Thursday, 26 January 2017

உங்களது ஹால் டிக்கெட் தொலைந்து விட்டதா?
-----------------------------------------------------

TNPSC தேர்வு எழுதும் சில பேர், தேர்வு முடிவும் வரும் பொழுது தங்கள் தேர்வு அனுமதி சீட்டினைத்  தொலைத்து விட்டு பதிவு எண் (Reg. No) தெரியாமல், மதிப்பெண் மற்றும் நிலைப் பட்டியலை (Mark and Rank) பார்க்க முடியாமல் அவதிப்படுவது அவ்வப்போது   நடந்து வருகிறது.

பதிவு எண் இல்லை என்றால், கண்டிப்பாக தேர்வு முடிவினை பார்க்க இயலாது.  இதனைத் தடுக்க கீழ்க்கண்ட மூன்று வழிகள் உள்ளன.

1. எப்பொழுதும் உங்கள்  விண்ணப்பத்தை மற்றும் ஹால் டிக்கெட்டை உங்கள் மின் அஞ்சல் (Mail), அலை பேசியில் (Mobile)  அல்லது கணினியில் (Computer) சேமித்து வையுங்கள். பிரிண்ட் எடுத்து வைத்து இருக்கும் ஹால் டிக்கெட் காலப் போக்கில் தொலைந்து விட வாய்ப்பு உண்டு.

2. உங்களது பதிவு எண்ணை அலைபேசி யில் குறுந்செய்தி (SMS) மூலமாக சேமித்து வைக்கலாம் அல்லது போன் நம்பரைப் போன்று பதிவு செய்து வைக்கலாம். இருப்பினும் மின்-அஞ்சலில் வைப்பதே சிறப்பு, ஏன் என்றால் அலைபேசி தொலைந்து விட வாய்ப்புண்டு.

3. உங்களது வினாத் தாளை பத்திரமாக வைக்கவும். அதில் உங்களது பதிவு எண்ணை தேர்வு சமயத்தில் நீங்கள் எழுதி இருப்பீர்கள், அதிலிருந்து மீட்டுக் கொள்ளலாம்.

இம் மூன்றிற்கும் வழி இல்லாத பட்சத்தில், உங்களது பதிவு எண் மற்றும் விண்ணப்ப எண்னைக் கண்டறிய தற்போது TNPSC உதவுகிறது.

எப்படி என்றால், உங்கள் நிரந்தர பதிவு கணக்கில் (One Time Registration Account)  உள்ளீடு (Login) செய்து பார்த்தால் , அதில் VIEW APPLICATION STATUS என்று இருக்கும். அதனுள் சென்று பார்த்தால், நீங்கள் எழுதிய ஒவ்வொரு தேர்விற்கு உரிய தகவல்கள், அதாவது,

i) தேர்வின் பெயர்,
ii) தேர்விற்கு விண்ணப்பித்த தேதி,
iii) விண்ணப்ப எண்,
iv) தேர்வு பதிவு எண்

போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம். (பார்க்க படம்).

நன்றி.

No comments:

Post a Comment

TN Ration Card Application Apply/Rectify/Download/Changes twice in a year - ரேஷன் அட்டையில் இனி வருடத்துக்கு 2 முறை மட்டுமே திருத்தம் செய்ய முடியும்

🔵🔴 *ரேஷன் அட்டையில் இனி வருடத்துக்கு 2 முறை மட்டுமே திருத்தம் செய்ய முடியும்* 1.பெயர் சேர்த்தல் 2.பெயர் நீக்கம் 3.முகவரி மாற்ற...