Saturday, 7 January 2017

History of Methaa.
உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா!!!

ஆசிரியர் குறிப்பு

🌟 பிறப்பு : செப்டம்பர் 5, 1945

🌟 பெயர் : முகமது மேத்தா

🌟 ஊர் : பெரியகுளத்தில் பிறந்தார்

கல்வி

🌟 பெரியகுளம் வி.நி.கழக உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.

🌟 மதுரை தியாகராசர் கலைக்கல்லுரியில் பயின்றார்.

பணி

🌟 இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

🌟 தமிழகக் கவிஞர் பேரவையின் தலைவராகப் பணியாற்றியவர்.

🌟 இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.

🌟 தமிழர் ஐக்கிய முன்னேற்றக் கழகத் தலைவர்.

சிறப்பு

🎀 சமூகச் சிக்கல்களை மையமிட்டு எழுதும் தரமான புதுக்கவிஞர்.

🎀 உள்ளடக்கம், வடிவம் உணர்த்தும் முறையில் புதுமை, கற்பனை, நளினநடை, நலமான சொல்லாட்சி, ஆழமான மன உணர்வுகள் போன்ற பண்புகள் இவரது கவிதைகளின் தனித்துவம்.

🎀 தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும்.

🎀 மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பல நூல்களை வெளியிட்டுள்ளார்.

🎀நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 300க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.

🎀 இரண்டு படங்களுக்கு திரை உரையாடல் எழுதியுள்ளார்.

விருதுகள்

🏆 அவருடைய நூல்களுள் ஊர்வலம் தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும்.

🏆 இவரது சோழ நிலா என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும்.

🏆 ஊர்வலம் கவிதைத் தொகுதி 1977 ஆம் ஆண்டில் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.

🏆 1986 ஆம் ஆண்டு சிறந்த கவிஞருக்கான தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றுள்ளார்.

🏆 1998 நவம்பர் கலைவித்தகர்களுக்கான கண்ணதாசன் விருது பெற்றுள்ளார்.

கவிதை நூல்கள்

📔 கண்ணீர்ப் பூக்கள்

📔 மனச் சிறகு (1978)

📔 ஊர்வலம்

📔 திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்

📔 நந்தவன நாட்கள்

📔 வெளிச்சம் வெளியே இல்லை

📔 ஆகாயத்துக்கு அடுத்த வீடு

📔 மு.மேத்தா கவிதைகள்

📔 ஒற்றைத் தீக்குச்சி

📔 என் பிள்ளைத் தமிழ்

📔 புதுக்கவிதைப் போராட்டம் (2004)

📔 பித்தன்

கட்டுரை நூல்கள்

📗 திறந்த புத்தகம்

📗 நாவல்கள்

📗 சோழ நிலா

சிறுகதை தொகுப்புகள்

📗 கிழித்த கோடு

📗 மு.மேத்தா சிறுகதைகள்

📗 பக்கம் பார்த்து பேசுகிறேன் (2008)

இவரின் கவிதை வரிகள்

வாழ்க்கை

பெட்டி படுக்கைகளை

சுமந்தபடி

ஒரு

பிரயாணம்

எப்போது சுமைகளை

இரக்கி வைக்கிரோமோ

அப்போது

சுற்றி இருப்பவர்கள்

நம்மை

சுமக்க தொடங்குகிறார்கள்

-மு. மேத்தா

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...