*🌹உலக முதியோர் கொடுமை பற்றிய விழிப்புணர்வு நாள் World Elder Abuse Awareness Day(June15)🌹*
முதியோர் வன்கொடுமை ஆய்வு குறித்து, 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' அமைப்பின், ஆய்வறிக்கை கூறுவதாவது 1947ல் நாடு முழுவதும், 23 சதவீதமாக இருந்த முதியோருக்கு எதிரான கொடுமைகள், தற்போது, 50 சதவீதமாக அதிகரித்து விட்டது
.டில்லியில், 22 சதவீதம் என, குறைவாகவும், பெங்களூருவில், 75 சதவீதம் என, அதிகமாகவும் கொடுமைகள் நடக்கின்றன. சென்னையில், 53 சதவீதமாக உள்ளது.
சென்னையில், மருமகளால், 37 சதவீதமும், மகன்களால், 56 சதவீதமும் கொடுமைகள் நடந்ததாக பதிவுகள் இருந்தன.தற்போது, மகன்களைக் காட்டிலும், மருமகள்கள் மிஞ்சிவிட்டனர்.
மருமகள்களால் ஏற்படும் கொடுமை, 53 சதவீதமாக உயர்ந்ததோடு, மகன்களால் ஏற்படும் கொடுமைகள், 38 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் அவ்வாய்வறிக்கை கூறுகிறது.
உலகமெங்கிலும் உள்ள வயோதிக மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தான விழிப்புணர்வை உருவாக்குவதே இன்றைய நாளின் குறிக்கோளாகும் .
No comments:
Post a Comment