Saturday, 7 January 2017

சடாகோ சசாகி

🐦 ஜப்பானிய சிறுமி சடாகோ சசாகி 1943ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார்.

🐦 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோசிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதால், குருதிப்புற்று நோயால் பாதிக்கப்பட்டாள்.

🐦 சசாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது அவளுடைய தோழி ஒரு தங்கநிற தாளினை சதுரமாக வெட்டி, அதை காகித கொக்காக மடித்து, யாரேனும் ஆயிரம் கொக்குகளை மடித்தால் அவரின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார் எனும் பண்டைய ஜப்பானிய கதையின் நம்பிக்கையை கூறினாள்.

🐦 அதற்கேற்ப அவளும் 1000 கொக்குகளை மடிக்கத் தொடங்கினாள். இறப்பதற்கு முன்புவரை 644 கொக்குகளை மடித்திருந்தாள், பின் எஞ்சிய கொக்குகள் அவளின் நண்பர்களால் மடிக்கப்பட்டு அவளின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது.

🐦 ஆயிரம் கொக்குகளின் கதைக்காக இன்றுவரை அறியப்படும் சசாகி தன்னுடைய 12வது வயதில் (1955) உயிரிழந்தாள்.

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...