக்களத்தின் புலனாய்வு பிரிவில் 
சிறப்பு கிளை உதவியாளர். 
பால் உற்பத்தியில் கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் மற்றும் பால் மேம்பாடு 
தொழிலாளர் உதவி ஆய்வாளர் 
தணிக்கை உதவியாளர் நெடுஞ்சாலைத் துறையில் கணக்கு கிளையில்.
*குரூப் – 2A சேவைகள்* (நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகள்) (Group-II A) 

கருவூல மற்றும் கணக்குத் துறையில் கணக்காளர் 
ஜூனியர் கூட்டுறவு கணக்காய்வாளர் செயலகத்தில் 
உதவியாளர் (சட்டம் மற்றும் நிதி தவிர) 
இளைய தொழில்நுட்ப உதவியாளர், சிவில் சப்ளைஸ் துறை 
தனிப்பட்ட எழுத்தர் (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர) 
தனிப்பட்ட எழுத்தர் (சட்டத்துறை) 
தனிப்பட்ட எழுத்தர் (நிதித்துறை) 
தமிழ்நாடு பொது சேவையில் தனிப்பட்ட எழுத்தர் ஆணைக்குழு 
தனிப்பட்ட எழுத்தர், தமிழ்நாடு மாநில திட்டமிடல் ஆணையம் 
தமிழக சட்டசபையில் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் செயலக சேவை 
உதவியாளர் பல்வேறு துறைகள் 
செயலகத் துறையில் உதவி (நிதித்துறை) 
தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் உதவியாளர் 
தமிழக சட்டசபையில் கீழ் பிரிவு எழுத்தர், செயலகம் 
திட்டமிடல் இளைய உதவியாளர் 
வரவேற்பாளர் (சிறு சேமிப்புத் துறை) 
சட்டத்துறையில் உதவியாளர் 
தமிழ்நாடு சட்டமன்ற சட்டசபை சேவையில் உதவியாளர்
ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – 3

*குரூப் – 3 சேவைகள்* (Group-III)

தீயணைப்பு நிலைய அதிகாரி
*குரூப் – 3A சேவைகள்* (Group-III A) 
கூட்டுறவு சங்கங்களின் ஜூனியர் இன்ஸ்பெக்டர் 
தொழில்துறை கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர் 
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பயிற்சி பிரிவு) துறையில் கடை வைத்திருப்பவர் கைத்தொழில் மற்றும் வணிகத் துறையில் ஸ்டோர்-கீப்பர், கிரேடு -2
*குரூப் – 4 சேவைகள்* (Group-IV) 
ஜூனியர் உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத) 
பில் கலெக்டர் 
தட்டச்சு செய்பவர் 
ஸ்டெனோ-டைப்பிஸ்ட், கிரேடு -3 
கள ஆய்வாளர் 6. வரைவாளர்
*குரூப் – 5A சேவைகள்* (Group-V A)

செயலகத்தில் உதவியாளர் (இடமாற்றம் மூலம் ஆட்சேர்ப்பு) (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர)
*குரூப் – 6 சேவைகள்* (Group-VI)

வன பயிற்சியாளர்
*குரூப் – 7A சேவைகள்* (Group-VII A) 
நிர்வாக அதிகாரி, 
தரம் -1
*குரூப் – 7B சேவைகள்* (Group-VII B) 
நிர்வாக அதிகாரி, 
தரம் – 3
*குரூப் – 8 சேவைகள்* (Group-VIII) 
நிர்வாக அதிகாரி, 
தரம் – 4

***********************

Tuesday, 29 June 2021

*National digital library*

National digital library


National digital library created by Central government  for students for all subjects below is the link- https://ndl.iitkgp.ac.in
It contains 4.60crores of books. 
Please share it as much as possible to students to know and reach this priceless knowledge.

Tuesday, 22 June 2021

*ஜூன் 22*

இன்று ஜூன் 22-ம் தேதி தேசிய ஆனியன் ரிங்ஸ்  தினம் கடைபிடிக்கப்படுகிறது, டான் பிரவுன் தினம் இன்று (ஜூன் 22)

*ஜூன் 21-பன்னாட்டு யோகா நாள்*

*ஜூன் 21-பன்னாட்டு யோகா  நாள்*


ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் பன்னாட்டு யோகா நாளாக ஜூன் 21 ஆம் நாளை  அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐ.நா பொதுச்சபையில் வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். இந்த தீர்மானத்துக்கு 177 நாடுகள் ஆதரவு அளித்ததன் அடிப்படையில் ஜூன் 21ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பன்னாட்டு யோகா  நாளாக கடைபிடிக்கப்படும் என்று ஐ.நா. அறிவித்தது.

*ஜூன் -20_உலக அகதிகள் தினம்*

*உலக அகதிகள் தினம்*


உலகில் பஞ்சம், பட்டினி, வறட்சி, போர் அல்லது பல்வேறு வன்முறைகள், இயற்கை சீற்றங்களால் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் , அகதிகள் என அழைக்கப்படுகின்றனர்

எங்கு போவதென்று தெரியாமல், பிறந்த மண்ணை விட்டு, பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து பல துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்து வரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வை,  உலக மக்களிடம் கொண்டுச் செல்வதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.


இரண்டாம் உலகப்போரின்போது, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து ஏராளமானோர் வெளியேறினர். அப்போதே, அகதிகள் ஒரு சட்டபூர்வ குழுவாக வரையறுக்கப்பட்டனர்.


அகதிகளுக்கு பாதுகாப்புத் தொடர்பான வேலைகளை செய்வது, ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR) 2009ம் ஆண்டு ஜூன், சட்டத்திற்கு புறம்பான துன்புறுத்தல்கள், கலவரங்கள் காரணமாக உலகில் 42 மில்லியன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக பிபிசி உலக சேவை, அறிக்கை ஒன்றை வெளியிட்டது


எனவே, ஒரு மனிதன் தான் பிறந்த மண்ணைவிட்டு, வேறு நாட்டிற்கு தஞ்சம் புகுவது என்பது மிகவும் வேதனைக்குள்ளானது.


 அந்த சூழலில் வரும் அகதிகளின் தேவை, அவர்களின் நிலை அறிந்து அவர்களுக்கென முறையானது.

*சூன் 3-வது ஞாயிறு:**உலக தந்தையர் தினம்.*

*சூன் 3-வது ஞாயிறு:*
*உலக தந்தையர் தினம்.*


சாப்பிடுறியானு கேட்பது தாய் என்றால், சாப்பிட்டானா எனக் கேட்பது தந்தை.

மனைவி பிரசவ அறையில் இருக்கும் போது ஓராயிரம்முறை பிரசவ வலியை உள்ளுக்குள் அனுபவிப்பவனே தந்தை.

குடும்பமே நோய்வாய்ப்பட்டு படுத்தாலும், சிங்கில் மேன் ஆர்மியாக  ஒத்தையாய் சமாளிப்பவனே தந்தை.

காலையில பேப்பர் படிக்க உட்கார்ந்தா காபி கொடுத்த கையோடு ஒரு கூடை வெங்காயத்தை உறிக்க வச்சாலும் உறிச்சு முடிச்சு வேற என்ன வேலை இருக்குனு கேட்பார்.

பிள்ளைகளின் எதிர்காலத்தையே ஓய்வாய் இருக்கும்போது நினச்சுப்பார்த்து நிம்மதி அடைவார்.

வீட்டில கரித்துணி இல்லைனா நம்ம பனியனத்தான் உடனே எடுப்பாங்க. இதுக்கும் சேர்த்தியே நாம உள்பனியன் வாங்க வேண்டியுள்ளது.

ஒவ்வொரு விலை உயர்ந்த சர்ட்டுக்குள்ளும் ஓட்டையான உள்பனியன் போட்டிருப்பவனே தந்தை.

எனி டைம் ஏடிஎம் மிஷினாக உபயோகிப்பது தந்தையின் பர்ஸ்தான்.

குடும்பத்தோட சினிமாவுக்கு போனால் இடைவேளையில் யூரின் கூட போகாம இரண்டு கையிலும் ஸ்நேக்ஸ் வாங்கி சிந்தாமல் சிதறாமல் கொண்டுவரும், வாழும் தெய்வம்தான் தந்தை.

விரும்பிய சேனலை  பார்க்க வழியில்லாம, கண்ட சேனலை பார்ப்பவன்தான் தந்தை.

எந்த வெளியூர் பயணம் போனாலும், குழந்தையைத் தூக்கிக் கொண்டு மனைவியின் பின்னால் அலைபவன்தான் தந்தை.

குழந்தையை மட்டுமல்ல... ஒரு குடும்பத்தையே தூக்கும் ஜாக்கிதான் தந்தை.

*தந்தையர் தின வாழ்த்துகள்.*

*"எட்டு" வடிவ நடை பயிற்சி*

"எட்டு" நடை பயிற்சி 

"எட்டு" போடுங்கள் - நோய் எட்ட விடாமல் செய்யுங்கள்.”


எட்டு என்பது ஒரு நம்பர். ஒன்றிலிருந்து பத்து வரை சொல்லும்போது ஏழு என்ற நம்பருக்கு அடுத்ததாக வருவது தான் "எட்டு". இது குழந்தைகள் நாம் கேட்கும் கேள்விக்கு சொல்லும் பதில்.

நாம் இப்பொழுது பார்க்கப்போவது "எட்டு" போடுவதனால் கிடைக்கும் பலன்களை!

இது என்னய்யா பெரிய விஷயம்?

ஒரு பென்சிலை அல்லது பேனாவை எடுத்துக்கொண்டு ஒரு தாளில் இரண்டு வட்டங்கள் அடுத்து அடுத்து போட்டால் அது தான் "எட்டு".
அந்த எட்டு இல்லேப்பா. இது வேற எட்டு. RTO ஆபிசில் two wheeler லைசென்ஸ் வாங்குவதற்கு, நம்மை எட்டு போட சொல்லுவார்கள். ஒரு குறுகிய ரோட்டில் அல்லது ஒரு குறுகிய இடத்தில, வண்டியை ஓட்டிக்கொண்டு மெதுவாக கீழே விழாமல் மற்றும் காலை தரையில் ஊன்றாமல் நன்றாக balance செய்து கொண்டு இடது புறம் வளைத்து வண்டியை திருப்பிக்கொண்டு வந்து, உடனே வலப்புறம் வளைத்து கொண்டு வந்து முடிக்கவேண்டும். சொல்லுவதற்கு எளிதாக தெரிந்தாலும், நன்றாக வண்டி ஓட்ட தெரிந்தவர்களும் சில நேரங்களில் கோட்டை விட்டு விடுவார்கள்.

நாம் இப்பொழுது பார்க்கப்போவது - அதே எட்டு போடுவது தான். ஆனால் வண்டியுடன் அல்ல. "உடல்" என்று சொல்லப்படுகின்ற வண்டியைக்கொண்டு.

உடலை வருத்தி செய்தால் தான் பயிற்சியா நடைபயிற்சியே போதும் என்ற கருத்து பொதுவானதாக இருக்கிறது. இது ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் உண்டு. ஆனால் பயிற்சியில் நடைபயிற்சியிலும் ஒரு பயிற்சி உண்டு என்பதை சித்தர் காலத்திலேயே கடைப்பிடித்திருக்கிறார்கள்.

பாரம்பரியமாக நமது முன்னோர்கள் கண்டறிந்த பயிற்சிகளெல்லாம் மேலை நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு அதன் ஆரோக்கியம் வெளிக்கொணரப்பட்டு மீண்டும் பொலிவு மாறாமல் புதுமையாக வருவதைப் போன்றுதான் இந்த 8 வடிவ நடைபயிற்சியும் இன்பினிட்டி வாக்கிங் என்ற பெயரில் நம் நாட்டுக்கே திரும்பி இருக்கிறது.

நமது உடலில் இருக்கும் வர்மபுள்ளிகள் அதிகளவு உள்ளங்காலில் நிறைந்திருக்கிறது. இந்த 8 வடிவ நடைபயிற்சியை வெற்று காலில் செய்யும் போது அந்தப் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலில் உள்ள வர்மப் புள்ளிகளின் ஆற்றலை அதிகரிக்கிறது.

யாருக்கு இது தேவையானது?

1) உடல் பருத்து எடை குறைக்க பாடுபடுவர்களுக்கு; 
2) ஏதாவது நோயினால் படுக்கையில் படுத்து உடலுக்கு சிறிது தெம்பை கொண்டு வரவேண்டும் என்பவர்களுக்கு;
3) தெருவில் நடை பயில கூச்சப்படுபவர்களுக்கு;
4) காரில் இருந்து இறங்க மறுப்பவர்களுக்கு ; 
5) “எனக்கு சகல வசதிகளும் இருப்பதால் எதைப்பற்றியும் எனக்கு கவலை இல்லை” என்று சொல்லிக் கொண்டு ஆரோக்யத்திற்காக அலைபாய்பவர்களுக்கு; 
6) இன்ன பிற நபர்களுக்கு.

ஆக யார் வேண்டுமானாலும் எட்டு போடலாம்.

இதன் பலன்கள் - சொல்லி முடியாது. நம்முடைய முன்னோர்கள் கண்டுபிடித்தது. வயலுக்கும் வரப்புக்கும் நடந்து நடந்து பல மைல் தூரம் சென்று வந்தவர்கள் "எட்டு" போடுவதால் பிரத்யேகமாக பல பலன்கள் கிடைக்கும் என்று கருதியே இதை செய்ய சொல்லி வந்தார்கள்.

சரி; இப்பொழுது நாம் விசயத்திற்கு வருவோம்.

எட்டு என்பது இரண்டு அடுத்து அடுத்து உள்ள இரண்டு வட்டங்கள். இரண்டு வட்டங்களும் ஒரே மாதிரியான அளவுகள் உள்ளவை. வட்டத்தில் ஆரம் சரியாக நான்கு அடிகள். (Four Feet). எந்தவிதமான கஷடமும் இல்லாமல் இருக்கும் ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். மொட்டை மாடி மிகவும் நல்லது. அல்லது வீட்டின் முன்புறம் இடத்தை தேர்வு செய்யலாம். குறைந்தது 20 அடி நீளம் - 12 அடி அகலம் உள்ள நீள் செவ்வக இடமாயிருக்கவேண்டும். வடக்கு தெற்காக இரண்டு வட்டங்கள் இருக்க வேண்டும். அதாவது நமக்கு தேவையான இடம்: வடக்கு தெற்காக 20 அடி - கிழக்கு மேற்காக 12 அடி. இப்போது ஒரு மைய புள்ளியை தேர்வு செய்யுங்கள். அந்த மைய புள்ளியில் இருந்து, வடக்கு திசையில் 4 அடி தள்ளி ஒரு புள்ளி வைக்கவும். இது வடக்கு வட்டத்தின் மையம். இதே போல் தேர்வு செய்யப்பட்ட மையப்புள்ளியிலிருந்து தெற்கு திசையில் 4 அடி தள்ளி ஒரு புள்ளி வைக்கவும். இது தெற்கு வட்டத்தின் மையப்புள்ளி. இப்பொழுது வடக்கு வட்டத்தின் மையத்தை அடிப்படையாக கொண்டு, 4 அடி ஆரத்தில் ஒரு வட்டம் வரையுங்கள். அதேபோல் தெற்கு வட்டத்தின் மையத்தை அடிப்படையாக கொண்டு, 4 அடி ஆரத்தில் ஒரு வட்டம் வரையுங்கள். இப்பொழுது இரண்டு வட்டங்களை உருவாக்கி விட்டீர்கள். இப்பொழுது அளந்தீர்கள் என்றால், வடக்கு தெற்காக 16 அடி இருக்கும்; கிழக்கு மேற்காக 8 அடி இருக்கும். இது தான் விதிக்கப்பட்ட முறை. இடம் குறைவாக இருப்பதன் காரணமாக அளவு குறைவாக வட்டங்கள் வரையலாம். சொல்லப்பட்ட அளவு இருக்கும் பட்சத்தில், எதிர்பார்க்கும் பயன்கள் கிடைக்கும். குறைந்த வட்டத்தில் உடலை நன்றாக வளைத்து திருப்ப முடியாது. பெரிய வட்டத்தில், சுலபமாக உடலை வளைத்து திருப்பலாம். அளவு கூடினாலும், அல்லது குறைந்தாலும், எதிர்பார்க்கும் பலன்கள் கிடைப்பதில்லை.

வட்டங்கள் ready யாகி விட்டன.

எட்டு வடிவ கோட்டின் மீது நின்று பயிற்சியைத் தொடங்குங்கள். முதலில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 15 நிமிட நேரம் எட்டு வடிவ நடைபயிற்சியைச் செய்யுங்கள். முதல் 15 நிமிடங்கள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நடக்க வேண்டும். அடுத்த 15 நிமிடங்கள் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நடக்க வேண்டும்.

இந்த எட்டு பயிற்சியை எட்டி எட்டி செய்ய கூடாது. அதாவது வேக வேகமாக செய்ய கூடாது. அனுபவித்து ஒவ்வொரு (step) அடி ஆக செய்ய வேண்டும். கோவில்களில் நிறைய பெண்கள் கோவில் பிரகாரத்தில் அடிமேல் அடிவைத்து ஒரு பிரார்த்தனைக்காக நடந்து வருவார்கள். அது போலத்தான். அப்படி செய்தால் தான் அதன் முழுப்பலனும் கிடைக்கும்.
- பத்தாவது சுற்று முடியும் போது, மூச்சு வாங்க ஆரம்பிக்கும். அதாவது, உங்கள் நுரையீரல், காற்றை அதிகம் சுவாசிக்க துடங்கும். அதிகம் காற்று உள்ளே செல்லும்போது, oxygen அளவு கூட ஆரம்பிக்கும். oxygen கூட கூட, உடலிலுள்ள செல்கள் சுறு சுறுப்பாக தொடங்கும். பழைய செல்கள் அழிந்து, உயிரோட்டமுள்ள செல்கள் வளர ஆரம்பிக்கும்.

- இடது புறம் வயிறு மற்றும் இடுப்பில் உள்ள தொங்கு சதைகள் குறைய தொடங்கும். அதே போல வலது புறம் உள்ள தொங்கு சதைகள் குறைய தொடங்கும். நாளடைவில் உடல் ஒரு நேர் கோடு (பனை மரம்) போல மாற ஆரம்பிக்கும்.

- மூச்சு வேறு வழியில்லாமல் அதிகம் உள்ளேயும் வெளியும் செல்வதால், பிராண சக்தி வலுவடையும். அதாவது உயிர் சக்தி வலுவடையும். இதன் காரணமாக உள்ளுறுப்புகளில் தோன்றக்கூடிய பிரச்சினைகள் மறைய தோன்றும்.

- நீரிழிவு நோய் கட்டுக்குள் வர தொடங்கும்.

- குடல் இறக்க பிரச்சினை தீர்வடையும்.

- இடமும் வலமும் வளைந்து வளைந்து செல்வதால், உடல் சமநிலை கட்டுக்குள் வரும்.

- கண் பார்வை தீர்க்கமடையும்.

-மொத்தத்தில் ஒரே பயிற்சியில் - ஒன்பதாயிரம் பலன்கள்.

ஆனால் ஒரு condition. 21 சுற்று முடித்து விட்டு, ஒண்ணையும் காணோமே என்று நினைத்து விடக்கூடாது.

குறைந்தது ஒரு மண்டலம் (அதாவது 48 நாட்கள்) செய்ய வேண்டும். அதாவது காலை ஒரு முறை மற்றும் மாலை ஒரு முறை. தெம்பு உள்ளவர்கள் 21 சுற்றுக்கு மேலும் சுற்றலாம். ஆனால் அதிகம் வேண்டாம்.

48 நாட்கள் கழிந்த பின்னர் நீங்களே உணர்வீர்கள். 

ஆழ்ந்த நிலை தூக்கம் நடைபெறும். மலச்சிக்கல் இருக்காது. மனம் ஒருநிலைப்படும். எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்வதால் இயற்கையாகவே உடலில் உள்ள 17 வகை நோய் நீங்கும்.

1. அஜீரணம்,
2. மலச்சிக்கல்,
3. இருதயம் சீராகும்.
4. மூச்சு திணறல்,
5. மூக்கடைப்பு,
6. மார்புச்சளி,
7. கெட்ட கொழுப்பு கரையும்,
8. உடல் எடை குறையும்,
9. மனஅழுத்தம்,
10. ரத்த அழுத்தம்,
11. தூக்கமின்மை,
12. கண் பார்வை தெளிவாகும்,
13. கெட்டவாயு வெளியேறும்,
14.சக்கரங்கள் சமநிலையில் இயங்கும்,
15.தலைவலி, பின்பக்க தலைவலி சரியாகும்,
16.குதிகால் வலி, மூட்டு வலி, சரியாகும்,
17.சர்க்கரை நோய் சரியாகும்.

உடல் நலன் பேணுங்கள். நம்மை படைத்தவனால் நமக்கு கொடுக்கப்பட்ட ஒரு பொக்கிஷம்- நமது உடல். ஆரோக்கியம் காப்பது நமது கடமை. .

"உடல் வளர்த்தல் உயிர் வளர்த்தலேயாகும்" – திருமூலர்

Thursday, 17 June 2021

*நவம்பர்- 09 தேசிய நீதித்துறை சேவைகள் தினம்*

National legal service authority act  நடைமுறைக்கு வந்த ஆண்டு 1995, நவம்பர் 09.. 



ஆகையால் நவம்பர்- 09 தேசிய நீதித்துறை சேவைகள் தினமாக கொண்டாடப்படுகிறது..

Tuesday, 15 June 2021

* June 15 உலக முதியோர் கொடுமை பற்றிய விழிப்புணர்வு நாள் World Elder Abuse Awareness Day*

*🌹உலக முதியோர் கொடுமை பற்றிய விழிப்புணர்வு நாள் World Elder Abuse Awareness Day(June15)🌹*

முதியோர் வன்கொடுமை ஆய்வு குறித்து, 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' அமைப்பின், ஆய்வறிக்கை கூறுவதாவது 1947ல் நாடு முழுவதும், 23 சதவீதமாக இருந்த முதியோருக்கு எதிரான கொடுமைகள், தற்போது, 50 சதவீதமாக அதிகரித்து விட்டது


.டில்லியில், 22 சதவீதம் என, குறைவாகவும், பெங்களூருவில், 75 சதவீதம் என, அதிகமாகவும் கொடுமைகள் நடக்கின்றன. சென்னையில், 53 சதவீதமாக உள்ளது.


சென்னையில், மருமகளால், 37 சதவீதமும், மகன்களால், 56 சதவீதமும் கொடுமைகள் நடந்ததாக பதிவுகள் இருந்தன.தற்போது, மகன்களைக் காட்டிலும், மருமகள்கள் மிஞ்சிவிட்டனர்.

 மருமகள்களால் ஏற்படும் கொடுமை, 53 சதவீதமாக உயர்ந்ததோடு, மகன்களால் ஏற்படும் கொடுமைகள், 38 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் அவ்வாய்வறிக்கை கூறுகிறது.


 உலகமெங்கிலும் உள்ள வயோதிக மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தான விழிப்புணர்வை உருவாக்குவதே இன்றைய நாளின் குறிக்கோளாகும்  .

*டெல்டா பிளஸ் – புதிய வகை கொரோனா வைரசின் மாறுபாடு கண்டுபிடிப்பு*

டெல்டா பிளஸ் – புதிய வகை கொரோனா வைரசின் மாறுபாடு கண்டுபிடிப்பு



முன்னுரை:

  • B.1.617.3 திரிபு என்றும் அழைக்கப்படும் SARS-CoV-2 இன் டெல்டா மாறுபாடு, இப்போது, ​​வைரஸின் டெல்டா மாறுபாடு டெல்டா பிளஸ் அல்லது ‘AY  1’  என அழைக்கப்படுகிறது.
  • ஆரம்ப அறிக்கைகளின்படி, இந்த புதிய டெல்டா பிளஸ் மாறுபாடு மோனோக்ளோனல் ஆன்டிபாடி காக்டெய்ல் சிகிச்சைக்கு எதிரான எதிர்ப்பின் அறிகுறிகளைக் காட்டியுள்ளது, இது சமீபத்தில் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஸ்கோ) ஒப்புதல் அளித்தது.

டெல்டா பிளஸ் மாறுபாடு என்றால் என்ன?

  • SARS-CoV-2 இன் டெல்டா பிளஸ் மாறுபாட்டின் உருவாக்கம் K417N பிறழ்வின் விளைவாகும். இது ஸ்பைக் புரதத்தின் பிறழ்வு, இது வைரஸ் மனித உயிரணுக்களில் நுழைந்து பாதிக்க காரணமாகிறது.
    ஜெனோமிக் சீக்வென்சிங்கில் நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானி பானி ஜாலி, ட்விட்டரில் புதிய மாறுபாட்டைப் பற்றி எழுதினார், “ஸ்பைக் பிறழ்வு K417N கொண்ட டெல்டாவின் (பி .1.617.2) ஒரு சிறிய எண்ணிக்கையிலான காட்சிகளை ஜிசாய்டில் காணலாம். இன்றைய நிலவரப்படி, இந்த காட்சிகள் 10 நாடுகளின் மரபணுக்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. “
  • “பீட்டா மாறுபாட்டில் (பி .1.351) காணப்படும் பிறழ்வுகளில் கே 417 என் பற்றிய கவலைகள் காரணமாக, இந்த வரிசைகள் சமீபத்தில் டெல்டாவின் சப்லைன் AY1  (பி .1.617.2.1) என பெயரிடப்பட்டுள்ளன,”
  • டெல்டா பிளஸ் மாறுபாடு இந்தியாவில் இருந்து ஜூன் 7 வரை ஆறு மரபணுக்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று பொது சுகாதார இங்கிலாந்து விளக்கமளித்துள்ளது. தற்போது வரை, SARS-CoV-2 இன் டெல்டா மாறுபாட்டின் மொத்தம் 63 மரபணுக்கள் இருப்பதை இங்கிலாந்து சுகாதார நிறுவனம் தீர்மானித்துள்ளது. அவற்றில் K417N பிறழ்வு உள்ளது.

டெல்டா பிளஸ் மாறுபாடு:

  • டெல்டா பிளஸ் மாறுபாடு  இந்தியாவில் இன்னும் குறைவாகவே உள்ளது. “K417N க்கான மாறுபாடு அதிர்வெண் இந்த நேரத்தில் இந்தியாவில் அதிகம் இல்லை. இந்த காட்சிகள் பெரும்பாலும் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்தவை” என்று டெல்லியைச் சேர்ந்த CSIR-இன்ஸ்டிடியூட் ஆப் ஜெனோமிக்ஸ் அண்ட் ஒருங்கிணைந்த உயிரியல் (IGIP) விஞ்ஞானி வினோத் ஸ்கேரியா கூறினார். . “டெல்டா பிளஸ் மாறுபாட்டிற்கான பயண வரலாறுகள் உடனடியாக கிடைக்கவில்லை” என்று ஸ்கேரியா மேலும் கூறினார்.
  • இந்தியாவைத் தவிர, உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலிருந்து இந்த காட்சிகள் வந்துள்ளன. இவற்றில் அடங்கும் – அமெரிக்கா, கனடா, யுனைடெட் கிங்டம், ரஷ்யா, ஜப்பான், போர்ச்சுகல், போலந்து, துருக்கி, நேபாளம் மற்றும் சுவிட்சர்லாந்து, வெடிப்பு தகவல் படி.
  • “பெரிய (T95I) கிளஸ்டரைப் பார்க்கும்போது, ​​AY.1 பல முறை சுயாதீனமாக எழுந்திருப்பது போல் தெரிகிறது மற்றும் வரையறுக்கப்பட்ட மரபணு கண்காணிப்பு உள்ள நாடுகளில் காணப்படுவதை விட இது மிகவும் அதிகமாக இருக்கலாம்” என்று பானி ஜாலி கூறினார்.

முடிவுரை :

  • மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சையை எதிர்க்கும் டெல்டா பிளஸ் மாறுபாடு SARS-CoV-2 இன் டெல்டா மாறுபாட்டில் உள்ள பிறழ்வு COVID-19 க்கான மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சையை எதிர்ப்பதாக விஞ்ஞானிகள் விளக்கினர். “கே 417 என் குறித்து கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் காசிரிவிமாப் மற்றும் இம்டெவிமாப் ஆகியவற்றிற்கு எதிர்ப்பைக் குறிக்கும் சான்றுகள் ஆகும். ஆன்டிபாடி காக்டெய்ல் தற்செயலாக இந்தியாவில் மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலிடமிருந்து ஒரு EUA ஐப் பெற்றுள்ளது” என்று வினோத் ஸ்கேரியா குறிப்பிட்டார்.

*ஜூன் 14, வரலாற்றில் இன்று.*

ஜூன் 14, 
வரலாற்றில் இன்று.


சே குவேரா எனும் விடுதலைப் போராளி பிறந்த தினம் இன்று.


இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது. 
ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைக்கு எதிராக, ஒருவன் நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயர் சே குவேரா.
அவர் இயற்பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (ஜூன் 14, 1928), அதாவது வாய் நிறைய கூழாங்கற்களை போட்டு, ஸ்பானிய‌ மொழியினை உச்சரித்தால் வரும் பெயர். சே என்பது ஒரு வியப்புச்சொல் என்கின்றார்கள், அதாவது நமது தமிழில் வியப்பின் உச்சத்தில் ஒரு ஆச்சரியமாக‌ சொல்வோம் அல்லவா? அந்த ஆச்சரியமான‌ உச்சரிப்புத்தான் என்கின்றார்கள்.
அர்ஜெண்டினாவில் பிறந்தவர், தந்தை இடதுசாரி, இவர் வீட்டில் பெரிய குடும்பத்தின் செல்லப் பிள்ளை. அக்காலங்களில் ஸ்பெயினை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்த காலம், குவேரா அந்த பின்னணியில் வளர்ந்தார். ஒரு மனிதன் படிக்கவேண்டிய அத்தனை வரலாறுகளை, அதாவது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் என சகலரையும் படித்தார்.
முக்கியமாக தென் அமெரிக்க நாடுகளில் முதல் புரட்சியாளனாக கருதப்படும் ஜோஸ் மார்த்தி எனும் பெரும் போராளியினை குருவாகவே நினைத்து வளர்ந்தார்,
பின் மருத்துவக் கல்லூரியில் படித்தார் ஆயினும் விடுமுறையில் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்காவைச் சுற்றினார். மனம் நொந்தார்.
காரணம் இந்த உலகிலே இயற்கை செல்வங்கள் கொட்டிகிடக்கும் பூமி அது, பெய்யாத மழை இல்லை, விளையாத பொருள் இல்லை. தரையினை தோண்டினால் முழுக்க கனிம வளம். ஆனால் மக்கள் ஏழைகள், இதுதான் அவரைச் சிந்திக்க வைத்தன.
அப்பொழுது கியூபா புலிக்கு தப்பி சிங்கத்திடம் விழுந்திருந்தது, அதாவது ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் வாங்கி, அமெரிக்க கைப்பொம்மையான பாடிஸ்டாவிடம் சிக்கி இருந்தது. பிடல் காஸ்ட்ரோ கைது செய்யபட்டு நிபந்தனை பேரில் விடுவிக்கபட்டிருந்தார்.

பொதுவாக தென் அமெரிக்க நாடுகள் மகா வித்தியாசனமானவை, எல்லா ஊழலையும் ஆள்பவர் செய்வார், இதுக்குமேல் சுரண்ட ஒன்றுமில்லை என்றவுடன் சொத்து பத்துக்களோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார், அடுத்த அதிபர் வருவார், பின் அவர் சொத்து சேர்க்க ஆரம்பிப்பார்.
கனிம வளத்திற்காக, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இப்படி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. அப்படி கியூபாவின் பெரும் செல்வம் கரும்பும்  சீனியும்.
நான் இரும்பு மனிதன், எனக்கு பின் அமெரிக்கா இருக்கின்றது என காட்டாட்சி நடத்திகொண்டிருந்த பாடிஸ்டாவிற்கு எதிராக தாககுதல்களை நடத்திக் கொண்டிருந்தார் பிடல் காஸ்ட்ரோ, அது தோல்வியில் முடிந்து கொண்டிருந்தது.
அப்பொழுதுதான் அங்கு சென்றார் சே. அதுவரை நடந்த கொரில்லா முறையினை மாற்றினார். மிக துல்லியமான தாக்குதல்கள். அதன் பின்னணியில் மக்களை இணைக்கும் அரசியல் என கியூபாவில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டினார், பாடிஸ்டா பறந்தே விட்டார். 
ஆட்சி காஸ்ட்ரோவின் கைகளில் வந்தது. உலகெல்லாம் மிரட்டிய அமெரிக்காவிற்கு தன் காலடியில் பெற்ற தோல்வி சகிக்கவில்லை. ஆனாலும் மக்கள் சக்திமுன் என்ன செய்ய?
ஆட்சிக்கு வந்த காஸ்ட்ரோ, சே க்கு பெரும் பொறுப்புக்களை கொடுக்க முன்வந்தார், கிட்டதட்ட நம்பர் 1 இடம். நினைத்திருந்தால் சாகும்வரை கியூபாவில் ராஜதந்திரியாக வாழும் வாய்ப்பு சே விற்கு வந்தது.
பதவியினை துச்சமாக நினைப்பவன் போராளி. தனக்கு அதில் விருப்பமில்லை. உலகெல்லாம் போராடும் மக்களுக்கு உதவுவதே தன் பணி என சொல்லிவிட்டு , யாருக்கும் சொல்லாமல் கண்டம் கடந்தார்.
ஆம் எல்லை கடந்து கியூபா விடுதலைக்கு போராடியவர், இப்பொழுது ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டிற்கு வந்தார்.
ஆனால் ஆப்பிரிக்கர்களை இணைப்பது அவருக்கு தமிழ்நாட்டில் தமிழர்களை ஒருங்கிணைப்பது போலவே வெகு சிரமமாக இருந்தது, ஆளாளுக்கு ஒரு நியாயம் பேசிக்
கொண்டிருந்தார்கள். மனம் நொந்த சே மீண்டும் தென் அமெரிக்கா திரும்பினார்.
இந்த காலகட்டத்திற்குள் சே குவாரோவை காணாத அமெரிக்கா, காஸ்ட்ரோ பதவி சண்டையில் கொன்றுவிட்டதாக கதை கட்டிவிட்டது. காஸ்ட்ரோவிற்கும் பதில் சொல்லத் தெரியவில்லை, காரணம் சே இருக்குமிடம் அவருக்கும் தெரியவில்லை,
ஆனால் இப்படிச் சொன்னார், "எனது நண்பன் நிச்சயம் எங்காவது அடிமைப்பட்ட இனத்திற்காக உழைத்துக்
கொண்டிருப்பான்".

மீண்டும் சே வந்து மக்களிடம் தோன்றினார். தென் அமெரிக்கா முழுக்க அவருக்கு ஆதரவு பெருகிற்று. வாழும் லெனினாக கூட அல்ல, அதற்கும் மேலாக உலகம் அவரை கொண்டாடிற்று, அவரின் மனிதநேயம் அப்படி. கியூபா
அரசின் சார்பாக உலகெல்லாம் சுற்றினார், உலகென்றால் அன்று சுதந்திரம் பெற்றிருந்த நாடுகளின் மக்களைக் காணச் சென்றார். இந்தியாவுக்கும் வந்து இந்திய விவசாயிகளின் நிலையினை கண்டு அதனை நேருவுடன் விவாதித்தார். இந்திய கியூபா உறவுகள் தொடரவேண்டும் என்றார்.


இலங்கைக்குச் சென்று தேயிலை தோட்ட தமிழர்களை சந்தித்தார். உலகிலே மலையக தமிழர்களையும் மனிதர்களாக மதித்து சந்தித்த தலைவர்  அவர்தான்.
இப்படியாக உலகெல்லாம் கொண்டாடப்பட்ட அந்த சே, அமெரிக்காவிற்கு எப்படி எரிச்சலூட்டியிருப்பார். அமெரிக்க தலைமை வேறுவிதமாக சிந்தித்தது, பக்கம் பக்கமாக அறிக்கைகள் மேலிடத்திற்கு அனுப்பபட்டன. அவை இப்படி சொன்னது:
உலகெங்கும் பெரும் செல்வாக்கினைப் பெற்றுவரும் சே, இப்படியே விட்டால் தென் அமெரிக்க நாடுகளை இணைத்து சோவியத் ஒன்றியம் போல ஒன்றை எளிதாக அமைத்துவிடலாம் ( சாத்தியம் இருந்தது). அதாவது மத உரிமைகளில் அவர் விட்டுக்கொடுத்தால் எல்லா கத்தோலிக்க நாடுகளும் இணையத் தயார். ஒரு லெனினை, ஸ்டாலினை மண்டையில் போட்டு தள்ளாததன் விளைவு, நமக்கு நிரந்தர எதிரியினை உருவாக்கிவிட்டது. சே உழைக்கும் மக்களால் கொண்டாடபடுகின்றார் என்றால், அதன் மறுஅர்த்தம் அமெரிக்கவிற்கு அவரின் வளர்ச்சி நல்லதே அல்ல."

அதற்காக சே வினை விமான நிலையத்தில் சுடமுடியாது. சே வின் பெரும் பலவீனம் அல்லது பெரும் பலம் எங்கு உரிமை போராட்டம் நடக்கின்றதோ அங்கு நிற்பது, சண்டையோடு சண்டையாக போட்டு தள்ள திட்டமிட்டது அமெரிக்கா.
சிஐஏ களத்தில் இறங்கிற்று, காஸ்ட்ரோ கடும் பாதுகாப்பில் கியூபாவில் வாழச்சொல்லியும் சொல்லாமல் கொள்ளாமல் பறந்தார் சே.

சிஐஏ கண்ணி வைத்த இடம் பொலிவியா, அங்கு சண்டையினை தீவிரப்படுத்தினார்கள், வழக்கம்போல வந்து நின்றார் சே. சண்டை உச்சத்தை அடைந்தது.
அக்டோபர் 9, 1969... அந்த மாலைபொழுதில் ஒரு ஆற்றைக் கடந்தார். அங்கு ஆடுமேய்த்துக் கொண்டிருந்த பெண்மணியினை பார்த்து பரிதாபப்பட்டு 50 பெசோ கொடுத்து நலம் விசாரித்து சென்றார், அப்பெண்மணி சி.ஐ.ஏ உளவாளி என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்தன. அக்கிராமத்தின் ஒரு பள்ளியில் சிறை வைக்கபட்டார். சுற்றிப் பார்த்து அவர் சொன்ன சொல் வரலாற்றில் நின்றது, "இது என்ன இடம், பள்ளிக்கூடமா? இவ்வளவு அசுத்தமா?, நல்ல பள்ளிக் கூடங்கள் நாட்டின் பெரும் தேவையல்லவா!"
சாகும்பொழுதும் எப்படி சிந்தித்திருக்கிறார் பார்த்தீர்களா? இதுதான் சே.
விசாரித்து தீர்ப்பளித்தால் சிக்கல் பெரிதாகும். உலகம் கொந்தளிக்கும் எனக் கருதிய அமெரிக்கா அங்கேயே சுட்டுகொல்லத் தீர்மானித்தது. நெஞ்சை நிமிர்த்தி இரு கைகளையும் விரித்து நின்றார் அவர், அன்று அவருக்கு வயது வெறும் 39.
எல்லை கடந்து வந்து தனது நாட்டிற்காக போராடிய ஒப்பற்ற தலைவன் சே வின் மரணம் கியூபா மக்களை மட்டுமல்ல, உலக மக்களையே சோகக்கடலில் ஆழ்த்தியது
அவரை சுட்டவீரன் சொன்னான், "முகத்தில் தாடியோடு, கலைந்த முடியோடு அவர் கைவிரித்து நின்ற சே வின் காட்சி அப்படியே இயேசுவின் சிலுவைக் காட்சியினை  கண்முன் நிறுத்திற்று" என சொல்லி,  பின்னர் கதறி அழுதான்.

அது நிதர்சனமான உண்மை. 

ஒரு தேசத்தில் போராடச் சென்றபொழுது அவரிடம் கேட்டார்கள், "எங்களுக்காக நீங்கள் ஏன் போராடவேண்டும்? என்ன அவசியம்"
ஆஸ்துமா நோயாளியான அவர், அன்று நோயின் அதிக தாக்கத்திலும் மெதுவாக சொன்னார், "அக்கிரமத்தினை கண்டு, விடுதலைக்காக போராடினால் நீ நிச்சயமாக எனது நண்பன்"
இன்று அவரின் பிறந்த தினம். அவரை நினைவு கூற கம்யூனிஸ்டாகவோ அல்லது தென் அமெரிக்கனாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
சக மனிதனை நேசிக்கத் தெரிந்த, உலகெல்லாம் சிதறி ஈழத் தமிழரை போல அகதிகளாய் வாழும், சிரியாவிலிருந்து, லிபியாவிலிருந்து, பர்மாவிலிருந்து பராரியாய் திரியும் மனிதர்களைப் பார்த்து ஒரு துளி கண்ணீர் விடும் மனம் போதும்.
மகான்களும், அவதாரங்களும் மட்டும் நிலையான அடையாளத்தைப் பெறுவதில்லை, மனிதனை மனிதனாக நேசிக்கத் தெரிந்த யாரையும் இந்த உலகம் மறக்காது.
அதில் சே என்றும் முதல் இடத்தில் இருப்பார்.

*ஜூன் 14,
 வரலாற்றில் இன்று.*

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறந்த தினம் இன்று.


* அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில் ஜாம்பவனாக திகழ்ந்தவர். அமெரிக்காவின் முன்னாள் அதிபராக உள்ளார்.

* அவரின் முழுப்பெயர் டொனால்டு ஜான் டிரம்ப், 1946-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பிறந்தார்.

* ட் டிரம்ப், மேரி மெக்லியோட் டிரம்ப் தம்பதியின் ஐந்து பிள்ளைகளில் ஒருவர் டொனால்டு டிரம்ப்.

* பதிமூன்று வயது டிரம்ப்புக்கும் தந்தைக்கும் ஒத்துவராததால், நியூயார்க்கின் ராணுவக் கல்விக் கழகத்தில் சேர்க்கப்பட்டார்.

* பாதத்தில் “Heel Spurs” எனும் எலும்பு தூக்கிக் கொண்டிருக்கும் பிரச்சினை இருந்ததால், வியட்நாம் போரில் பங்கேற்பதிலிருந்து டிரம்புக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

* நியூயார்க் சிட்டியில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில், பொருளாதாரத்தில் இளங்கலை பட்டப்படிப்பை 1968ம் ஆண்டு படித்து முடித்தார்.

* 1968ஆம் ஆண்டு தந்தை கொடுத்த ஒரு மில்லியன் டாலரைக் கொண்டு தொழில் தொடங்கினார் டிரம்ப்.

* டிரம்புக்கு மூன்று திருமணங்கள், ஐந்து பிள்ளைகள். 

*  பிரபல தொழிலதிபர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சிப் பிரபலம் என பல முகங்கள்

* நியூயார்க்கில் உள்ள 17 கட்டடங்களில் இவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவை அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை அல்ல.

* இவருடைய நிகர சொத்து மதிப்பு 4.5 பில்லியன் டாலராகும்.

* ரியல் எஸ்டேட் துறையில் கொடிகட்டி பறந்த டிரம்ப், தொலைக்காட்சி களிலும் பிரபலமானவராக திகழ்ந்தார்.

* 1987ம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் என்றாலும் 1999ம் ஆண்டு அதில் இருந்து வெளியேறினார்.

* பின்னர், 2009ம் ஆண்டில் மீண்டும் குடியரசுக் கட்சியில் இணைந்து 2011ம் ஆண்டு வரை அதில் நீடித்தார்.

* 1987ம் ஆண்டிற்கு முன்னர் ஜனநாயகக்கட்சியிலும்.
  1999 முதல் 2001 வரை சீர்திருத்தக் கட்சியிலும் இணைந்து டிரம்ப் பணியாற்றியுள்ளார்.

* இதற்கிடையே 2012ம் ஆண்டு மீண்டும் குடியரசுக் கட்சியில் இணைந்தார்.

 தொடர்ந்து 2016ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக போட்டியிட்டு வென்று, அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

* 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியுற்றார் ட்ரம்ப்.

*ஜூன் 14, 
வரலாற்றில் இன்று.*

 டென்னிஸ் வரலாற்றில் மிகக் குறிப்பிடத்தக்க ஸ்டெபி கிராப் பிறந்த தினம் இன்று.

முன்னாள் டென்னிஸ் வீராங்கனை. ஜெர்மனியைச் சேர்ந்தவரான இவர் டென்னிஸ் வரலாற்றில் மிகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர். 22 தனிநபர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். 1988 இல் எல்லா (நான்கு) கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றதோடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றவர். டென்னிஸ் தர வரிசையில் 377 வாரங்கள் முதலிடத்திலிருந்து சாதனை படைத்தவர். 1999 ஆகஸ்ட்டில் ஓய்வு பெற்றார். அக்டோபர் 22, 2001 இல் ஆன்ட்ரே அகாசியைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

* மேற்கு ஜெர்மனியின் மன்ஹேய்ம் (Mannheim) நகரில் (1969) பிறந்தார். தந்தை பழைய கார் விற்பனையாளர். அவர் வீட்டிலேயே தன் 3 வயது மகள் ஸ்டெஃபிக்கு டென்னிஸ் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். 4 வயதில் டென்னிஸ் மைதானத்தில் பயிற்சி பெறத் தொடங்கிய சிறுமி, 5 வயதுமுதல் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டாள்.

* டென்னிஸ்தான் அவள் சாதிப்பதற்கு ஏற்ற துறை என்பதை ஊகித்த பெற்றோர் 13 வயதில் பள்ளியில் இருந்து நிறுத்தினர். வீட்டில் ஒரு ஆசிரியர் மூலம் உயர்நிலைக் கல்வி கற்றாள்.

* முழுமையான தொழில்முறை வீராங்கனையாக 1983-ல் விளையாடத் தொடங்கினார். அப்போது, உலக டென்னிஸ் தரவரிசையில் அவரது இடம் 124. அதே ஆண்டு இறுதியில் 98, அடுத்த ஆண்டில் 22 என அதிரடியாக முன்னேறி, 1985-ல் 6-வது ரேங்க் என்ற நிலைக்கு உயர்ந்தார்.

* பிரபல சாம்பியன்கள் மார்ட்டினா நவரத்திலோவா, கிறிஸ் எவர்ட்டுக்கு சவாலாக முன்னேறினார் கிராஃப். அவர்களுடன் மோதி வெற்றி பெறவில்லை என்றாலும், அரையிறுதி, இறுதிப் போட்டிகள் வரை முன்னேறினார்.

* உலக மகளிர் டென்னிஸ் போட்டியில் 1986-ல் முதன்முதலாக கலந்துகொண்டபோது, கிறிஸ் எவர்ட்டை தோற்கடித்தார். அதன் பிறகு, எவர்ட்டிடம் இவர் ஒருமுறைகூட தோற்றதில்லை.

* இவரது டென்னிஸ் ஆட்டம் 1987-ல் மேலும் வலுப்பெற்றது. ஆரம்பத்திலேயே பிரெஞ்ச் ஓபன் போட்டிக்கு முன்னால் 6 போட்டிகளில் வென்றார். மியாமி போட்டியில் நவரத்திலோவாவை அரையிறுதியிலும், கிறிஸ் எவர்ட்டை இறுதிப் போட்டியிலும் வென்றது இவரது சாதனை வெற்றிகள். பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் செபாட்டினியையும், இறுதியாட்டத்தில் மார்ட்டினாவையும் தோற்கடித்தார்.

* ஆஸ்திரேலியன் ஓபன், டெக்சாஸ், சான் ஆன்டோனியோ போட்டிகளில் வென்றதோடு, மியாமி போட்டி பட்டத்தையும் 1988-ல் தக்கவைத்துக்கொண்டார். அந்த ஆண்டு நடந்த 4 கிராண்ட்ஸ்லாம் போட்டி பட்டங்களையும் அத்துடன் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றார். இதன்மூலம் ‘காலண்டர் இயர் கோல்டன் ஸ்லாம்’ அந்தஸ்தைப் பெற்ற முதல் மற்றும் ஒரே டென்னிஸ் நட்சத்திரம் என்ற பெருமையையும் பெற்றார்.

* மொத்தம் 7 விம்பிள்டன் ஒற்றையர் பட்டங்கள், 6 பிரெஞ்ச் ஓபன் ஒற்றையர் பட்டங்கள், 5 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி பட்டங்கள், 4 ஆஸ்திரேலியன் ஓபன் போட்டி பட்டங்களை வென்றுள்ளார்.

* தொடர்ந்து 186 வாரங்களுக்கு முதலிடத்தில் இருந்தவர். 11 இரட்டையர் போட்டிகளில் வென்றுள்ளார். 1999-ல் ஓய்வு பெறும்போது உலகத் தரவரிசையில் 3ஆம் இடத்தில் இருந்தார். பிரபல டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே அகாசியை 2001இல் திருமணம் செய்துகொண்டார்.

* பல விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இவர், ‘சில்ரன் ஃபார் டுமாரோ’ என்ற தொண்டு அமைப்பை நிறுவி போர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.

*ஜூன் 14,
வரலாற்றில் இன்று.*

ஜெர்மனியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற உளவியல் நிபுணரும், தலைசிறந்த நரம்பியல் மருத்துவருமான அலாய்ஸ் அல்சீமர் (Alois Alzheimer) பிறந்த தினம் இன்று.


* ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள மார்க்பிரைட் என்ற கிராமத்தில் (1864) பிறந்தார். தந்தை சொந்த ஊரில் ஒரு வழக்கறிஞரிடம் பணிபுரிந்து வந்தார். தலைசிறந்த ராயல் ஹ்யுமானிஸ்டிக் ஜிம்னாசியம் பள்ளியில் பயின்றார்.

* இளம் பருவத்திலேயே அறிவியலில் நாட்டம் கொண்டார். மருத்துவக் கல்வியிலும் ஈடுபாடு ஏற்பட்டது. பள்ளிக் கல்விக்குப் பிறகு அஷ்பென்பர்க், டுபிங்கன், பெர்லின், வூர்ஸ்பர்க் பல்கலைக்கழகங்களில் பயின்று 1887-ல் மருத்துவப் பட்டம் பெற்றார். பிறகு பிராங்க்பர்ட்டில் பல மருத்துவமனைகளில் பணியாற்றினார்.

* மருத்துவராக, பேராசிரியராகப் பணியாற்றினாலும் நோயியல் குறித்த ஆராய்ச்சிகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நுண்ணோக்கியைப் பயன்படுத்தி நரம்பு நோய்கள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பிரபல உளவியல் நிபுணர்கள், நரம்பியல் விஞ்ஞானிகளுடன் இணைந்தும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

* மூனிச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பின்னர், உடற்கூறியல் ஆய்வக நிறுவனத்தில் பேராசிரியராகவும், அதன் இயக்குநராகவும் பணியாற்றினார். விரைவிலேயே சிறந்த ஆராய்ச்சியாளராக அறியப்பட்டார். தனது தொடர் ஆராய்ச்சிகள் வாயிலாக, ஐரோப்பாவின் நுண்திசு நோய்க் கூறியலின் (Histopathology) முன்னணி நிபுணராகப் புகழ்பெற்றார்.

* லுட்விக் மாக்ஸ்மில்லியன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். பிறகு, பிரெட்ரிக்-வில்ஹெம் பல்கலைக்கழகத்தின் நரம்பியல், உளவியல் துறையிலும், ரெக்லாவ் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராகவும் பணியாற்றினார். மாணவர்கள் போற்றும் ஆசிரியராகத் திகழ்ந்தார்.

* பிராங்க்பர்ட்டில் உள்ள மனநோய் மருத்துவமனையில் எமில் கிரேப்ளின் என்ற பிரபல ஜெர்மன் உளவியல் நிபுணரின் நட்பு கிடைத்தது. பல ஆண்டுகளாக இருவரும் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர். அப்போது, மறதியால் அவதிப்பட்ட ஒரு பெண்ணைச் சந்தித்தார். அந்த நோய் குறித்து ஆராயத் தொடங்கினார்.

* அந்தப் பெண் இறந்ததால், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மூளையை தனியே பிரித்தெடுத்து அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்ந்தார். பிரேதப் பரிசோதனை நடைபெற்ற 320 நோயாளிகளின் நோயியல், உடற்கூறியலை ஆராய்ந்து, ஏறக்குறைய 7 ஆண்டுகள் இதுசம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இறுதியில் அந்த நோய்க்கான காரணங்களைக் கண்டறிந்தார்.

* மூளையில் அவரால் கண்டறியப்பட்ட இந்த முரண்பாடுகள் பின்னாளில் அல்சீமர் நோய்க்கான அறிகுறிகளாக கருதப்பட்டன. மூளை நோய்க் குறியியல் மற்றும் முதுமை அறிகுறிகள் குறித்து 1906-ல் விரிவுரையாற்றினார். தன் ஆராய்ச்சியில் கண்டறிந்தவற்றையும் அதுகுறித்த தனது விரிவுரையையும் கட்டுரையாக வெளியிட்டார்.

* மருத்துவ உலகில் புதிதாக கண்டறியப்பட்ட அந்த நோய்க்கு ‘அல்சீமர்’ என்று தனது நண்பரின் பெயரையே வைத்து, அந்த நோயை 1910-ல் உலகுக்கு அறிமுகம் செய்தார் இவரது நண்பர் எமில். அதற்கான சிகிச்சை முறைகளையும் அலாய்ஸ் அல்சீமர் கண்டறிந்தார். மறதி நோய் மட்டுமல்லாது மூளையில் ஏற்படும் கட்டி, கைகால் வலிப்பு, மூளையின் வாஸ்குலார் நோய்கள், ஆரம்பகால முதுமை, மறதி உள்ளிட்ட நரம்பு தொடர்பான நோய்களைப் பற்றிய ஆய்வுகளையும் மேற்கொண்டார்.

* ‘நரம்பியல் நோய்களின் தந்தை’ எனப் போற்றப்பட்டார். மனித குலத்தின் நலனுக்காக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு மருத்துவம், உளவியல் களங்களில் மகத்தான பங்களிப்பை வழங்கிய அலாய்ஸ் அல்சீமர் 51ஆவது வயதில் (1915) காலமானார்.


*ஜூன் 14,
வரலாற்றில் இன்று.*

ரத்தப் பிரிவுகளை வகைப்படுத்தி, நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரிய உயிரியல் வல்லுநர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner) பிறந்த தினம் இன்று.


* ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் (1868) பிறந்தார். 
சட்ட வல்லுநர், பத்திரிகையாளர், செய்தித்தாள் வெளியீட்டாளரான தந்தை, இவர் 6 வயது குழந்தையாக இருந்த போது இறந்தார். அதன் பிறகு, தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.

* பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் வியன்னா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று, பட்டம் பெற்றார். இறுதியாண்டு பயிலும் போதே உயிரி ரசாயன ஆராய்ச்சியைத் தொடங்கினார். ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி வெளியிட்டார். வேதியியல் குறித்து மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள சோதனைக் கூடங்களில் 5 ஆண்டுகாலம் பணியாற்றினார்.

* மீண்டும் வியன்னா திரும்பி, பொது மருத்துவமனையில் மருத்துவ ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். வியன்னா ஹைஜீன் நிறுவனத்தில் 1896இல் உதவியாளராகச் சேர்ந்தார். நோய் எதிர்ப்பாற்றல் செயல்பாடு, இயற்கை எதிர் உயிரிகள் குறித்து ஆராய்ச்சி செய்தார்.

* வியன்னா பல்கலைக்கழகத்தின் நோயியல், உடற்கூறியல் துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். அங்கு நோயின் தன்மைகள் குறித்து ஆராய்ந்தார். தனியாகவும், பல அறிவியலாளர்களுடன் இணைந்தும் ஆராய்ச்சிகள் 
மேற்கொண்டு 75 கட்டுரைகளை வெளியிட்டார். நோய் எதிர்ப்பாற்றல் காரணி களைக் கண்டறிந்து அதற்கு ‘ஹாப்டன்ஸ்’ எனப் பெயரிட்டார்.

* வெவ்வேறு நபர்களின் ரத்தத்தைக் கலக்கும்போது அவற்றில் வேறுபாடுகள் இருப்பதை 1901இல் கண்டார். இதுகுறித்து மேலும் ஆராய்ந்ததில் ஏ, பி, ஓ ஆகிய ரத்த வகைகள் இருப்பதையும் முதன்முதலாகக் கண்டறிந்தார்.

* இர்வின் பாப்பருடன் இணைந்து 1909இல் போலியோ வைரஸ்கள் குறித்து ஆராய்ந்தார். அதன் தொற்றுத் தன்மையைக் கண்டறிந்தார். இதுதான் போலியோவுக்கு மருந்து கண்டறிய அடிப்படையாக அமைந்தது. இதற்காக இவருக்கு 1926இல் ‘அரோன்சன்’ பரிசு கிடைத்தது. லாஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகள், கவுரவங்களையும் பெற்றார்.

* ரத்த சிவப்பணுக்கள் தொடர்பாக விரிவான ஆராய்ச்சிகளை மேற் கொண்டார். ரத்தப் பிரிவுகள் குறித்த ஆராய்ச்சியை மீண்டும் தொடர்ந்தார். முதல் உலகப் போருக்குப் பின்னர் நாட் டின் பொருளாதாரம் சீர்குலைந்ததால், தனது ஆராய்ச்சிகளை 
தொடர்வதற்காக ஹாலந்து சென்று ஒரு மருத்துவமனையில் பணியாற்றினார்.

* வருமானத்துக்காக ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்தார். அப்போதும் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். அவற்றை டச்சு ராயல் அறிவியல் அகாடமி வெளியிட்டது. அங்கு ஆராய்ச்சிகளுக்கு பெரிதாக வசதி வாய்ப்புகளோ, பொருளாதார வளமோ இல்லாததால் ராக்ஃபெல்லர் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரிய நியூயார்க் சென்றார்.

* நோய் எதிர்ப்பாற்றல், ஒவ்வாமை பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார். 1927இல் மேலும் பல புதிய வகை ரத்தப் பிரிவுகளைக் கண்டறிந்தார். இந்த ஆராய்ச்சிக்காக 1930இல் இவருக்கு அலெக்சாண்டர் எஸ்.வெய்னருடன் இணைந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

* நோயியல், உடற்கூறியல், தசை திசுக்கள், நோய் எதிர்ப்பாற்றல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 75இவது வயதில் (1943) காலமானார்.

*ஜூன் 14_உலக இரத்தக் கொடையாளர்கள் தினம் இன்று*

ஜூன் 14,
வரலாற்றில் இன்று.

உலக இரத்தக் கொடையாளர்கள் தினம் இன்று.


சர்வதேச அளவில் உலக சுகாதார நிறுவனத்தால், ஆண்டுதோறும் ஜூன் 14ஆம் நாள் உலக இரத்தக் கொடையாளர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இரத்த வகைகள் குறித்து அறியப்படாத காலக்கட்டத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளை காப்பாற்ற இயலாமல் போனது. இரத்த பரிமாற்றத்திலும் எதிர் விளைவுகள் ஏற்பட்டன. இதையடுத்து 1901ஆம் ஆண்டு காரல் லேண்ஸ்டைனர் என்பவர் இரத்ததில் உள்ள A, B, AB, O வகைகளை முதன்முதலில் கண்டறிந்தார். இதன் மூலம் மனித இரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்துவது சாத்தியமானது.


ஒருவர் தன் வாழ்நாளில் ஒருமுறை இரத்த தானம் செய்வதன் மூலம், 4 உயிர்களை காப்பாற்ற முடியும். ஒரு மனிதரின் உடலில் 4 முதல் 6 லிட்டர்கள் வரை இரத்தம் உள்ளது. உலகளவில் ஆண்டு தோறும் 6.8 மில்லியன் மக்கள் இரத்ததை கொடையாக வழங்குகின்றனர். பல சமூக வளைதளங்கள், குழுக்கள், இரத்த வங்கிகள் உதவியோடு தானமாக பெறப்பட்ட இரத்தம், உரிய முறையில் சேமிக்கப்படுகின்றது.
18 முதல் 60 வயதுக்கு உட்பட்டு, 45 கிலோ உடல் எடைக்கு மேல் உள்ளவர்கள் தாராளமாக இரத்த தானம் வழங்க முடியும். மருத்துவ மனைகளில் இரத்தம் பெறப்படும் முன் சில பரிசோதனைகள் எடுக்கப்பட்ட பின்னரே, தானமாக இரத்தம் கொடுக்க கொடையாளர் அனுமதிக்கப்படுவார்.     
 

ஒருவர் உடலில் இருந்து 350 மி.லி இரத்தம் மட்டுமே எடுக்கப்படும். கொடையாக வழங்கிய 24 மணி நேரத்திற்குள்ளாக, நமது உடலால் மீண்டும் ரத்தம் ஈடுசெய்யப்பட்டு விடுகிறது. ஆண்கள் வருடத்தில், 3 மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் 4 மாதத்திற்கு ஒரு முறையும் தாராளமாக இரத்த தானம் செய்யலாம். எனவே இரத்ததானம் செய்வோம்.
 இன்னுயிர் காப்போம்.

ஜூன் 14,
வரலாற்றில் இன்று.

ரத்தப் பிரிவுகளை வகைப்படுத்தி, நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரிய உயிரியல் வல்லுநர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner) பிறந்த தினம் இன்று.


* ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் (1868) பிறந்தார். 
சட்ட வல்லுநர், பத்திரிகையாளர், செய்தித்தாள் வெளியீட்டாளரான தந்தை, இவர் 6 வயது குழந்தையாக இருந்த போது இறந்தார். அதன் பிறகு, தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.

* பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் வியன்னா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று, பட்டம் பெற்றார். இறுதியாண்டு பயிலும் போதே உயிரி ரசாயன ஆராய்ச்சியைத் தொடங்கினார். ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி வெளியிட்டார். வேதியியல் குறித்து மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள சோதனைக் கூடங்களில் 5 ஆண்டுகாலம் பணியாற்றினார்.

* மீண்டும் வியன்னா திரும்பி, பொது மருத்துவமனையில் மருத்துவ ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். வியன்னா ஹைஜீன் நிறுவனத்தில் 1896இல் உதவியாளராகச் சேர்ந்தார். நோய் எதிர்ப்பாற்றல் செயல்பாடு, இயற்கை எதிர் உயிரிகள் குறித்து ஆராய்ச்சி செய்தார்.

* வியன்னா பல்கலைக்கழகத்தின் நோயியல், உடற்கூறியல் துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். அங்கு நோயின் தன்மைகள் குறித்து ஆராய்ந்தார். தனியாகவும், பல அறிவியலாளர்களுடன் இணைந்தும் ஆராய்ச்சிகள் 
மேற்கொண்டு 75 கட்டுரைகளை வெளியிட்டார். நோய் எதிர்ப்பாற்றல் காரணி களைக் கண்டறிந்து அதற்கு ‘ஹாப்டன்ஸ்’ எனப் பெயரிட்டார்.

* வெவ்வேறு நபர்களின் ரத்தத்தைக் கலக்கும்போது அவற்றில் வேறுபாடுகள் இருப்பதை 1901இல் கண்டார். இதுகுறித்து மேலும் ஆராய்ந்ததில் ஏ, பி, ஓ ஆகிய ரத்த வகைகள் இருப்பதையும் முதன்முதலாகக் கண்டறிந்தார்.

* இர்வின் பாப்பருடன் இணைந்து 1909இல் போலியோ வைரஸ்கள் குறித்து ஆராய்ந்தார். அதன் தொற்றுத் தன்மையைக் கண்டறிந்தார். இதுதான் போலியோவுக்கு மருந்து கண்டறிய அடிப்படையாக அமைந்தது. இதற்காக இவருக்கு 1926இல் ‘அரோன்சன்’ பரிசு கிடைத்தது. லாஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகள், கவுரவங்களையும் பெற்றார்.

* ரத்த சிவப்பணுக்கள் தொடர்பாக விரிவான ஆராய்ச்சிகளை மேற் கொண்டார். ரத்தப் பிரிவுகள் குறித்த ஆராய்ச்சியை மீண்டும் தொடர்ந்தார். முதல் உலகப் போருக்குப் பின்னர் நாட் டின் பொருளாதாரம் சீர்குலைந்ததால், தனது ஆராய்ச்சிகளை 
தொடர்வதற்காக ஹாலந்து சென்று ஒரு மருத்துவமனையில் பணியாற்றினார்.

* வருமானத்துக்காக ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்தார். அப்போதும் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். அவற்றை டச்சு ராயல் அறிவியல் அகாடமி வெளியிட்டது. அங்கு ஆராய்ச்சிகளுக்கு பெரிதாக வசதி வாய்ப்புகளோ, பொருளாதார வளமோ இல்லாததால் ராக்ஃபெல்லர் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரிய நியூயார்க் சென்றார்.

* நோய் எதிர்ப்பாற்றல், ஒவ்வாமை பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார். 1927இல் மேலும் பல புதிய வகை ரத்தப் பிரிவுகளைக் கண்டறிந்தார். இந்த ஆராய்ச்சிக்காக 1930இல் இவருக்கு அலெக்சாண்டர் எஸ்.வெய்னருடன் இணைந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

* நோயியல், உடற்கூறியல், தசை திசுக்கள், நோய் எதிர்ப்பாற்றல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 75இவது வயதில் (1943) காலமானார்.

*Constitution_Articles_14_to_32_Photos*

Constitution_Articles_14_to_32_Photos


*tamil_ஐம்பெருங்காப்பியங்கள்*

ஐம்பெருங்காப்பியங்கள்

• சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
• மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்
(பௌத்த சமய நூல்)
• சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்
• வளையாபதி – ஆசிரியர்
(சமணசமய நூல); தெரியவில்லை
• குண்டலகேசி – நாதகுத்தனார்
(பௌத்த சமய நூல்)

ஐஞ்சிறுங்காப்பியங்கள்

•யசோதர காவியம் (உயிர்க்கொலை தீது  என்பதை வலியுறுத்த – வெண்ணாவலுடையார் எழுந்த நூல்)
• உதயணகுமார காவியம் – ஆசிரியர் தெரியவில்லை
• நாககுமார காவியம் – ஆசிரியர்  தெரியவில்லை
• சூளாமணி (கவிதை நயத்தில் சிந்தாமணி – தோலாமொழித் தேவர் போன்றது
• நீலகேசி – வாமன முனிவர் (சமண சமய நூல்)
• சீவகசிந்தாமணி நரிவிருத்தம் – திருத்தக்க தேவர்
• பெருங்கதை – கொங்குவேளிர்
• கம்பராமாயணம், ஏரெழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, சடகோபரந்தாதி, இலக்குமி அந்தாதி, மும்மணிக் கோவை – கம்பர்
• பெரியபுராணம் – சேக்கிழார்
• முத்தொள்ளாயிரம் – ஆசிரியர்  தெரியவில்லை
• நந்திக்கலம்பகம் – ஆசிரியர் தெரியவில்லை
• பாரத வெண்பா – பெருந்தேவனார்
• மேருமந்தர புராணம் – வாமன முனிவர்
• வில்லி பாரதம் – வில்லிபுத்தூராழ்வார்
• இறையனார் களவியல் உரை – நக்கீரர்
• புறப்பொருள் வெண்பா மாலை – ஐயனரிதனார்
• கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
• வீரசோழியம் – புத்தமித்திரர்
• சேந்தன் திவாகரம், திவாகர நிகண்டு – திவாகர முனிவர்
• பிங்கல நிகண்டு – பிங்கல முனிவர்
• உரிச்சொல் நிகண்டு – காங்கேயர்

நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்

• சூடாமணி நிகண்டு – மண்டல புருடர்
• நேமிநாதம், வச்சணந்திமாலை, பன்னிரு பாட்டியல், (வெண்பாப் பாட்டியல்) – குணவீரபண்டிதர்
• தண்டியலங்காரம் – தண்டி
•யாப்பருங்கலம், யாப்பருங்கல விருத்தி, யாப்பருங்கலக்காரிகை – அமிர்தசாகரர்
• நன்னூல் – பவணந்தி முனிவர்
• நம்பியகப்பொருள் – நாற்கவிராச நம்பி
• திருத்தொண்டர் திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி
• சந்திரவாணன் கோவை, சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் – அந்தகக்கவி வீரராகவர்
• திருவுந்தியார், திருக்களிற்றுப் பாடியார் – உய்யவந்தத் தேவர்
• சிவஞான போதம் – மெய்கண்டார்
•தில்லைக்கலம்பகம் – இரட்டைப்புலவர்கள் (இளஞ்சூரியர், முதுசூரியர்)
• வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது – உமாபதி சிவாச்சாரியார்
• அரிச்சந்திர புராணம் – வீரகவிராயர்
• மச்ச புராணம் – வடமலையப்பர்
• இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணிய குறள் – எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை
• திருமாலை, திருப்பள்ளியெழுச்சி – தொண்டரடிப்பொடியாழ்வார்
• திருவண்ணாமலை, திருவெண்காடு புராணம் – சைவ எல்லப்ப நாவலர்
•தொன்னூல் விளக்கம், ஞானோபதேசம், பரமார்த்த குரு கதை, சதுரகராதி, திருக்காவலூர் கலம்பகம், தேம்பாவணி – வீரமாமுனிவர்
• சீறாப்புராணம், முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம் – உமறுப்புலவர்
• நந்தனார் சரித்திரம் – கோபாலகிருட்டிண பாரதியார்
• டம்பாச்சரி விலாசம் – காசி விஸ்வநாதர்
• சைவம் பன்னிரு திருமுறைகள்

நூல்கள் – ஆசிரியர்கள்

• அகத்தியம் – அகத்தியர்
• தொல்காப்பியம் – தொல்காப்பியர்

ஐங்குநுறூறு

• குறிஞ்சித் திணை பாடியவர் – கபிலர்
• முல்லைத் திணை பாடியவர் – பேயனார்
• மருதத் திணை பாடியவர் – ஓரம்போகியார்
• நெய்தற் திணை பாடியவர் – அம்மூவனார்
• பாலைத் திணை பாடியவர் – ஓதலாந்தையார்

கலித்தொகை

• குறிஞ்சிக்கலி பாடியவர் (29 பாடல்கள்) – கபிலர்
• முல்லைக்கலி பாடியவர் (17 பாடல்கள்) – சோழன் நல்லுருத்திரன்
• மருதக்கலி பாடியவர் (35 பாடல்கள்) – மருதனில நாகனார்
• நெய்தற்கலிபாடியவர்(33பாடல்கள்) – நல்லந்துவனார்
• பாலைக்கலி பாடியவர் (35பாடல்கள்) – பெருங்கடுங்கோன்
• ஆத்திச்சூடி, ஞானக்குறள் (109 பாக்கள்), கொன்றை வேந்தன் – நல்வழி (41 பாக்கள்), மூதுரை (வாக்குண்டாம்) (31 பாக்கள்) – ஒளவையார்
• வெற்றிவேற்கை, நைடதம் – அதிவீர ராம பாண்டியன்
• அறநெறிச்சாரம் – முனைப்பாடியார்
• நன்னெறி – சிவப்பிரகாசர்
• பிரபுலிங்க லீலை, உலக நீதி – உலகநாதர்
• நளவெண்பா, நளோபாக்கியானம் – புகழேந்திப் புலவர்

பதினென்கீழ்க்கணக்கு நூல்களும் பாடியோரும்

•திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்,ஒழிவிலொடுக்கம், தொண்டமண்டல சதகம், சின்மய தீபிகை  – வள்ளலார் இராமலிங்க அடிகளார்
• மாறன் அகப்பொருள், மாறனலங்காரம் – திருக்குருகைப் பெருமாள்
• வேதாரணியப் புராணம், திருவிளையாடற் போற்றி கலிவெண்பா, சிதம்பரப்பாட்டியல், திருவிளையாடற் புராணம், மதுரை பதிற்றுப் பத்தந்தாதி – பரஞ்சோதி முனிவர்
• இலக்கண விளக்கப் பட்டியல் – வைத்தியநாத தேசிகர்
• மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம், இரட்டை மணிமாலை, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், காசிக்கலம்பகம்ää சகலகலா வள்ளிமாலை, கந்தர் கலிவெண்பா, மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பர செய்யுட்கோவை – குமரகுருபரர்
• கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
• திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் – பகழிக்கூத்தர்
• சேக்கிழார் பிள்ளைத்தமிழ் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
• இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப் பரணி, மூவருலா – ஒட்டக்கூத்தர்
• கலிங்கத்துப் பரணி, இசையாயிரம், உலா, மடல்  – செயங்கொண்டார்
• திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்  – காரைக்காலம்மையார்
• திருக்குற்றாலநாத உலா, குற்றாலக் குறவஞ்சி  – திரிகூட ராசப்பக் கவிராயர்
• அழகர் கிள்ளை விடு தூது, தென்றல் விடு தூது – பலபட்டைச் சொக்கநாதப் புலவர்
• திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கை உலா – சிவப்பிரகாசர்
• திருவரங்கக் கலம்பகம், திருவேங்கடந்தந்தாதி அஷ்டப்பிரபந்தம் – பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
• நாரை விடு தூது – சத்தி முத்தப் புலவர்
• காந்தியம்மை பிள்ளைத்தமிழ், காந்தியம்மை அந்தாதி – அழகிய சொக்கநாதர்
• சுகுண சுந்தரி – முன்சீப் வேதநாயகம் பிள்ளை
• அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், இலக்கண விளக்க சூறாவளி – சிவஞான முனிவர்
• கலைசைக் கோவை, கலைசைச் சிதம்பரேசர் பரணி, கலைசைச் சிலேடை வெண்பா, திருவாடுதுறை கோவை, சிவஞான முனிவர் துதி – தொட்டிக் களை சுப்பிரமணிய முனிவர்
• குசேலோபாக்கியானம் – வல்லூர் தேவராசப் பிள்ளை
• திருக்கோவையார் – மாணிக்கவாசகர்
• தஞ்சைவாணன் கோவை – பொய்யாமொழிப் புலவர்
• முக்கூடற்பள்ளு – என்னெயினாப் புலவராக இருக்கலாம்
• சேது புராணம் – நிரம்பவழகிய தேசிகர்
• இராம நாடகக் கீர்த்தனை – அருணாச்சலக் கவிராயர்
• மனோன்மணியம் – பெ. சுந்தரம்பிள்ளை
• திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – கால்டுவெல்
• பெண்மதி மாலை, சர்வ சமயக் கீர்த்தனைகள், பிரதாப முதலியார் சரித்திரம், நீதிநூல் திரட்டு, சுகுண சுந்தரி சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை
• கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் ஐயர்
•ரூபாவதி, கலாவதி, மானவிஜயம், நாடகவியல் – பரிதிமாற்கலைஞர்
•வள்ளித்திருமணம், கோவலன் சரித்திரம், சதி சுலோச்சனா, இலவகுசா, பக்த பிரகலாதா, நல்லதங்காள், வீர அபிமன்யுää பவளக் கொடி – சங்கரதாஸ் சுவாமிகள்
• மனோகரா, யயாதி, சிறுதொண்டன், கர்ணன், சபாபதி, பொன் விலங்கு – பம்மல் சம்பந்தனார்
• இரட்டை மனிதன், புனர் ஜென்மம், கனகாம்பரம் விடியுமா? – கு.ப. ராஜகோபாலன்
• கடவுளும் சந்தசாமிப் பிள்ளையும், காஞ்சனை, பொன்னகரம், அகல்யை, சாப விமோசனம் – புதுமைப்பித்தன்
• மீனாட்சி சுந்தரம்பிள்ளை சரித்திரம், புதியதும் பழையதும், கண்டதும் கேட்டதும், நினைவு மஞ்சரி, என் சரிதம் – உ.வே. சாமிநாத அய்யர்
• கருணாமிர்த சாகரம் – தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
• பெத்லேகம் குறிஞ்சி – வேதநாயக சாஸ்திரி
• நாக நாட்டரசி, கோகிலம்பாள் கடிதங்கள் – மறைமலையடிகள்
•மோகமுள், அன்பே ஆரமுதே, அம்மா வந்தாச்சு, மரப்பசு, நளப்பாகம் – தி. ஜானகிராமன்
• இராவண காவியம், தீரன் சின்னமலை, சுரமஞ்சரி, நெருஞ்சிப்பழம் – புலவர் குழந்தை
• ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், புதிய வார்ப்புகள், ஒரு பிடிச் சோறு, பாரீசுக்குப் போ, குருபீடம், சினிமாவுக்குப் போன சித்தாளு யுகசாந்தி, புது செருப்பு கடிக்கும், அக்னிப் பிரவேசம், உன்னைப்போல் ஒருவன் – ஜெயகாந்தன்
• பொய்த்தீவு, ஒருநாள், வாழ்ந்தவர் கெட்டால்  – க.நா. சுப்ரமணியம்
• சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அலை ஓசை, கள்வனின் காதலி, தியாகபூமி, மகுடபதி, அமரதாரா, திருடன் மகன் திருடன் – கல்கி
• அகல் விளக்கு, பெற்ற மனம், கள்ளோ காவியமோ, கரித்துண்டு, நெஞ்சில் ஒரு முள், தம்பிக்கு, தமிழ் இலக்கிய வரலாறு, கயமை, பாவை, வாடா மலர், செந்தாமரை, மண்குடிசை, குறட்டை ஒலி
– மு. வரதராசனார்
• புத்ர, அபிதா – லா. சு. ராமாமிர்தம்
• குறிஞ்சி மலர், சமுதாய வீதி, துளசி மாடம், பொன் விலங்கு, பாண்டிமா தேவி, மணி பல்லவம், வலம்புரிசங்கு – நா. பார்த்தசாரதி
• அண்ணாமலை வீரையந்தாதி, சங்கரன் கோயில் திரிபந்தாதிää கருவை மும்மணிக்கோவை – அண்ணாமலை ரெட்டியார்
•பாவை விளக்கு, சித்திரப்பாவை, எங்கே போகிறோம்? வேங்கையின் மைந்தன் வெற்றித் திருநகர், புதுவெள்ளம், பொன்மலர், பெண் – அகிலன்
• நெஞ்சின் அலைகள், மிஸ்டர் வேதாந்தம், கரிசல், புதிய தரிசனங்கள் – பொன்னீலன்
• கிருஷ்ண பருந்து – ஆ. மாதவன்
• பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம் – மாதவ அய்யர்
• உதய சந்திரன், நந்திபுரத்து நாயகி, காஞ்சி சுந்தரி – விக்கிரமன்
• தவப்பயன், புது உலகம், அன்பளிப்பு, சிரிக்கவில்லை, காலகண்டி – கு. அழகிரிசாமி
• ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் – சுந்தர ராமசாமி (பசுவய்யா)
• குறிஞ்சித் தேன், வேருக்கு நீர், கரிப்பு மணிகள் – ராஜம் கிருஷ்ணன்
• தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன்
• குருதிப்புனல், சுதந்திர பூமி, தந்திர பூமி, வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்த சாரதி
• புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால்  – ப. சிங்காரம்
• நாளை மற்றுமொரு நாளே, குறத்தி முடுக்கு  – ஜி. நாகராஜன்
• நாய்கள் – நகுலன்
• தேசபக்தன் கந்தன், முருகன் ஓர் உழவன் – வேங்கடரமணி                    • பதினெட்டாவது அட்சக்கோடு, இருட்டிலிருந்து வெளிச்சம், கரைந்த நிழல்கள், நண்பனின் தந்தை  – அசோகமித்திரன்
• சாயாவனம், தொலைந்து போனவர்கள்  – சா. கந்தசாமி
• ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா
• ரங்கோன் ராதா, பார்வதி பி.ஏ. நிலையும் நினைப்பும், ஏ? தாழ்ந்த தமிழகமே, ஓர் இரவு, ஆரிய மாயை, வேலைக்காரி, தசாவதாரம், நீதி தேவன் மயக்கம், செவ்வாழை – அறிஞர் அண்ணா
• குறளோவியம், பராசக்தி, தொல்காப்பியப் பூங்கா, பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம், இரத்தம் ஒரே நிறம், வெள்ளிக்கிழமை, சங்கத்தமிழ், ரோமாபுரிப் பாண்டியன், பூம்புகார், மந்திரிகுமாரி – கலைஞர் கருணாநிதி
• அர்த்தமுள்ள இந்துமதம், கல்லக்குடி மாகாவியம், இராசதண்டனை, ஆயிரம்தீவு, அங்கையற்கண்ணி, வேலங்குடித் திருவிழா, ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, இயேசு காவியம், சேரமான் காதலி, வனவாசம் மனவாசம் – கண்ணதாசன்
• முள்ளும் மலரும் – உமாசந்திரன்
• உயிரோவியம் – நாரண. துரைக்கண்ணன்
• கல்லுக்குள் ஈரம் – ரா.சு. நல்லபெருமாள்
• வாஷிங்டனில் திருமணம் – சாவி
• ஸ்ரீரங்கத்து தேவதைகள், கரையெல்லாம் செண்பகப்பூ, யவனிகா, இரத்தம் ஒரே நிறம் – சுஜாதா
• மெர்க்குரிப் பூக்கள், இரும்புக் குதிரை, உடையார் – பாலகுமாரன்
• மானுடம் வெல்லும், மகாநதி, சந்தியா – பிரபஞ்சன்
• நந்திவர்மன் காதலி, மதுரயாழ் மங்கை, ஆலவாய் அழகன் – ஜெகச்சிற்பியன்
• வீரபாண்டியன் மனைவி – அரு. ராமநாதன்
• இன்னொரு தேசிய கீதம், கவிராசன் கதை, கள்ளிக்காட்டு இதிகாசம், தண்ணீர் தேசம், கருவாச்சி காவியம், வில்லோடு வா நிலவே, வைகறை மேகங்கள், திருத்தி எழுதிய தீர்ப்புகள் – கவிஞர் வைரமுத்து
• பால்வீதி, ஆலாபனை, சுட்டு விரல், நேயர் விருப்பம், பித்தன் – அப்துல் ரகுமான்
• கண்ணீர்ப்பூக்கள், சோழநிலா, ஊர்வலம் – மு. மேத்தா
• கருப்பு மலர்கள் சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், கல்லறைத் தொட்டில் – நா. காமராசன்
• கனவுகள் ⁺ கற்பனைகள் ₌ காகிதங்கள் – மீரா (மீ. ராஜேந்திரன்)
• ஞான ரதம், சந்திரிகையின் கதை, தராசு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் – பாரதியார்
• கண்ணகி புரட்சி காப்பியம், பிசிராந்தையார், தமிழ் இயக்கம், குடும்ப விளக்குää இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, எதிர்பாராத முத்தம், கதர் இராட்டினப் பாட்டு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், பாண்டியன் பரிசு, முதியோர் காதல், குறிஞ்சித் திரட்டு, படித்த பெண்கள், இசையமுது, மணிமேகலை வெண்பா, இளைஞர் இலக்கியம் – பாரதிதாசன்
• தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், உதட்டில் உதடு, சாவின் முத்தம் – சுரதா
• ஊரும் பேரும் – ரா.பி. சேதுப்பிள்ளை
• தேவியின் கீர்த்தனைகள், மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், ஆசிய ஜோதி, குழந்தை செல்வம், உமர் கய்யாம் பாடல்கள் – கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
• கோவேறு கழுதைகள் – இமயம்
• மலைக்கள்ளன், தமிழன் இதயம், சங்கொலி, அவனும் அவளும், என் கதை, கவிதாஞ்சலி, காந்தி அஞ்சலி, தமிழ் வேந்தன், அன்பு செய்த அற்புதம் – நாமக்கல் கவிஞர். வே. ராமலிங்கம்பிள்ளை
• முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, சீர்திருத்தம், கிறித்துவின் அருள் வேட்டல், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
– திரு.வி. கல்யாணசுந்தரனார்
• யவனராணி, கடல்புறா, மலைவாசல், இராசநிலம் ஜலதீபம், இராஜபேரிகை – சாண்டில்யன்
• காந்தார்ச்சாலை, கொல்லிமலைச் செல்வி – பூவண்ணன்
• மதங்க சூளாமணி, யாழ்நூல் – சுவாமி விபுலாநந்தர்
• வியாசர் விருந்து, சக்கரவர்த்தி திருமகள், சபேசன் – இராஜாஜி
• திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி
• எழிலோவியம், குழந்தை இலக்கியம், தமிழச்சி, தொடு வானம் – வாணிதாசன்
• மலரும் உள்ளம், சிரிக்கும் பூக்கள், நேருவும் குழந்தைகளும் – அழ. வள்ளியப்பா
• கரமுண்டார் வீடு – தஞ்சை பிரகாஷ்
• காடு, பின்தொடரும் நிழலின் குரல், கன்னியாகுமரி, ஏழாவது உலகம், மண், விஷ்ணுபுரம், கொற்றவை – ஜெயமோகன்
• நெடுங்குருதி, உப பாண்டவம் – எஸ். ராமகிருஷ்ணன்
• புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு – தாரா பாரதி
• பூத்தது மானுடம், புரட்சி முழக்கம், உரை வீச்சு – சாலை இளந்திரையன்
• வாழும் வள்ளுவம், பாரதியின் அறிவியல் பார்வை – வா. செ. குழந்தைசாமி

*எந்த ஊரில் என்ன வாங்கலாம்...???*

🌹 எந்த ஊரில் என்ன வாங்கலாம்...???


🏽ஆரணி&களம்பூர் உலகதரம் வாய்ந்த அரிசி
(திமலை மாவட்டம்)
👌 🏽கோயமுத்தூர் - மோட்டார் உதிரிப் பாகங்கள்,
காட்டன்
👌 🏽திருநெல்வேலி - அல்வா
👌 🏽ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
👌 🏽கோவில்பட்டி - கடலைமிட்டாய்
👌 🏽பண்ருட்டி - பலாப்பழம்
👌 🏽மார்த்தாண்டம் - தேன்
👌 🏽பவானி - ஜமுக்காளம்
உசிலம்பட்டி - ரொட்டி
👌 🏽நாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப்
பொருட்கள்
👌 🏽பொள்ளாச்சி - தேங்காய்
👌 🏽ஐதராபாத் - முத்து, வளையல், கழுத்து
மணிகள்
👌 🏽வேதாரண்யம் - உப்பு
👌 🏽சேலம் - எவர்சில்வர், மாம்பழம்,
அலுமினியம், சேமியா
👌 🏽சாத்தூர் - காராசேவு, மிளகாய்
மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து
👌 🏽திருப்பதி - லட்டு
👌 🏽மாயவரம் - கருவாடு
👌 🏽திருப்பூர் - பனியன், ஜட்டி
👌 🏽உறையூர் - சுருட்டு
👌 🏽கும்பகோணம் - வெற்றிலை, சீவல்
👌 🏽தர்மபுரி - புளி, தர்பூசணி
👌🏽ராஜபாளையம் - நாய்
👌🏽தூத்துக்குடி - உப்பு   கருவாடு   புரோட்டா 
👌🏽ஈரோடு - மஞ்சள், துணி
👌🏽தஞ்சாவூர் - கதம்பம், தட்டு, தலையாட்டி
பொம்மை
👌🏽பெல்லாரி - வெங்காயம்
👌🏽நீலகிரி - தைலம்
👌🏽மங்களூர் - பஜ்ஜி
👌🏽கொல்கத்தா - ரசகுல்லா
👌🏽ஊட்டி - உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி சாக்லெட் 
👌🏽கல்லிடைக்குறிச்சி - அப்பளம்
👌🏽காரைக்குடி - ஓலைக்கூடை
👌🏽செட்டிநாடு - பலகாரம்
👌🏽திருபுவனம் - பட்டு
👌🏽குடியாத்தம் - நுங்கு
👌🏽கொள்ளிடம் - பிரம்பு பொருட்கள்
👌🏽ஆலங்குடி - நிலக்கடலை
👌🏽கரூர் - கொசுவலை
👌🏽திருப்பாச்சி - அரிவாள்
👌🏽காஞ்சிபுரம் - பட்டு, இட்லி
👌🏽மைசூர் - சில்க், பத்தி, சந்தனம்
👌🏽நாகப்பட்டினம் - கோலா மீன்
👌🏽திண்டுக்கல் - பூட்டு, மலைப்பழம் தலப்பா கட்டு பிரியாணி
👌🏽பத்தமடை - பாய்
👌🏽பழனி - பஞ்சாமிர்தம், விபூதி
👌🏽மணப்பாறை - முறுக்கு, மாடு
👌🏽உடன்குடி - கருப்பட்டி
👌🏽கவுந்தாம்பட்டி - வெல்லம்
👌🏽ஊத்துக்குளி - வெண்ணெய்
👌🏽கொடைக்கானல் - பேரிக்காய் சாக்லெட்
👌🏽குற்றாலம் - நெல்லிக்காய்
👌🏽செங்கோட்டை பிரானூர் - புரோட்டா, கோழி
குருமா
👌🏽சங்கரன் கோவில் - பிரியாணி
👌🏽அரியலூர் -  கொத்தமல்லி
👌🏽சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை
👌🏽கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப்
பொருட்கள்
👌🏽பாண்டிச்சேரி - ஒயின், மதுபானங்கள்
திருச்செந்தூர் - 👌🏽கருப்பட்டி
குளித்தலை - வாழைப்பழம்
👌🏽காஷ்மீர் - குங்குமப்பூ
👌🏽ஆம்பூர் - பிரியாணி
👌🏽ஒட்டன்சத்திரம் - முருங்கைக்காய், தக்காளி
👌🏽ஓசூர் - ரோஜா
👌🏽நாமக்கல் - முட்டை
👌🏽பல்லடம் - கோழி
👌🏽உடுப்பி - பொங்கல்
👌🏽குன்னூர் - கேரட்
👌🏽பாலக்காடு - பலாப்பழம்...
👌🏽 ஆற்காடு - மக்கன்பீடா
👌🏽 வாணியம்பாடி - தேனீர.

👍

*உங்களுக்கு தெரியுமா...!!*

_*உங்களுக்கு தெரியுமா...!!*_ 


கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்

மனிதன் இறந்து போனதும் முதலில் 
செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் - ஈரிதழ்சிட்டு.

வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம்பேசியுள்ளார்.
அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள்11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். 

ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ.

காரல் மார்க்ஸ் தனக்கு 
பிடிக்காத பக்கங்களை எல்லாம் புத்தகத்தில் இருந்து
கிழித்துவிடுவாராம். தன் நூலகத்தில் கிழியாத பக்கங்களை உடைய புத்தகம் எதுவும் கிடையாது. தாஸ் காப்பிட்டல் நூல் எழுத அவருக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.

சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.

விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.

யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.

நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.

டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்

மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.

எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு
எடையை தூக்கும்.

உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

தேசியக்கொடியை முதன்முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க். ஆண்டு 1219.

கத்தரிக்காயின் தாயகம் இந்தியாவே.

வெண்மை என்பது நிறம் இல்லை. அது ஏழு வண்ணங்களின் கலவையே.

உலகில் 44 நாடுகளுக்கு கடற்கரை இல்லை.

இந்தியாவில் தமிழில்தான் ‘பைபிள்’ முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

இறாலின் இதயம் தலையில் இருக்கிறது.

Friday, 11 June 2021

*நிதி ஆணையம்*

*நிதி ஆணையம்*

 
* மத்திய அரசின் வரிவருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிப்பது. 
* மாநிலங்களின் தேவைகளுக்கு நிதி ஏற்ப பகிர்ந்து அளிக்கப்படும். 
* 13வது நிதி ஆணையம் மத்திய வரி வருவாயில் 32% த்தை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க பரிந்துரை செய்தது. 
* தற்போது இருக்கும் 15வது நிதி ஆணையம் 42% பகிர்ந்தளிக்க பரிந்துரை. 
* 1951ல் முதல் நிதி ஆணையம் அமைக்கப்பட்டது. 
* நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் அமையும். 
* நிதி ஆணையம் அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கும். குடியரசுத் தலைவர் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பார்.‌
* விதி எண் 280 - நிதி ஆணையம் பற்றி கூறுகிறது. 
* விதி எண் 281 - நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் பற்றி கூறுகிறது. 

*இதுவரை அமைக்கப்பட்ட நிதி ஆணையங்கள்* 
ஆணையம் -> தலைவர் -> ஆண்டு -> அறிக்கை அமல் படுத்த பட்ட காலம். 
1. என்.சி. நியோக்கி -> 1951 -> 1952 - 57. 
2. கே. சந்தானம் -> 1956 -> 1957 - 62. 
3. ஏ.கே சாந்தா -> 1960 -> 1962 - 66. 
4. பி.வி இராஜமன்னார் -> 1964 -> 1966 - 69. 
5. மகாவீர் தியாகி -> 1969 -> 1969 - 74. 
6. பிரம்மானந்த ரெட்டி -> 1972 -> 1974 - 79. 
7. ஜே.எம். சேலத் - 1977 -> 1979 - 84. 
8. வொய்.பி. சவான் -> 1982 -> 1984 - 89. 
9. என்.கே.பி. சால்வே -> 1987 -> 1989 - 95. 
10. கே.சி. பந்த் -> 1992 -> 1995 - 2000. 
11. ஏ.எம். குஸ்ரோ -> 1998 -> 2000 - 05. 
12. டாக்டர் சி.ரங்கராஜன் -> 2002 -> 2005 - 10. 
13. டாக்டர் விஜய் கேல்கர் -> 2007 -> 2010 - 15. 
14. ஓய்.வி. ரெட்டி -> 2013 -> 2015 - 2020. 
15. என்.கே. சிங் -> 2018 -> 2020 - 2025. 

*முக்கியமான கமிட்டிகள்* 

1. சி. ரெங்கராஜன் கமிட்டி - வாணிப செழுக்கு சமநிலை குறித்து அமைக்கப்பட்ட கமிட்டி. 
2. பகவதி கமிட்டி - வேலைவாய்ப்பின்மை குறித்து அமைக்கப்பட்டது.
3. நரசிம்மன் கமிட்டி - வங்கி சீரமைப்பு. 
4. முதலியார் கமிட்டி - ஏற்றுமதி மேம்மபாடு குறித்து அமைக்கப்பட்டது. 
5. என்.டி திவாரி கமிட்டி - நலிவடைந்த தொழிற்சாலைகள் சீரமைப்பு கமிட்டி.‌
6. லக்டவாலா கமிட்டி - வறுமைக் கோடு நிர்ணயம் தொடர்பாக அமைக்கப்பட்டது. 

*வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் & அமைப்புக்கள்* 
1. ஐசிஐசிஐ (Industrial Credit and Investment Corporation of India) (1955 - வங்கியாக 03 மே 2002ல் மாற்றம். 
2. ஐடிபிஐ (Industrial Development Bank of India) - 1964 - தொழில்துறை வங்கி. நிதி நிறுவனங்களுக்கு மேலான நிறுவனம். 11/10/2004ல் வங்கியாக மாற்றம். 
3. ஐஆர்பிஐ (Industrial Reconstruction Bank of India) - 1985 - நலிவடைந்த, மூடப்பட்ட தொழில் நிறுவனங்களை மறுகட்டமைப்பு செய்து புத்துயிர் ஊட்ட வேண்டி தொடங்கப்பட்டது. 
4. சிட்பி (Small Industries Development Bank of India) - 1978 - சிறு தொழில் துறையை மேம்படுத்த அமைக்கப்பட்ட வங்கி.‌
5. ஐஎப்சிஐ (Industrial Finance Corporation of India) - 1948 - தொழில் நிறுவனங்களுக்கு மத்திய மற்றும் நீண்ட கால கடன் வழங்குவது. 1993ல் 
6. நபார்ட் (National Bank for Agriculture and Rural Development) - 12 ஜூலை 1982 - விவசாயம் சார்ந்த வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மேலாண்மை நிறுவனம். 
7. எக்ஸிம் பேங்க் (Export and Import Bank of India) 01 ஜனவரி 1982 - ஏற்றுமதி துறை சார்ந்த வங்கி. நிதி நிறுவனங்களுக்கு மேலாண்மை வங்கி.‌ ஏற்றுமதி தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு சலுகை மற்றும் கடன்கள் வழங்குவது.
8. என்ஹெச்பி (National Housing Bank) - 1988 - வீட்டு வசதி சார்ந்த வங்கி. வீட்டு வசதி சார்ந்த நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்குகிறது. 
9. எல்ஐசி (Life Insurance Corporation of India) - 01 செப்டம்பர் 1956 - தலைமையகம் மும்பை - ஆயுள் காப்பீடு சார்ந்த திட்டங்கள். (தற்போதைய தலைவர் எம்.ஆர்.குமார்)
10. ஜிஐசி (General Insurance Corporation) - 01 ஜனவரி 1973 - தேசிய காப்பீட்டு நிறுவனம் -கொல்கத்தா. நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம் - மும்பை. ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம் - டெல்லி.  யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் - சென்னை. 
11. ஐஆர்டிஏ (Insurance Regularly and Development Authority) - ஏப்ரல் 2000 - காப்பீட்டு நிறுவனங்களுக்கு மேலாண்மை நிறுவனம். 
12. யூடிஐ (Unit Trust of India) - 1964 - 2003 பிப்ரவரியில் யுடிஐ 1, யூடிஐ 2 ஆக பிரிவு. யூடிஐ 2ஐ எஸ்பிஐ, எல்ஐசி ஆகியவை நிர்வகிக்கிறது. 
* காப்பிட்டுச் சட்டம் - 1938.
* இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனச் சட்டம் - 1956.
* பொது காப்பீட்டு நிறுவனசீ சட்டம் - 1972. 
13. செபி (Security's and Exchange Board of India) - 30 ஜனவரி 1990ல் சட்டப்பூர்வ அமைப்பாக தொடங்கப்பட்டது. தலைமையகம் மும்பை. 
* இந்தியாவின் மிகப் பழமையான பங்குச்சந்தை - மும்பை பங்குச்சந்தை. 1875. (காளை - ஏறுமுகம். கரடி - பங்கு இறங்கு முகம்)

Thursday, 10 June 2021

*NCERT Books*

*NCERT BOOKS*


Dear All,
Almost all NCERT books are uploaded from Class 1 to Class 12 (all streams)
It will be helpful to the underprivileged who cannot buy books on their own in a remote areas.

*தேசிய டிஜிட்டல் நூலகம்*

*மாணவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.


இதன் லிங்க் https://ndl.iitkgp.ac.in. இதில் பதிவு செய்து ஆரம்ப பாடம் முதல் சட்டம், அறிவியல், இலக்கியம், பொறியியல் & மருத்துவ மாணவர்கள் பயன் பெறலாம். மேலும் இந்த நூலகத்தில் 4.60 கோடி புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை சென்றடையும் வரை அதிகம் பகிரவும்.*

Wednesday, 9 June 2021

*தந்த்ரா கூறுகிறது*

💖💖💖💖💖தந்த்ரா கூறுகிறது💖💖💖💖💖


         நீங்கள்  ஒரு பெண்ணிடம், அன்பு  செலுத்தும்பொழுது, உங்களிடம்  மகிழ்ச்சியும் ஒரு புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது. 💖

 இந்த  உணர்வுகளுக்கும், அந்தப் பெண்ணுக்கும் எந்த  சம்மந்தமும் கிடையாது.  💖

அவள் வெளியே ஒரு  கருவியாக மட்டும்  செயல்படுகிறாள். 💖

ஆனால்,  இந்த  உணர்வுகள்  உங்கள்  உள்ளே நிகழுகிறது.💖

 நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். 💖

 இதனால்,  அவள் எந்த ஆனந்தத்தையும் அடைவது இல்லை.💖

 அவளும், உங்களைப் போல உங்கள்  மீது  அன்பு கொண்டிருந்தாலன்றி, அவளிடம்  எந்த  மாற்றமும்  ஏற்பட வழியில்லை.  💖

ஆக, உணர்வுகள், ஆனந்தம் என்பவைகள் ஒருவரின் தனிப்பட்ட அனுபவமாகிறது. 💖

உங்களிடம் ஏற்படும் மாறுதலை, அவள் கவனிக்கலாம். அதைப்போல அவளிடம் ஏற்படும்  மாறுதலை நீங்கள்  கவனிக்கலாம்.💖 

ஆனால்,  அவளால் அல்லது  உங்களால் அந்த அனுபவத்தில்  கலந்து  கொள்ள முடியாது.  💖

அதைப்போல, நீங்கள்  இருவருமே, ஒரே நேரத்தில்  அந்த உச்ச இன்பத்தை அடைந்தாலும்,  அந்த அனுபவம் தனித்தனியானதே. 💖

நீங்கள்  இருவரும் வெறும் பார்வையாளராகவே இருக்கலாம். பங்கு கொள்ளுபவராக அல்ல. 💖

இன்னும்  கொஞ்சம்  சுருக்கமாகச்  சொன்னால்,  ஒவ்வொருவருடைய உச்சக்கட்ட  இன்பம் என்பது  'சுய இன்பம் ' ( Masterbation) காண்பதையே ஒக்கும்.💖

 இதற்கு, பெண்ணுக்கு ஆணும்,  ஆணுக்கு பெண்ணும்  உதவி செய்பவர்களாக இருக்கிறார்கள், ஒரு  தூண்டுதலாக இருக்கிறார்கள் 💖 அவ்வளவுதான்.💖

          அடுத்ததாக, தந்த்ரா சொல்லிய முக்கிய கருத்துகளில் ஒன்று  என்னவென்றால், ஒருவரது உச்ச இன்பத்திற்கும், அவரது பால் உணர்வு அங்கத்திற்கும் சம்மந்தமே இல்லை💖. 

அது உங்கள் மூளையில்  நடக்கும்  நிகழ்ச்சி.💖

 பால் உணர்வு அங்கம் என்பது ஒரு ஆரம்பத் தூண்டுதல். 💖

உங்கள்  மூளைதான் பிரதானம். 💖

பால் உணர்வு அங்கம் என்பது  ஒரு கருவிதான். இதை நவீன விஞ்ஞானம்  ஒத்துக்கொள்கிறது.💖

         டெகல்டோ என்ற மனநல வல்லுனரைப் பற்றி, நீங்கள்  கேள்விப்பட்டிருப்பீர்கள்.  💖

அவர் ஒரு சிறிய  மின்சார கருவியைச் செய்து,  எட்டி நின்று இயங்கும்படி (Remote control )  அமைத்திருந்தார்.💖

 அதில் ஒரு  பட்டனை அமுக்கி,  உங்களிடம்  பால் உணர்வைத் தூண்ட முடியும்.  💖

அதில்  உச்ச இன்பத்தை நீங்கள்  அடைய முடியும்.  💖

அதற்கும், உங்கள்  பால் உணர்வு  அங்கத்திற்கும்  எந்த  சம்பந்தமும் கிடையாது. 💖 அது, நேராக உங்கள்  மூளையில்  வேலை  செய்கிறது. 💖

 அங்கு,  அது  உங்களுடைய  பால் உணர்வு  சக்தியைத் தூண்டி  விடுகிறது. 💖

 அதைப் போல, இன்னொரு பட்டனை அமுக்கினால்,  நீங்கள்  மிகக் கோபம்  அடைவீர்கள்.   💖

அதைப் போல வேறு ஒரு  பட்டனை அமுக்கினால், , நீங்கள்  சோர்வாக உட்கார்ந்து  விடுவீர்கள். 💖

 ஆக, உங்கள்  உணர்வுகளை, இந்த  பட்டன்கள், நிர்ணயிக்கின்றன.💖

 இதைப் போலத்தான் பெண்ணும், மற்ற மனிதர்களும், பட்டனாக இருக்கிறார்கள்!  இதை மீண்டும்  சிந்தித்துப் புரிந்து  கொள்ளுங்கள். 💖

         இந்தப் பரிசோதனையை, டெல்காடோ, எலிகளை வைத்து  ஆராய்ச்சி  செய்யும் பொழுது,  மிகவும்  ஆச்சரியம்  அடைந்தார்.💖  

ஆகவே, நவீன விஞ்ஞானம்  சொல்வதற்கும், தந்த்ரா சொல்வதற்கும் எந்தவித வித்தியாசமும்  இல்லை. 💖

 இன்பம்  மற்றும்  மகிழ்ச்சி  என்பது  உங்கள் உள்ளே  நிகழ்கிறது. 💖

 முதலில்,  அதற்கும் ஆணுக்கும்  அல்லது  பெண்ணுக்கும்  சம்மந்தம் இல்லை.💖

 அடுத்தது, அதற்கும் பால் உணர்வு  சக்திக்கும் சம்மந்தம் இல்லை.  💖

 ஒரு  பெண்,  உங்களுடைய  பால் உணர்வு  சக்தியை தூண்டும்  கருவியாக இருக்கிறாள்.💖

 அந்தத் தூண்டப்பட்ட சக்தி, உங்கள்  மூளையின் ஒரு  பாகத்தில்  உள்ள  சக்தியை எழுப்புகிறது.💖

 அடுத்து,  அந்த உச்சக்கட்ட இன்பமும்  அந்த மூளையின்  எழுப்பப்பட்டப் பகுதியில்தான் நிகழ்கிறது.  💖

உங்கள்  ஆண்குறியிலோ அல்லது  பெண்குறியிலோ அல்ல. 💖

ஆனால், அவைகள் மிகவும்  சக்திவாய்ந்த  தூண்டுகோலாக இருக்கின்றன.💖

💖💖💖💖💖ஓஷோ 💖💖💖💖💖

Thirukkural GK / திருக்குறள் பற்றிய தகவல்கள்

Thirukkural GK / திருக்குறள் பற்றிய தகவல்கள்  👁‍🗨 திருக்குறள் முதன் முதலில் அச்சிடப் பெற்ற ஆண்டு – 1812  👁‍🗨  திருக்குறளின் ...