👆 *இன்று உலக சுற்றுச்சூழல் தினம்*
*ஏன் ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது?*
இயற்கையை பாதுகாக்க வேண்டும் மற்றும் சுற்றுப்புற சூழலை பேன வேண்டும் என்ற விழிப்புணா்வை உலக மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற உயாிய நோக்கத்தோடு உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் உலக அளவில் இருக்கும் சுகாதாரம் சாா்ந்த பிரச்சினைகளைப் பற்றி விரிவாக பேசி, அவற்றிற்கான தீா்வுகளைக் கண்டுபிடிப்பதற்கும் உலக சுற்றுச்சூழல் தினம் வழிவகை செய்கிறது.
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5 ஆம் நாள் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் முக்கிய நோக்கம் என்னவென்றால், சுற்றுப்புற சூழலைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணா்வை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்வதாகும்.
இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு தனி மனிதா்கள், தன்னாா்வ நிறுவனங்கள், பிரபலங்கள், மற்றும் எல்லா மக்கள் சமூகங்கள் ஆகிய அனைவரும் உலக சுற்றுப்புற சூழலை பேணுவதற்கான முழுமையான செயல்பாட்டில் இறங்க வேண்டும் என்று இந்த நாள் அழைப்பு விடுக்கிறது. இப்போது இருக்கும் இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, மிக எளிதாக பெரும்பான்மையான மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிந்தது.
No comments:
Post a Comment