Thursday, 12 January 2017

History of Maraimalai Adigal.
☆ மறைமலை அடிகள் ☆
ஆசிரியர் குறிப்பு:
🌹 பிறப்பு : ஜீலை 15, 1876
🌹 இயற்பெயர் : சாமி வேதாசலம்
🌹 ஊர் : நாகை மாவட்டம் காடம்பாடி
🌹 பெற்றோர் : சொக்கநாதப் பிள்ளை, சின்னம்மா அம்மையார்
🌹 மறைவு : செப்டம்பர் 15, 1950
பெயர் காரணம்:
🔯 தனித்தமிழ்ப்பற்று காரணமாக தம் பெயரை மறைமலை என்று மாற்றிக்கொண்டார்.
🔯 வேதம் என்றால் மறை, அசலம் என்றால் மலை என்பது பொருளாகும்.
கல்வி:
🔆 நாகையில் உள்ள வெசுலியன் தொண்டு நிறுவனக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவம் வரை படித்தார்.
🔆 தந்தையின் மறைவால் பள்ளிப்படிப்பை இவரால் தொடர முடியவில்லை.
🔆 எனவே, நாகையில் தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார்.
🔆 சைவ சித்தாந்த சண்டமாருதம் என்று புகழப்பட்ட சோமசுந்தர நாயக்கர் அவர்களிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.
பணி:
🌠 சென்னை கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார்.
வேறு பெயர்கள்:
🌠 தனித்தமிழ் மலை
🌠 தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
🌠 தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை
🌠 தன்மான இயக்கத்தின் முன்னோடி
🌠 தமிழ் கால ஆராய்ச்சியின் முன்னோடி
புனைப்பெயர்:
🎯 முருகவேள்
சிறப்பு:
🎯 தமிழ், ஆங்கிலம், வடமொழி என மும்மொழியிலும் புலமை பெற்றவர்.
🎯 பல்லாவரத்தில் இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி 22.04.1912-இல் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் தொடங்கினார், தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்தவர்.
🎯 இவர் சைவ சித்தாந்த மகா சமாஜம், சமரச சன்மார்க்க சங்கம் போன்றவற்றை ஏற்படுத்தினார்.
🎯 வடமொழியின் துணையின்றித் தமிழால் எதையும் எழுத முடியும் பேச முடியும் உணர்த்த முடியும் என்பதை நிலைநாட்டியவர்.
🎯 இவருடைய தனித்தமிழ் பார்வை புதிய தமிழ் சொற்களைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தும் ஆர்வத்தை அறிஞர்களிடையே ஏற்படுத்தியது.
🎯 இவரைப் பின் பற்றி இளவழகர், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், டாக்டர். வ. சுப. மாணிக்கம் போன்றோர் நூல்களைப் படைத்தனர்.
🎯 இவர் சைவ சித்தாந்த மகா சமாஜம், சமரச சன்மார்க்க சங்கம் போன்றவற்றை ஏற்படுத்தினார்.

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...