Sunday, 29 January 2017

*பொது அறிவு*

இடஒதுக்கீடு... ரிசர்வேஷன்.. இந்த வார்த்தையை யார் எங்கு கேட்டாலும் அது என்னவோ SC/ST மக்களுக்கானது, அதை நீக்க வேண்டும், தூக்கவேண்டும், ஒழிக்கவேண்டும் என்ற தவறான கண்ணோட்டம் சமூகத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது...

SC/ST மட்டும்தான் இங்கே இடஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனரா.. இல்லை...

மொத்தமுள்ள 100% இடங்களில், தமிழ்நாட்டில்..
BC - 30%
MBC - 20%
SC - 18%
ST - 1%
மீதி - 31% பொது போட்டி (எல்லா சமூகத்துக்கும் பொதுவானது)

மத்திய அரசில்,

OBC (BC+MBC) - 27%
SC - 15%
ST - 7.5%
மீதி - 50.5% பொது போட்டி (எல்லா சமூகத்துக்கும் பொதுவானது)

ஆக, இடஒதுக்கீட்டிற்கு எதிராக யார் எங்கே பேசினாலும் முதலில் அதற்கு எதிர் குரல் கொடுக்க வேண்டியவர்கள் சுமார் 50% இடங்களை பெரும் பிற்படுத்தப்பட்ட/ மிக பிற்படுத்தப்பட்ட மக்கள் தான்....

ஆனால், இந்த சமூகத்தில் இடஒதுக்கீடு என்பதை ஏதோ SC/ST மக்கள் மட்டுமே அனுபவித்து, சுக போக வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஒரு மாய தோற்றம் உருவாக்கப்பட்டுவிட்டது.

SC/ST மக்கள் பெறுவது என்னவோ வெறும் 19% இடங்கள் தான்....

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...